-->

Intha Manam Enthan Sontham is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Intha Manam Enthan Sontham PDF book download link is available.

Intha Manam Enthan Sontham PDF Download | Ramanichandran Novels


இந்த மனம் எந்தன் சொந்தம் என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Intha Manam Enthan Sontham Novel

கூன்னைப்‌ பற்றி யோகேந்திரனின்‌ புதிய கணிப்பு தெரியாததால்‌, அவனது முதல்‌ நாள்‌ அபிப்பிராயத்தை மாற்றி விட்டோம்‌ என்ற உற்சாகத்துடனேயே அலுவலகத்தை விட்டு வெளியே வந்த உதயரேகாவுக்கு விரைவிலேயே அலுவலகம்‌ அடியோடு மறந்து போயிற்றுமாடல்‌ மாதிரி எழிலான போஸ்களில்‌ தங்கை அனுப்பியிருந்த அவளது புகைப்படங்கள்‌ நினைவு வந்தன.

நாலு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து கிளம்பிய போதும்‌ அவள்‌ அழகிதான்‌. ஆனால்‌ கொஞ்சம்‌ கொழு கொழு அழகி.“உனக்கு மட்டும்‌ இடுப்பு ஒல்லியாக இருக்கிறதேஎன்று எரிச்சல்‌ படுவாள்‌.

நிலா மாதிரி அழகான முகத்தையும்‌ நிறத்தையும்‌ வைத்துக்‌ கொண்டுஇதற்குப்‌ போய்‌ வருத்தப்படுகிறாளே என்று உதயாவுக்கு வேடிக்கையாக இருக்கும்‌. இப்போது பார்த்தால்‌, 'பொய்யோ எனும்‌ இடையாள்‌! என்று அவளைத்‌ தாராளமாகச்‌ சொல்லலாம்‌. பொன்மலர்‌ நாற்றமுடைத்து என்பது போலபானு ரேகா புத்திசாலியும்கூட.

மற்றபடி வேலையில்‌, சேர்ந்து இரண்டே ஆண்டுகளில்‌ நிறுவனத்தில்‌ தொழில்‌ விரிவாக்கம்‌ பற்றிய வேலையைப்‌ பார்க்கவென்றுஅவளை நாடு விட்டு நாடு அனுப்புவார்களா இப்படிஅழகுதிறமை எல்லாம்‌ ஒரே இடத்தில்‌ குவிந்திருப்பது அவளுடைய தங்கையிடம்‌ மட்டுமாகத்‌ தான்‌ இருக்கும்‌.
Download Ramanichandran PDF Novels More:

வீடு வந்து சேரும்வரைதங்கையின்‌ பெருமையைசெல்வத்தின்‌ காது புளிக்கும்‌ அளவுக்குச்‌ சொல்லித்‌ தீர்த்து விட்டாள்‌ எனலாம்‌. இரண்டு மூன்று முறை குறுக்கிட முயன்று விட்டுவேறு வழியின்றிக்‌ கடனே என்று அந்தப்‌ பேச்சைக்‌ கேட்கலானான்‌ அவன்‌. வீடு வந்து சேர்ந்ததும்‌, செல்வத்தோடு அவனது பைக்கில்‌ இருந்த தன்‌ பொருட்களைப்‌ பற்றிய நினைவும்‌ அவளுக்கு அடியோடு மறந்துவிடஆர்வமும்‌ பெருமையுமாக,“பானு...'' என்ற கூவலுடன்‌ வீட்டினுள்‌ ஓடிச்‌ சென்றாள்‌ உதயா.

பெரிய சோபாவில்‌ எழிலாகச்‌ சாய்ந்திருந்தவாறே தமக்கையைப்‌ பார்த்து முறுவலித்த பானுரேகாவின்‌ பார்வைஉதயாவின்‌ பின்னேஅவளது பொருட்களோடு வந்து நின்ற செல்வத்தின்‌ மீது யோசனையாகப்‌ படிந்தது.

பானுரேகாவின்‌ பார்வை சென்ற இடத்தைக்‌ கண்டதும்‌, இன்னொரு வகைப்‌ பெருமையோடுசெல்வத்தை அவளுக்கு அறிமுகம்‌ செய்து வைத்தாள்‌ உதயா.“நம்‌ பாக்யா ஆன்ட்டி மகன்‌, பானுசெல்வம்‌. குச்சி குச்சியாகக்‌ கையும்‌ காலுமாக பிலானிக்குப்‌ படிக்கப்‌ போனாரே அங்கே கொஞ்சம்‌ சதை ஏற்றிக்‌ கொண்டு வந்திருக்கிறார்‌.

உனக்கு நோர்மாறு'” என்று சிரித்தாள்‌ தமக்கை.“என்ன மாறுபடிப்பை முடித்தார்தானே?'” என்று ஒரு மாதிரிக்‌ குரலில்‌ வினவினாள்‌ தங்கைஒரு கணம்‌ திகைத்தவளுக்குஉடனே புரிந்து போயிற்று.

தான்‌ சற்றுப்‌ பூசினாற்‌ போல்‌ இருந்ததை நினைத்துப்‌ பார்க்கபானுவுக்கு மனமில்லைஅதுவும்‌ சரிதானேஉணவில்‌ விருப்பம்‌ உள்ள அவள்‌, எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி மெலிந்தாளோஅதை நினைவுபடுத்தியது தப்புதானே?“மாறு என்றால்‌, உன்னைப்‌ போலப்‌ படித்த இடத்திலேயே வேலைப்‌ பார்க்காமல்‌, படித்து முடித்தச।ம்‌ இங்கே திரும்பி வந்து விட்டார்‌ என்பதுதான்‌.

