-->

Idaiveli Athigamillai is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph PDF book download link is available.

Idaiveli Athigamillai PDF Download | Ramanichandran Novels

இடைவெளி அதிகமில்லை என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Idaiveli Athigamillai Novel by Ramanichandran PDF

நான் எப்படிப்பா, உள்ளே தலையிட முடியும்?" என்று கேட்டார்.
கிட்டத்தட்ட மறுப்பு! விட்டுவிட்டுப் போய்விடக் கூடாதே! என்று மகாலட்சுமி நினைக்கும்போதே “நீங்கள் நினைத்தால், நடக்காததா சார்? இந்தப் பகுதியின் வியாபாரிகள் சங்கத் தலைவர் நீங்கள். தலை கீழாக நில் என்று நீங்கள் சொன்னால், எல்லோரும் மறுக்காமல் நிற்பார்களே!" என்று அவருக்கு உச்சி குளிரும் வண்ணம் பேசினான் அவன்.

அன்றைக்கே, அவன் அதில் கெட்டிக்காரன்தான்! தன்னை மீறி முகம் கனிந்தாலும், முத்து மாணிக்க மும், அப்படி ஒன்றும் எளிதாக உருகி விடுகிறவர் அல்லவே!

"அது வேறே விஷயம்ப்பா! நம்ம கிட்டே உள்ள நம்பிக்கை! அதைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது பார்! அதனாலே, நாலு பேரிடம் கலந்து பேசாமல், நானே தடாலடியாக முடிவு பண்ண முடியாது. அதனாலே, நீ என்ன பண்ணுகிறே... நாளைக்கு மறுபடியும் வாயேன். இந்த நேரத்துக்கு... இல்லையில்லை . அரை மணி நேரம், முன்னாடி, ஏழு மணிக்குப் போல, வீட்டுப் பக்கம் வா! பின்னாலே, அந்த ரோடிலேயே முத்து மாளிகை என்று பேர் போட்டிருக்கும். ஆமாம், உன் பேர் என்ன? எங்கே தங்கியிருக்கிறே! இந்தத் தொழில் அனுபவம் என்ன? ஒண்ணும் சொல்லலையே!'' என்று அவனைப் பற்றிய விவரம் விசாரித்தார் அவர்.

அப்போதுதான் 'மனோரஞ்சன்' என்று தன் பெயரைச் சொன்னான் அவன்.
அன்றே மனோரஞ்சனைப் பற்றி, மகாலட்சுமி ஓரிரு முறை நினைத்தாள் தான். அவன் கேட்டு வந்தது நடக்குமா என்ற சந்தேகம்.
முத்து மாணிக்கத்தைப் பொறுத்த வரையில், தேவை என்று வந்தவரிடம் சரி என்று சொல்லவும் இழுத்தடிப் பார். இல்லை என்று மறுப்பதானாலும் அப்படித்தான். கிடைக்குமா, கிடைக்காதா என்று அவர்களை ஈரெட்டில் நிறுத்தி தவிக்க வைப்பதில், அவருக்கு ஒரு அற்ப சந்தோஷம்!


எனவே, மறுநாள் வரச் சொன்னதால் மட்டுமே, மனோ ரஞ்சன் கேட்டது கிடைக்கும் என்று நிச்சயமில்லை. அது தெரியாமல், எதிர்பார்த்து வந்து, அவன் ஏமாந்து விடக் கூடாதே என்று பரிதாபப்பட்டாள் அவள்.

மறுநாள் காலையில், கடையில் பூஜை வேலை செய்வதற்காகக் குளித்துவிட்டுத் தலையைத் துவட்டிய படியே மாடி வராந்தாவுக்கு வந்தவள், கடைக்குச் செல் லும் சின்னக் கதவைத் திறக்க முயன்று கொண்டிருந்த வனைக் கண்டு திகைத்துப் போனாள்.

