Aasai
Aasai Aasai | Ramanichandran Novels Free Download |ஆசை…ஆசை…ஆசை… என்ற ரமணிசந்திரனின் நாவலினை free-ஆக Pdf-ல் Download செய்வதற்கான பக்கத்தில் உள்ளீர்கள். நாவலின்
சில பக்கங்களை இந்த page-ல் இணைத்துள்ளோம். நீங்கள் படித்து பார்க்க உபயோகப்படும்.
ஆசை…ஆசை…ஆசை… புத்தகத்தின் Tamil-ல் Free-ஆக Pdf வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDF tamil இணையதளத்தின் Email
Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.
Aasai Aasai Aasai | Ramanichandran Novels Free Download
Name of the Book : Aasai Aasai Aasai / ஆசை-ஆசை-ஆசை
Writer : Ramanichandran
/ ரமணிசந்திரன்
Genre : Fiction
/ தமிழ் நாவல்
Published on : 1996
Rating : 4.1
![]() |
Aasai Aasai Aasai - Ramanichandran Novels Free Download 1 |
Aasai Aasai Aasai | Ramanichandran Novels Free Download
மதிவதனியுடைய மாமா பெற்ற செல்வங்களுள் மூத்தவள் மோகனா. அடுத்த இருவரும் பையன்கள்
என்பதால், ஒரே பெண்ணும்கூட! ‘பார்பி' மாதிரி
ஒல்லியாக இல்லாமல்,
பழைய செலுலாயிட் பொம்மை போலச்
சற்று குளுகுளுவென்றிருப்பாள். ஆனால், அதுவே அழகாகத்தான் இருக்கும்!
சுந்தரிக்கு மகள் என்றால் உயிர்!
ஒரு சில வயதுதான் மூத்தவள் என்றாலும்,
குடும்பத்தின் முதல் அடுத்த தலைமுறை
என்பதால், எல்லோருக்குமே மோகனா அருமைதான்.
எல்லோருக்குமே அருமை எனும்போது பெற்றவளுக்கு எப்படி இருக்கும்?
எனவேதான், அவளைப்
பிரிவது, அத்தைக்கு
வேதனையாக இருக்கும்
என்று, ஆறுதல்
அளிப்பதற்காக,
மதிவதனி தன் அத்தையம்மாவைத் தேடியது!
மதிவதனி தன் அத்தையம்மாவைத் தேடியது!
ஆனால், கண்களில்
நீர்த் திரையிடும் ஏக்கத்துக்குப் பதிலாக, அத்தையின் முகத்தில்
காணப்பட்ட பாவம்,
அவளைக் குழப்பியது
எனலாம்! அவளிடம்
கோப உணர்ச்சியைக் கூட. மதிவதனியால் புரிந்து கொள்ள முடியும் போல, இருந்தது!
என் செல்ல மகளை, என்னை விட்டுப் பிரித்துக் கொண்டு போய் விட்டானே,
இன்று வந்த இந்த மருமகன் என்று எண்ணினாள் என்று வைத்துக்
கொள்ளலாம்!
அப்படி எண்ணுவது
மடத்தனமே என்றாலும்!
அப்படியானால் என்ன? வருத்தம் இல்லை, கோபம் இல்லை. என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைந்தது என்ற மகிழ்ச்சியும் இல்லை! பின்னே...
சட்டென ஏதோ புரிந்தாற்போல இருந்தது அவளுக்கு!
அத்தையின் முகத்தில்
இருந்து, பந்தயங்கள் தொடங்கும்போது, அதில் கலந்து கொள்ளும்
வீரர்களின் முகத்தில் காணப்படுவது!
ஜெயிப்போம் என்கிற நம்பிக்கையோடு, முழுக் கவனமும், அதே சமயம் பரபரப்பும்! தன்னால் முடியும் என்கிற
தன்னம்பிக்கை இருக்கும் போதும், போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய
அதே சிந்தனையும், வெற்றி பெற வேண்டும் என்ற தவிப்பும்!
இப்போது, மதிக்குத்
தெளிவாகப் புரிந்து
விட்டது! முகம்
மலர்ந்தும் போயிற்று போட்டியில் இருப்பது, அத்தையல்ல! அவளுடைய
ஆசை மகள்!
வாழ்க்கைப் பந்தயத்தில், மோகனா முதல்
அடி எடுத்து
வைத்து விட்டாள்.
கடைசி வரை அவள் நல்ல பேர் வாங்க வேண்டுமே என்ற தவிப்பு! பெற்ற மகளுக்குக் கற்றுக் கொடுத்ததையெல்லாம், அவள் சரிவரப்
பின்பற்றி, வாழ்வில்
வெற்றியும் மகிழ்ச்சியும் அடைய வேண்டுமே
என்கிற ஆதங்கம்!
இதுவும் இயல்புதான்! ஆனால், மாமியார்,
நாத்தனார் என்று மோகனாவுடைய
புகுந்த வீட்டு உறவினர் எல்லோருமே மிகவும் நல்லவர் களாக இருக்கும்போது, அத்தைக்கு இந்தக் கவலை, அடியோடு அனாவசியம்!
