-->

Iraivan Kodutha Varam is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Iraivan Kodutha Varam PDF book download link is available.

Iraivan Kodutha Varam PDF Download | Ramanichandran Novels

இறைவன் கொடுத்த வரம் என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Iraivan Kodutha Varam Novel

சினேகிதியோடு நன்றாக அரட்டை அடித்துவிட்டுத்திரும்பிய மாதவிக்கு மனது உற்சாகமாக இருந்தது. எப்போதுமே, மனோகரியோடு பேசிக்கொண்டிருந்தால்‌, அப்படித்தான்‌! மனம்கசந்து, சோர்ந்து, எங்காவது விழுந்து கிடக்கலாம்போல இருக்கிற நேரத்தில்கூட, அவளோடு சற்று நேரம்பேசினால்‌, மனம்அமைதியடைந்து விடும்‌!

அவள்செய்யும்பணி தந்த திறமையோ, என்னவோ! நோயின்உபாதைகளால்முகம்சுழிப்போர்‌, எரிந்து விழுவோர்அனைவரிடமும்இன்முகம்காட்டி, உற்சாகப்படுத்துகிறவள்அல்லவா? அதே சுபாவம்‌, எல்லோரிடமும்வருகிறது!

ஆனால்‌, அப்படியும்சொல்ல முடியாது! சின்ன வயதில்இருந்தே அவள்அப்படித்தான்‌! விபத்தில்ஒன்றாக இறந்துவிட்ட பெற்றோரின்நினைவில்‌, முகம்வாடி நின்றவளைத்தானாக வந்து பேசித்தேற்றியவள்‌! அவளும்‌, தாய்தந்தை அற்றவள்‌, பெற்றோரின்முகத்தை அவள்பார்த்ததுகூடக்கிடையாது என்று அறிந்தபோது, இருவருக்கும்இடையே நட்பு இறுகிப்போயிற்று!
Download Ramanichandran PDF Novels More:
கூடவே, மாதவிக்குத்தன்னை நினைத்துக்கூச்சமே உண்டாகிவிட்டது! அவளாவது, பெற்றோரின்பாசத்தைப்பத்தாண்டுகளுக்கு மேலாக அனுபவித்திருக்கிறாள்‌! ஆனால்மனோகரி அந்த அன்பை அறிந்ததே இல்லையே! ஆனாலும்‌, அவசியப்பட்ட அனைவருக்கும்அள்ளியள்ளிக்கொடுக்க, அவளிடம்அதே பாசம்நிறைய இருந்தது!

நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்என்பதற்கிணங்க, அவளது படிப்புச்செலவை, ஒரு பெரிய மனிதர்ஏற்றுக்கொண்டிருந்தார்‌! அவள்விரும்புவதைப்படிக்க வைக்க, அந்தப்பெரிய மனிதர்தயார்தான்‌!

ஆனால்‌, தொண்டு உணர்ச்சி தலை தூக்கி இருந்த காரணத்தால்‌, 'நர்சிங்‌'கை, மனோகரி தேர்ந்தெடுத்தாள்‌. நாயாளிகள்‌, மருத்துவர்கள்எல்லோரிடமும்நல்ல பெயர்வாங்கினாள்‌. அவளைப்பார்த்து, மாதவியும்வாரத்தில்ஒரு நாள்‌, குழந்தைகள்வார்டில்இலவசமாகப்பணிபுரிவது உண்டு! அரை நாள்வேலையிலேயே, அயர்ந்து போவாள்‌! மனோ எப்படித்தான்செய்கிறாளோ என்று ஆச்சரியப்படுவாள்‌!

அதைப்பற்றிப்பேசினால்‌, 'என்னப்பா, ஐஸ்க்ரீம்வாங்கித்தராமல்டபாய்ப்பதற்காகத்தலையில்ஐஸ்வைக்கிறாயா?' என்று சிரிப்பாள்‌! மனோவைத்தொல்லை பண்ணுகிறோமோ என்று இருந்தாலும்‌, மாதவி, அடிக்கடி தோழியைப்போய்ப்பார்த்துச்சற்று நேரம்பேசிக்கொண்டிருந்துவிட்டு வருவாள்‌.

முன்பாவது, தகுதிக்குக்குறைந்தவர்களுடன்ஏன்பழகுகிறாய்என்று, தாத்தா முகத்தைச்சுழிப்பார்‌! அசையாமல்நின்று, அவர்பேசுவதைப்பொறுமையாகக்கேட்டு முடித்து விட்டு, மீண்டும்அனுமதி கேட்டுக்கொண்டு போகவேண்டும்‌! அதற்குள்ளாகப்பாதி ஆர்வம்மறைந்துவிடும்‌!

ஆனால்‌, இப்போது அப்படியில்லை! தாத்தாவைப்பற்றி அவளால்மறக்க முடிந்தால்‌, அவளுக்குக்கண்டிப்பு என்று, எதுவும்கிடையாதுதான்‌! ஆனால்‌, எங்கோ அருவமாய்இருந்து, அவர்தன்னைக்கண்காணிப்பது போலவே, அவளுக்குத்தோன்றும்‌! கண்காணிப்பது மட்டும்அல்ல. எப்போதும்போலத்தப்புக்கண்டுபிடிப்பது போலவும்‌!