அந்தக் கதவு, வெளியிலிருந்து திறப்பது சற்று கடினம். சங்கிலி மாட்டிக் கொண்டு போட்டிருக்கும். பழகாதவர்களால் முடியாது. இரவில் நாய்கள் சுற்றுவ தால், பொதுவாகப் பூட்டுப் போடுவது கிடையாது.

ஆனால், இந்த நேரத்தில், இவன் இங்கே, எங்கே இந்தப் பக்கமாக வந்தான்? இந்த வழியாக வந்தால், அவன் நிச்சயமாகத் தொலைந்தான்!

வேகமாகப் படியிறங்கி, ஓடிச் சென்று, மகாலட்சுமி கதவை அடைகையில், மனோரஞ்சன் கதவைத் திறந்தே விட்டான்.

அவளைக் கண்டதும் முறுவலித்து ''ஹல்லோ , வணக்கம்!" என்றான் அவன்.
மூச்சு வாங்கியவாறே, “இ... இந்தப் பக்கமாக ஏன் வந் தீர்கள்! முன் வாசல் பற்றி, அப்பா சொன்னாரில்லையா?'' என்றாள்.

"சொன்னார், ஆனால் இங்கே ஒரு வழி இருக்கும் போது எதற்காகச் சுற்றிக் கொண்டு...'' என்றவன் உடனே புரிந்து ''ஓ! இந்த வழி வீட்டினருக்கு மட்டும்தானோ? ரைட், சுற்றியே வருகிறேன். எச்சரித்ததற்கு நன்றி!'' என்று மறுபடியும் புன்முறுவல் செய்தான்.

எந்த வழியே திரும்பப் போனவனை “சற்றுப் பொருங்கள் " என்று நிறுத்தினாள் மகாலட்சுமி. திரும்பிப் பார்த்து, தந்தையின் அறை ஜன்னலை மாமரக் கிளைகள்
நன்கு மறைப்பதை உறுதி செய்து கொண்டு, ''அப்பா விடம் உதவி கேட்டு வருகிறவர், இவ்வளவு நல்ல சட்டை போட்டிருக்கிறீர்களே, கொஞ்சம் சாதாரணமாக... அதாவது... வந்து, நேற்று மாதிரி, பழசாக, வேறே எதுவும் இல்லையா?'' என்று கேட்டாள்.

"நேற்று, பெருமாள் அண்ண ன் அவசரமாகப் போகச் சொன்னதால், உடை மாற்றாமல், அப்படியே வந்து விட்டேன். ஆனால் 'இரக்கப் போனாலும் சிறக்கப் போக வேண்டும்' என்று அம்மா சொல்வார்கள். அதனால், இன்று இந்த உடை!" என்று தன் உடையையே சுட்டிக் காட்டினான் மனோரஞ்சன்.

எவ்வளவு உற்சாகமாக, நல்ல துணி அணிந்திருக்கும் சந்தோஷத்தோடு சொல்கிறான்! ஆனால்... ஆனால், அவனுக்குத்தானே, வேலை நடக்க வேண்டும்?

"வந்து, அப்பாவிடம் உதவி கேட்டு வருகிறவர்கள், கொஞ்சம் கீழாக இருக்க... ரொம்ப நன்றாகத் தெரிந்தால், அப்பாவுக்குப் பிடிக்காது...'' என்று இழுத்தாள் அவள்.

அவனது கூர் விழிகள் சட்டென விஷயத்தை ஊகித் தன. மற்றவர்களிடம் வளத்தைத் தாங்காதவர், இவ ளுடைய தந்தை!

புன்னகை மாறாமலேயே “இதோ ஓடிப்போய், வேறே போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன்'' என்று திரும்பிச் சென்றான் அவன். கதவருகில் நின்று ''முன் வாயில் வழியே வருகிறேன்!" என்று வரிசைப் பல் தெரிய கூறி விட்டுப் போனான்.

