-->

Anbin Thanmayai Arindha Pinne is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Anbin Thanmayai Arindha Pinne PDF book download link is available.

Anbin Thanmayai Arindha Pinne PDF Download | Ramanichandran Novels

அன்பின் தன்மையை அறிந்த பின்னே என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Anbin Thanmayai Arindha Pinne Ramanichandran Novel

பொதுவாக, இரண்டாவது பிள்ளைகளுக்குச்சூட்டிப்பு அதிகமாக இருக்கும்என்பார்கள்‌. ''மூத்தது மோழை, இளையது காளை'' என்ற, பழமொழியே, இருக்கிறதே. இந்தச்சகோதரிகளும்பெருமளவு அப்படித்தான்இருந்தார்கள்‌. பெரியவளுக்குக்கொஞ்சம்பொறுமை அதிகம்‌. பலதைப்‌ 'போகிறது' என்று விட்டு விடுவாள்‌. இளையவளுக்குத்தன்னலத்தோடு, சுறுசுறுப்பு, மிகவும்அதிகம்‌. வினாடிக்குள்திட்டமிட்டுச்செயலாற்றியே. முடித்து விடுவாள்‌.

இப்போதும்‌, அதுதான்நடந்தது. தமக்கை, தன்னைக்கண்டு கொண்டது மட்டுமின்றீ அம்மா, அப்பாவிடம்காட்டிக்கொடுக்கவும்துணிந்து விட்டாள்என்பதை, வசுந்தரா பேசத்தொடங்கியதுமே புரிந்து கொண்டவள்‌, மேற்கொண்டு, தமக்கை பேச இடம்கொடாமல்உடனேயே, கதறி அழத்தொடங்கினாள்‌.


Download Ramanichandran PDF Novels More:


''கெடுத்தேனா? அய்யோ! நானா கெடுத்தேன்‌? உன்முகத்துக்கு என்னென்ன செய்தால்அழகாக இருக்கும்என்று, இந்த வேகாத வெய்யிலில்புனிதாக்காவிடம்‌.... அவள்தான்என்சினேகிதியுடைய அக்கா, அழகு நிலையத்தில்வேலை செய்கிறவள்‌, அவளிடம்கேட்டு வந்து சொன்னால்கெடுக்கிறேன்என்று, கூசாமல்கூற, உனக்கு எப்படியக்கா, மனம்வந்தது? இப்படி பழி சுமத்துவதை விட என்னை, நீ கொன்றே போட்டிருக்க லாமே! அப்பா, நீங்கள்வேண்டுமானால்‌, 'லட்சணா'வுக்குப்ஃபோன்செய்து, கேட்டுப்பாருங்கள்‌, அப்பா நான்‌, அங்கே வந்தேனா, இல்லையா என்று, அவர்களே சொல்லுவார்கள்‌. ”

நிச்சயமாகச்சென்றிருக்கிறாள்தான்‌. மற்றபடி, இந்த மாதிரிக்கூந்தல்அலங்காரமும்‌, கை, கால்‌, முக அழகு படுத்தல்கள்எல்லாம்‌, எப்படி நடந்திருக்க முடியும்‌?

நினைத்ததைச்சொல்ல விரும்பி ''லட்சணாவுக்குப்போனதென்னவோ...'' என்று, வசுந்தரா தொடங்கவும்‌, நெஞ்சில்கை வைத்து, ''அய்யோ! என்று முனகினாள்‌, சின்னவள்‌.

கலக்கத்துடன்நோக்கிய பெற்றோரிடம்‌, 'அம்மா, அப்பா, எனக்கு என்னவோ பண்ணுகிறதே. நெஞ்செல்லாம்வலிக்கிற மாதிரி, வயிற்றுக்குள்பிசைகிற மாதிரி இருக்கிறதே! கடவுளே... அக்கா, தயவு பண்ணி, என்னைத்தப்பா நினையாதே, அக்கா'' என்று தீனக்குரலில்இறைஞ்சியவள்‌, தாயின்மடியில்‌, அப்படியே சாய்ந்து விட்டாள்‌.

'என்னமாய்நடிக்கிறாய்‌' என்று பல்லைக்கடித்த வசுந்தரா, “சும்மா, மரம்மாதிரி நின்று கொண்டிருக்கிறாயே! போய்‌, ஒரு தம்ளர்தண்ணீர்எடுத்து வரத்தெரியாதா?'' என்று, தகப்பனார்அதட்டவும்‌, திகைப்புடன்அவரைப்பார்த்தாள்‌.

இதை, நிஜம்என்றா, அப்பா எண்ணுகிறார்‌? சோனாவின்நடிப்பை, அவர்கூடக்கண்டு கொள்ளவில்லையா?

அவருக்கு, உண்மையை எடுத்துச்சொல்லஎண்ணி, “சோனாவுக்கு ஒன்றுமில்லை, அப்பா...''என்று தொடங்கிய மூத்த மகளை, ராகவன்ஆத்திரத்துடன்‌, உறுத்து விழித்தார்‌.

உன்னை, நல்ல பெண்‌.... கெட்டிக்காரி, என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன்‌. ஆனால்‌, பொறாமை உன்அறிவுக்கண்ணை, இப்படி மறைக்கும்என்று, நான்சற்றும்எதிர்பார்க்கவே இல்லை. உன்தங்கை அதிக அழகு என்றால்‌, அதில்நீ பெருமைப்படவேண்டாமா? அதை விட்டு, உனக்காக அலைந்து, திரிந்து விட்டு வந்தவளைப்பார்த்து, என்ன பேச்சுப்பேசுகிறாய்‌? சீச்சி! உன்னிடம்‌, இதை நான்கொஞ்சமும்எதிர்பார்க்கவில்லை. தெரிந்து கொள்‌'' என்றார்கோப மாக.