எல்லோருக்கும்‌ சந்தோஷமாக செல்வத்துக்கும்‌ இங்கேயே நல்ல வேலையும்‌ கிடைத்து விட்டது.“அப்படியானால்‌ நான்‌ அங்கே பெரிய வேலை மார்ப்பது உனக்கு சந்தோஷம்‌ இல்லை போலப்‌ பேசுகிறாயேஎன்று அப்போது பானு திருப்தியற்றே பேசினாள்‌.

ஒரு தரம்‌ யோசியாமல்‌ வார்த்தைகளை விட்டதற்கு பட வேண்டியதுதான்‌ என்று தனக்குத்தானே அறிவுறுத்திக்‌ கொண்டுமேலும்‌ சமாளிக்க முயன்றாள்‌ உதயாஒரு வகையில்‌, நீ சொல்கிற மாதிரிதான்‌ என்றே கூறலாம்‌, பானு'' என்றவள்‌, பானுவின்‌ விழிகள்‌ அகலவும்‌, அவசரமாகத்‌ தங்கையின்‌ அருகே சென்றுஅவளது கன்னங்களைக்‌ கைகளில்‌ ஏந்தினாள்‌.

''இந்த அழகான முகத்தை நாலு ஆண்டுகளாகப்‌ பார்க்க முடியாமல்‌ எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமாபோனில்‌ குரல்‌ கேட்கும்‌ போட்டோவில்‌ முகம்‌ தெரியும்‌. ஆனால்‌, இப்படிப்‌ பக்கத்தில்‌ பார்த்துதொட்டு...'” என்றவாறு அன்போடு வருடிஅவளது கைகளைப்‌ பற்றி மென்மையாக முத்தமிட்டாள்‌.

மனம்‌ இளகி விடபானுவும்‌ உதயாவை லேசாக அணைத்துக்‌ கன்னத்தில்‌ உதடுகளை ஒற்றமூத்தவளின்‌ கண்கள்‌ கலங்கினஇரு சகோதரிகளின்‌ உணர்ச்சி மயமான சந்திப்பைப்‌ பார்த்துசெய்வது அறியாமல்‌ செல்வம்‌ விழித்துக்‌ கொண்டு நினறான்‌.

இரு பெண்களுக்கும்‌, குறைந்த பட்சமாகஉதயரகாவுக்கு அவன்‌ ஒருவன்‌ அங்கே இருக்கும்‌ எண்ணமே இல்லை என்பது மிகத்‌ தெளிவாகவே தெரிந்ததுஅடுத்தவளாவதுஅவன்‌ பக்கம்‌ அவ்வப்போது ஒரு பார்வையைச்‌ செலுத்தினாள்‌ எனலாம்‌.

அத்தோடுஅவள்‌ நிறுத்திக்‌ கொண்டது கூடப்‌ பெரிய விஷயம்‌ இல்லைஅவளுக்குஅவன்‌ எப்போதோ பழகிய யாரோதான்‌. ஆனால்‌ உதயாவிரைவிலே அவனை மணக்கப்‌ போகிறவள்‌. அவளுக்குஅவனது நினைவே இல்லை என்பதுஅவனை உறுத்தவே செய்தது.

ஆனால்‌, இந்த நிலைமையை மாற்ற என்ன செய்வது என்றுதான்‌ அவனுக்குத்‌ தெரியவில்லைநல்லவேளையாக இந்தச்‌ சங்கடமான நிலைமையை முடிவுக்குக்‌ கொண்டு வருகிறவளாகரேவதி அங்கே வந்து சேர்ந்தாள்‌. “உதயா வந்துவிட்டாளாஅவள்‌ குரல்‌ மாதிரி...” என்றவாறுகையில்‌ கரண்டியுடன்‌ வந்தாள்‌, செல்வத்தைப்‌ பார்த்துவிடஅடடேநீங்களா தம்பிவாருங்கள்‌...

வாருங்கள்‌! நீங்கள்தான்‌ உதயாவைக்‌ கூட்டி வந்தீர்கள்‌ போல இன்னும்‌ அவள்‌ பையைக்‌ கையிலேயே வைத்துக்‌ கொண்டு... இங்கே கொடுங்கள்‌... ஏய்‌ உதிஎன்னம்மாதம்பியிடம்‌ வாங்கி வைக்க வேண்டாம்‌? உட்காருங்கள்‌ செல்வம்‌. இவள்‌... பாணு... அடையாளம்‌ தெரிகிறதில்லையாநாலு ஆண்டுகளில்‌, ஆளே மாறி விட்டாள்‌. பானும்மா,

உனக்குச்‌ செல்வம்‌ தம்பியைக்‌ கண்டு பிடிக்க முடிந்ததாநான்‌ சொன்னேனே... என்னவோபெரியவர்கள்‌, எங்கள்‌ ஆசைகடவுள்‌ அருளால்‌ எல்லாம்‌ நல்லபடியாக நடக்க வேண்டும்‌'” என்று முடித்தாள்‌. சமையல்‌ அறையில்‌, எதையோ கிளறிக்‌ கொண்டு இருந்திருக்கிறாள்‌ என்பது நன்றாகத்‌ தெரிந்தது.

intha manam enthan sontham pdf, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Intha Manam Enthan Sontham

Info of Intha Manam Enthan Sontham Novel

Name of the Book:

இந்த மனம் எந்தன் சொந்தம்

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
353 Pages
ISBN-13:
5195182032884
Publisher:
Ramanichandran
Copyright Date:
2007
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Intha Manam Enthan Sontham Novel

Thanks For Downloading... Intha Manam Enthan Sontham PDF

Ramanichandran அவர்களின் நாவல் Intha Manam Enthan Sontham என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!