புகுந்த வீட்டு உறவினர் எல்லோருமே மிகவும் நல்லவர் களாக இருக்கும்போது, அத்தைக்கு இந்தக் கவலை, அடியோடு அனாவசியம்!
அத்தையின் அருகில்
சென்று, அவளுக்கு
நம்பிக்கையூட்டும் விதமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று மதிவதனி
அடியெடுத்து வைத்தபோது மோகனாவுடைய நாத்தனார்
அருணா அவளிடம்
பேச வந்தாள்.
![]() |
Aasai Aasai Aasai - Ramanichandran Novels Free Download 2 |
வதனியின் கையை ஆசையாகப் பற்றி, ''மதிவதனி,
இந்த குட்டிப்
பூங்கொத்து எல்லாம்
உன் தயாரிப்பாமே! வெறும் மல்லிகைப்
பூவை வைத்து,
கைக்கு அடக்கமா இப்படி ஒரு பொக்கே
செய்யலாம் என்று, உனக்கு எப்படி ஐடியா தோன்றிற்று என்று, எனக்கும்
அம்மாவுக்கும் ஒரே அதிசயம்! மிகவும்
அழகாக, கூடவே வாசமாகவும் இருக்கிறது! கையை விட்டுக் கீழே வைக்கவே மனமில்லை!" என்று வெகுவாகப் பாராட்டினாள்! “இந்த ஐடியா எப்படி வந்தது?"
எவ்வளவு பிரியமாகப் பேசுகிறாள்! மோகனா நிஜமாகவே அதிருஷ்டக்காரிதான் என்று எண்ணியபடி,
“தாங்க்ஸ், அக்கா!'' என்றாள் மதிவதனி மகிழ்ச்சியோடு! இந்த ஐடியா எப்படி வந்தது என்பதும்
அவளுக்கு நன்றாகவே
நினைவிருந்தது! அவளும் ஒரு தோழியும்
சேர்ந்து, இந்த அலங்கார மலர்க்கொத்து விற்பனையைத் தொடங்கிய புதிதில்
வந்த வாடிக்கை
அது!
பைன் ஆர்ட்சில்
அவளோடு சேர்ந்து
படித்த பெண் ஒருத்தியுடைய தந்ைத, மிகப்
பெரிய அளவில்
ஒரு துணிக்கடையைத் தொடங்கினார்! மகளின் சிபாரிசில், மதிவதனியிடம் வந்து, கடைத்
திறப்பு விழாவுக்கு,
வருகிறவர்கள் லேசில் மறக்க முடியாதபடி,
முதல் வரவேற்பான
பூங்கொத்து கொடுப்பதிலேயே வாடிக்கையாளரைக் கவர்ந்துவிட வேண்டும். அப்படி
ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார்!
அவரைப் பொறுத்தவரையில் நம்பிக்கை இல்லாமல்
தான் கேட்டார்!
ஆசை மகளின்
வற்புறுத்தலுக்காகக் கேட்டது! இந்தச் சின்னப்
பெண்களுக்கு என்ன தெரியும் என்ற அவரது எண்ணத்தை மதிவதனியால் நன்றாகவே அறிந்து
கொள்ள முடிந்தது!
தங்களுக்காக சிபாரிசு செய்த தோழியைத்
தலை குனிய விட்டு விடக் கூடாது
என்று ஒரு சவாலாகத்தான். அவள் அந்த வேலையை ஏற்றது!
ஒரு நாள் முழுவதும் யோசித்து, பின்னணியில் ஓர் இலையுடன்,
வெறும் இருபதே
மல்லிகை மலர்களைக்
கொண்டு பூங்கொத்தை
வடிவமைத்துக் கொண்டு போய்க் காட்டினாள். தோழியுடைய தந்தை, மறு பேச்சே பேசாமல், ஆர்டரை,
அவளிடம் கொடுத்தார்! அந்த ஜவுளிக்
கடைக்கு, சமீபத்தில்தான் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடினார்கள்! அதே பூங்கொத்து, ஆயிரம்
வாங்கினார்கள்! பெருமை சேர்க்கும் விவரம்தான்!
ஆனால், விலாவாரியாக அதை விளக்கினால் பெருமையடிப்பது போலத் தோன்றும் என்பதால்,
''இப்படியெல்லாம் ஏதாவது செய்தால்தானே, எங்களுக்கும் வாடிக்கை பெருகும், அக்கா! அதனால், நாங்கள் ரெண்டு
பேரும் யோசித்து,
யோசித்துச் செய்வதுதான்!” என்றாள் சுருக்கமாக.
“அருமை, மதி! ஆனால், நீ சொன்னதை என் கணவரிடம்
சொன்னேன் என்று வைத்துக்கொள்! என்ன சொல்வார்,
தெரியுமா? யோசிப்பதா?
அதெல்லாம் மூளை உள்ளவர்கள் செய்வதும்மா. நீயெல்லாம் வீணாகக் கஷ்டப்படாதே, செல்லம் என்று ரொம்பப் பரிவு போலச்
சொல்லிக் காலை வாரி விட்டு விடுவார்!'”'