தந்தைகூட, இப்படிப்பேசியது வசுந்தராவுக்குப்பெரும்அதிர்ச்சிதான்‌. சரி, தப்பு என்பதே இல்லாமல்‌, தாயார்எப்போதும்‌, சின்ன மகள்பக்கம்தான்நிற்பாள்‌. ஆனால்‌, நடு நிலையை வகிப்பார்என்று அவள்எதிர்பார்த்திருந்த தகப்பனாருமா மூத்த மகள்கூறுவதைக்காது கொடுத்துக்கேட்கக்கூட தயாரில்லை என்று ஆகவும்‌, அவளுக்கு மனம்வெறுத்து விட்டது.

சமயம்பார்தது, 'ம்ம்‌' மென்று முனகியபடியே, தாயின்மடியிலிருந்த தலையை லேசாக அசைத்து, பெற்றோரின்கவனத்தைத்தன்புறம்ஈர்த்தாள்‌, சோனா.

என்னம்மா, என்னடா கண்ணு?'' என்று, சரசா உருக, வசுவின்பார்வையும்‌, தங்கையிடம்சென்றது. மயக்கமாம்‌! நிறம்வெளுக்கவில்லை. முகம்கொஞ்சம்கூட வாடவில்லை. உடம்பில்‌, எந்த இடத்திலும்சோர்வு தெரியவில்லை. இவள்பாவலா செய்தால்மட்டும்என்ன, ஏது என்று கூடப்பாராமல்உடனே நம்பிவிடுவதா?

உடன்பிறந்தவளைப்போல நடிக்கத்தெரியாத குற்றம்‌, வசுந்தராவின்எரிச்சலை, அவளது முகம்‌, “அடுத்தது காட்டும்பளிங்கு' போலக்காட்டிவிட, அதற்கும்‌, அவள்வாங்கிக்கட்டும்படியாயிற்று.

என்ன பார்வை. இது? ஏதோ, தானாக மயக்கம்தெளிகிறதே என்று, சந்தோஷப்படாமல்‌, முறைக்கிறாயே போ. முதலில்‌, உன்அறைக்குப்போ. அங்கே, சற்று நேரம்‌, தனியாக இருந்து யோசி. இனியேனும்‌, இந்தச்சின்ன புத்தியை விட்டு விட்டு, நல்லபடியாக, இருக்க பழகு'' என்று உத்திரவிட்டார்‌, ராகவன்‌.

ஆமாம்‌, ஆமாம்‌. இந்த வீட்டில்ஒருத்தியாவச அழகாகப்பிறந்திருக்கிறாளே! அதுவே பெரிது என் எண்ணாமல்‌, வயிற்றெரிச்சல்படாதே. அது, சோனுக குட்டிக்கு, நல்லதல்ல. ஏன்‌, உனக்கும்கூட, புத்தியோடு உடம்பும்சேர்ந்து கெட்டுப்போகும்‌. அதனால்‌....ச்சு. நான்என்ன சொல்லிக்கொண்டே இருக்கிறேன்‌. நீ பாட்டுக்கு சின்னவளை முறைத்துக்கொண்டே நிற்கிறாயே. போ. அப்பா சொல்வது போலத்தனியாக உட்கார்ந்து யோசி. அப்போதுதான்உனக்குப்புத்தி வரும்‌'' என்றாள்சரசா கடுமையான குரலில்‌.

வசுந்தராவுக்கு உள்ளம்‌, உலை நீராய்க்கொதித்தது. செளந்தர்யா, தினம்தினம்எதற்காவது, பிடிவாதம்பிடித்து, ஆர்ப்பாட்டம்செய்கிறவள்‌. அப்பா, திட்டி விடுவார்என்பதால்சரசா, பெரும்பாலும்அதைக்கணவனிடமிருந்து மறைத்து விடுவாள்‌.

போகட்டும்‌. அப்பாவுக்குத்தான்அவருடைய இளைய மகளின்சுயரூபம்தெரியாது. ஆனால்‌, அம்மா? அம்மாவுக்கு எல்லாம்தெரியும்தானே? அப்படியும்‌, அவர்களும்சேர்ந்து கொண்டு திட்டுகிறார்களே!

தன்செல்ல மகளின்சாயம்வெளுத்து விடுமோ என்று, அம்மாவுக்கும்பயம்வந்து விட்டது போல. சோனாவைக்காப்பாற்றத்தான்அம்மா எந்தத்தியாகமும்செய்வார்களே!
anbin thanmayai arindha pinne, ramanichandran tamil novels, tamil novels free download, ramanichandran best novels, pdf tamil novels free download@pdftamil
Anbin Thanmayai Arindha Pinne Novel PDF

Info of Anbin Thanmayai Arindha Pinne Ramanichandran Novel


Name of the Book:

Anbin Thanmayai Arindha Pinne

Book About:
Tamil Family Based Romance Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
224 Pages
ISBN-13:
2383238438466
Publisher:
Ramanichandran Novels
Copyright Date:
2014
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Anbin Thanmayai Arindha Pinne என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!