உடை மட்டுமின்றி, பணிவும் பதவிசுமாக மனோ ரஞ்சன் பேசிய விதத்தில், அவன் கேட்ட தொழில் செய்யும் வாய்ப்பு. அவனுக்கே கிடைத்தது!

மகாலட்சுமியின் ஆலோசனை கிடைத்திராவிட்டால், இந்த வாய்ப்பு கனவாகவே முடிந்திருக்கும் என்பது அவனுக்கு நிச்சயம். அதற்காக அவளுக்கு நன்றி கூற, மனோரஞ்சன் மிகவும் விரும்பினான். ஆனால் அதைச் செய்வது எப்படி?

நேராக இவளது வீட்டுக்குப் போய்ப் பேசினால், கிடைத்த வாய்ப்பு, ஏதேனும் வழியில் பறிபோய் விட வும் கூடும் அந்த அளவுக்கு அந்தப் பகுதி வியாபாரி களிடம், முத்துமாணிக்கத்துக்குச் செல்வாக்கு இருந்தது.

நன்றியற்றவனாக இருக்கவும் மனமில்லாததாலேயே, மகாலட்சுமியின் நடமாட்டங்களை, அவன் சற்று உன்னிப்பாகக் கவனித்தான் என்று சொல்லலாம்.

பெருமையாகக் காலையில் காரில் கூட்டிப் போய்க் கல்லூரியில் இறக்கி விட்டாலும், மற்ற சமயங்களில் முத்து மாணிக்கத்துக்கு கார் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படக்கூடும் என்பதால், அவள் வீட்டுக்குத் திரும்பி வருவது பஸ்சில்தான்.
இதைக் கண்டு பிடித்த மனோரஞ்சன், விரைவி லேயே ஒரு நாள், மகாலட்சுமி கல்லூரியிலிருந்து திரும்பி வரும் வழியில் காத்து நின்று, அவளுக்கு நன்றி கூறினான்.

“உங்கள் பேச்சுத் திறமை வாங்கித் தந்த வெற்றி அது'' என்று அந்தப் பெருமையை அவனுக்கே திருப்பி அளித்த மகாலட்சுமி. அத்தோடு நிறுத்தாமல், “ஆனால், இந்தத் தொழிலில் ஏதேனும் லாபம் வருமா? குப்பைக் கூடைக்குப் போக வேண்டிய, வேண்டாத பொருட்களை வைத்து என்ன தொழில் செய்வீர்கள்?' என்று கவலை யுடன் கேட்டாள்.

அவளது கவலையைப் போக்குவதற்காகவோ, அல்லது தனக்காக அவள் கவலைப்படுவதே பிடித்ததோ, அவன் பல் வரிசை தெரிய அழகாக நகைத்தான். “தம் பிடிக்குத் தம்பிடி என்பார்கள். அதாவது நூறு சதவீதம் லாபம். இதில்தான் கிடைக்கும்! 


சரியான தொடர்புகள் வேண்டும், அவ்வளவுதான். கொஞ்ச நாளில் நான் எவ் வளவு உயரப் பறக்கப் போகிறேன் என்று பார்க்கத்தானே, போகிறாய்?''
ஆனால், அவள் முத்து மாணிக்கத்துடைய மகள் அல்லவா? அவ்வளவு எளிதாக சமாதானம் அடையாமல், ''அப்படி லாபம் வந்தால் அந்தப் பெருமாள், இதை ஏன் விட்டு விட்டுப் போகிறார்?' என்று மறுபடியும் வினவி னாள்.

Download Ramanichandran PDF Novels More:

Info of Idaiveli Athigamillai Novel

Name of the Book:

இடைவெளி அதிகமில்லை

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
316 Pages
ISBN-13:
5195182032880
Publisher:
Ramanichandran
Copyright Date:
2006
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel
adiaiveli athigamillai pdf, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
RC Novel

Download Ramanichandran Novel

Thanks For Downloading... Idaiveli Athigamillai Novel...

Ramanichandran அவர்களின் நாவல் Idaiveli Athigamillai Novel என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!