என்று அருணா கூற, அருகில் நின்று
கேட்டுக் கொண்டிருந்த எல்லோருக்கும் சிரிப்பு வந்தது!
“ஆஹா! இந்த அளவுக்கு, என் மனதுக்குள் இருக்கும் உண்மையான
அபிப்பிராயம் வரை தெரிந்து வைத்திருக்கிறாளே! இவளுக்கா மூளையில்லை?
அம்மாடியோவ்! இவ்வ்...வளவு மூளையா
என்று பயம்மாக
இருக்கிறதே!” என்று, அவளுடைய கணவர் நடுங்கிக்காட்ட, அதற்கும்
ஒரு சிரிப்பலை
பரவியது!
“நானும்
இதைப் பாராட்டத்தான் வந்தேன்! ஆனால்,
சும்மாவே ஏகப்பட்ட
ஐஸ்! இன்னும்
சேர்ந்தால், பயங்கரச்சளி பிடித்து வைக்கப்
போகிறதே என்று வாயை மூடிக் கொண்டிருக்கிறேன்!” என்று வசீகரனின்
குரல் காதருகில்
ஒலிக்க, மதிவதனியின் மகிழ்ச்சி முழுமை
ஆயிற்று!
மோகனாவின் திருமணப்
பரபரப்பு ஓரளவு அடங்கி, அன்றாட வேலை தொடங்கி, அதில் இயல்பாக
மனம் ஒன்ற, கிட்டத்தட்ட ஒரு வாரம்
ஆயிற்று! அதற்குள்ளாக இரண்டு பெரிய ஆர்டர்கள் வரவே, மதிவதனி
அதில் மும்முரமானாள். அவளது இரு கிளைகளிலும், எல்லாரும் சேர்ந்து
இந்த வேலையைச்
செய்து முடித்தார்கள்!
அது போகவும்,
ஆயிரம் ரூபாய்
பொக்கே, இரண்டாயிரம் ரூபாய் பாஸ்கெட்
என்று, தனித்
தனி விற்பனைகளும் பெருக, மலர் வாங்கி வருவதும், அழகாக டிசைனில் செய்து, செய்து
காட்சிக்கு வைப்பதும்
விற்பதுமாக மதியின்
பொழுது வேகமாக
ஓடியது! இடையிடையே
மோகனாவின் திருமணம்
பற்றிய நினைவு
வரும். மதிவதனியடைய பெற்றோர் ஒரு தரம் தங்கை வீட்டுக்குப் போய் வந்தார்கள்.
![]() |
Aasai Aasai Aasai - Ramanichandran Novels Free Download 3 |
"சுந்தரி சொல்வது போலக்
குடிக்கப் பால் தராத வீடு என்றால்,
உடம்பில் இந்தப்
பளபளப்பு ஏறுமா? ஏதோ ஒரு நாள், எப்படியோ பால் காலியாகிப் போயிருக்கலாம் வீட்டு மனிதர்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம்! அதையெல்லாம் பெரிது படுத்திக்
கொண்டு! போடு தோப்புக்கரணம் என்றால், போட்டு
விடுவான் போல, மாப்பிள்ளை மோகியிடம் அவ்வளவு
பிரியமாக இருக்கிறான்! அம்மா வீட்டுக்குப் போக வேண்டும்
என்று சொன்னாள்
என்று கூட்டி
வந்திருந்தார். அதற்கு மேல் என்ன வேண்டும்? இவள் ஏதாவது
சொல்லி, மகள் மனதைக் கெடுத்து விடக்
கூடாதே என்று இருக்கிறது!" என்று சுதர்சனம்
படபடப்பதைத் தாயும் மகளும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்!
சுதர்சனம், தங்கையைக்
குறை சொல்லி,
அவர்கள் கேட்டதே
இல்லை! சுந்தரியின் போக்கினால் எப்போதேனும் சிறு தொல்லைகள்
நேரும்போதுகூட - அவள் பார்க்கும் விதத்தால் தொல்லைகள் நேரத்தான்
செய்யும் அப்போதும்,
அவர் தங்கையை
விட்டுக் கொடுத்தும் பேசமாட்டார். இப்போது, அந்தத் தங்கையுடைய
மகள் மோகனாவின்
மீதுள்ள அக்கறை,
அவரை இப்படிப்
பேச வைத்திருக்கிறது!
மனைவி மகளின்
பார்வையில் லேசாக முகம் கன்றி, “சரி அப்படி அவள் குணம் ஒரேயடியாகத் தெரியாமலா போய்விடும்? சின்ன வயதிலேயே அம்மா போய்விட்டதால், நாமும்
விட்டு விடக்கூடாது என்று கண்டு கொள்ளாதது போல இருந்ததுதான். இப்போது, இந்தச்
சின்னப் பெண்ணின்
நிம்மதி, சந்தோஷம்
கெட்டு விடக்கூடாதே! அதுதான் கவலையாக
இருக்கிறது!” என்றார்
குடும்பத் தலைவர்!
நாவல் Aasai Aasai Aasai - Ramanichandran Novel-ஐ Free Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil
வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!
Post a Comment
Comment Here!