அவளுடைய தாயாருக்கு மகளாகப்பிறந்த காரணத்தினாலேயே, எப்போதுமே அப்படித்தான்‌! தாத்தாவைப்பொறுத்த வரையில்‌, மஞ்சுளா அழகான பெண்ணாகப்பிறந்தது குற்றம்‌! ஆடல்பாடல்களைப்பயின்று மேடையேறியது குற்றம்‌. அவளைப்பார்த்து அவருடைய அருமை மகன்ஆசைப்பட்டது குற்றம்‌. தந்தைக்குப்பிடிக்கவில்லை என்று தெரிந்தும்‌, மகேந்திரன்பிடிவாதம்பிடித்து, அவளை மணந்தது குற்றம்‌.

சரி, அதுதான்போகிறது என்றாலும்‌, அவருடைய மனைவி, தொழிலைக்கவனிக்க வாரிசாக மகேந்திரனைப்பெற்றுத்தந்தது போல அல்லாமல்‌, 'ஜஞைஜஞை' என்று மூக்கால்அழுவதற்கும்‌, 'தைதை' என்று குதிப்பதற்குமாக, ஒரு பெண்ணைப்பெற்றது, மஞ்சுளா செய்த மாபெரும்குற்றமாக, அவளுடைய மாமனாருக்குத்தோன்றியது!

சரி, பெண்ணைத்தான்பெற்றுத்தொலைத்து விட்டாள்‌! அவளையாவது, நல்லபடியாகத்தொழில்‌, நிர்வாகம்‌, வருமானம்என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கக்கூடாதா? இந்தக்காலத்தில்தான்‌, பெண்களும்எல்லா வேலைக்கும்‌, 'நான்நான்‌' என்று வந்து விடுகிறார்களே! அவளுக்கும்பாட்டு, நடனம்சொல்லிக்கொடுக்கிறாள்‌! அந்த மடையனும்தலையாட்டி ரசிக்கிறான்என்று, மகன்‌, மருமகள்இரண்டு பேர்மேலுமே, அவருக்குக்கோபம்தான்‌!

தானாகச்செய்யா விட்டாலும்‌, தொழிலில்‌, அவர்சொன்னதைச்செய்து முடிக்கும்மகனுக்குத்தொழிலின்நெளிவு சுழிவுகளை அவர்தீவிரமாகக்கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த காலத்தில்தான்‌, விபத்து ஏற்பட்டு, அந்த வழியும்அடைபட்டுப்போயிற்று!

மகனின்இழப்பிலிருந்து பெரியவர்மீள, வெகு காலம்ஆயிற்று! ஆண்டுக்கணக்கில்‌! அந்த ஐந்தாறு ஆண்டுக்காலத்தில்‌, அவர்கண்ணில்படாமல்ஒதுங்கியிருக்கவே, மாதவி எப்போதும்முயன்றாள்‌. 'நாயே, பேயே!' என்று அவளைத்திட்டாவிட்டாலும்‌, அவரிடமிருந்து வெறுப்பு அனல்போல அடிப்பதை, அவளால்உணர முடிந்தது! அவளைப்பார்க்கும்போதெல்லாம்‌, மருமகளைப்பற்றி ஏதாவது முணுமுணுப்பார்‌.

மாதவியின்பெயரைக்கூட, அவர்விட்டு வைக்கவில்லை! உத்தமியான கண்ணகி பெயரையாவது வைத்திருக்கலாமாம்‌! ஆடிப்பாடி மயக்கிய கணிகையின்பெயரை வைத்து விட்டாளாம்‌. அவளும்ஆடிப்பாடி, மகனை மயக்கியவள்தானே!

'அப்பாவும்சேர்ந்துதானே, இந்தப்பெயரை எனக்கு வைத்தது? அம்மாவை மட்டும்ஏன்திட்டுகிறீர்கள்‌?' என்று கேட்க வேண்டும்போல, மாதவியின்மனம்துடிக்கும்‌! ஆனால்‌, பெரியவரிடம்எதிர்த்துப்பேசக்கூடாது என்பது, சின்னஞ்சிறு வயதில்இருந்தே, தாயின்போதனை!

அவருக்கு நிறைய ஏமாற்றங்கள்‌, கண்ணு! அதை, இப்படி ஏதாவது சொல்லித்தீர்த்துக்கொள்கிறார்‌! ச்ச, சொல்லிவிட்டுப்போகட்டுமே! நம்தாத்தாதானே?'' என்பாள்‌. அப்போது புரியாவிட்டாலும்‌, தாத்தாவின்ஏமாற்றங்கள்என்னென்ன என்று விரைவிலேயே புரிந்து விட்டதால்‌,

iraivan kodutha varam pdf, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Iraivan Kodutha Varam

Info of Novel

Name of the Book:

இறைவன் கொடுத்த வரம்

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
293 Pages
ISBN-13:
5195182032884
Publisher:
Ramanichandran
Copyright Date:
2003
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Iraivan Kodutha Varam

Thanks For Downloading... Iraivan Kodutha Varam RC Novel...

Ramanichandran அவர்களின் நாவல் Iraivan Kodutha Varam என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!