-->

Irulukku Pin Varum Jothi is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Irulukku Pin Varum Jothi PDF book download link is available.

Irulukku Pin Varum Jothi PDF Download | Ramanichandran Novels

இருளுக்கு பின் வரும் ஜோதி என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Irulukku Pin Varum Jothi Novel

சுயம்புலிங்கம்‌ இறந்த பிறகு. மனுபரதன்‌ மூன்று தடவைகள்‌ ம்யூரியின்‌ வீட்டுக்கு வந்தான்‌. முதல்‌ இரு முறையும்‌, வந்திருப்பது யார்‌ என்று 'விசிட்டிங்‌ கார்டு! மூலம்‌ அறிந்த மயூரி, அவளைப்‌ பார்க்க முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டாள்‌.

வேறு வழியின்றித்‌ திரும்பிச்‌ சென்றவன்‌, அடுத்து, அவள்‌ இலக்கற்று வெறித்தபடி தனியே உடகார்ந்திருந்த போது அறியாமலே, உள்ளே வந்து விட்டான்‌. தரையில்‌ அமர்ந்து, பெற்றோரைப்‌ பற்றித்தான்‌ மயூரி நினைத்துக்‌ கொண்டிருந்தாள்‌. 

'சாங்கியங்கள்‌ எதையுமே. சரியாகச்‌ செய்யவில்லை. உன்‌ அம்மா, அப்பா ஆவிகள்‌ விடுதலையில்லாமல்‌ இங்கேயேதான்‌ சுற்றிக்‌ கெண்டிருக்கும்‌' என்று தாத்தா முறை உறவுக்காரர்‌ ஒருவர்‌ ஆடு வெட்டிப்‌ படையல்‌ போடாததற்காகக்‌ குற்றம்‌ சாட்டி, சபித்துவிட்டுப்‌ போனது நினைவ வர அப்படி அப்பா, அம்மாவின்‌ ஆவிகள்‌ இங்கேயே இருந்தால்‌, எங்கே உட்காருவார்கள்‌? சோஃபா கூட இல்லையே என்று உள்ளூர வருத்தப்பட்டுக்‌ கொண்டிருந்தது அவள்து மனம்‌, அசட்டுத்தனமான வருத்தம்தான்‌. ஆனால்‌ அவர்களைப்‌ பற்றி நினைப்பதே ஒரு சோகம்‌ கலந்த சுகமாக இருக்க, அதிலேயே உழன்று கொணடிருந்தது அவளது மனது.
Download Ramanichandran PDF Novels More:
'கால்‌ வலிக்கிறதா? சாரிப்பா, சாரிம்மா சோஃபாவை விற்று விட்டேன்‌. முப்பதாயிரத்துக்கு நீங்கள்‌ வாங்கிய சோஃபா பத்தாயிரம்‌ ரூபாய்க்‌ கடனைத்‌ தீர்ப்பதற்காகக்‌: கொடுத்து விட்டேன்‌...” என்று மனதால்‌ பேசிக்‌ கொண்டிருந்தவள்‌ நிழலாடுவதை உணர்ந்து திரும்பிப்‌ பார்த்தாள்‌.

மனுபாதனைக்‌ கண்டதும்‌, முகம்‌ கடுத்து, “உங்களை யார்‌ உள்ளே விட்டது?'' என்றாள்‌ ஆத்திரத்துடன்‌. "உன்னுடைய விருந்தோம்பல்‌ பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும்‌. ஆனாலும்‌ குறைந்த பட்சமாக என்ன விஷயமாக வந்தேன்‌ என்று கேட்கலாம்‌ அல்லவா? என்றான்‌ மனுபரதன்‌.

“அனாவசியம்‌. எப்படி உள்ளே வந்தீர்கள்‌? யார்‌ உங்களை வரவிட்டத।?'' என்றாள்‌ அவள்‌ கோபமாகவே.“யாருஅில்லை. வாசலில்‌ யாருமே இல்லை. உள்ளே போய்க்‌ கேட்டுக்‌ கொள்ளலாம்‌ என்று வந்தேன்‌'' என்றான்‌ அவன்‌.

குத்தலான ஒரு பதிலை அவன்‌ எதிர்பார்த்தபோது அவள்‌ வேறு சொன்னாள்‌. ''ஆமாம்‌ வாசலில்‌ யாரும்‌ இருந்திருக்க மாட்டார்கள்‌. சிக்கனம்‌ பார்க்க வேண்டிய நிலை. சம்பளம்‌ கொடுக்க முடியாதே என்று தேவுவை வேலையை விட்டு நிறுத்திலவிட்டேன்‌'' என்று ஒரு குரூரப்‌ பாவனையுடன்‌ விளக்கினாள்‌. 

''இன்னும்‌ இரண்டு வேலையாட்களையும்‌ அப்புறம்‌ சோஃபாக்களையும்‌ விற்றுவிட்டேன்‌. அதனால்‌, முறைப்படி, உங்களை உட்காரச்‌ சொல்லி விருந்தோம்ப, என்னால்‌ முடியாதே'' என்று உதட்டைப்‌ பிதுக்கினாள்‌.

தந்‌ைத இல்லாததால்‌ அவளுக்கு எவ்வளவு கஷ்டம்‌ என்பதைச்‌ சொன்னால்‌ அவரது மரணத்துக்குக்‌ காரணமாக இருந்தவனுக்கு உறத்தும்‌ என்று எண்ணினாள்‌ போலும்‌. ஆனால்‌ சர்வ சாதாரணமாக அவள்‌ முன்னே தரையில்‌ சம்மனமிட்டு அமர்ந்து கொண்டு. ''சுயம்புலிங்கத்தின்‌ பொருளாதார நிலை 'அவ்வளவ மோசமானதாகவா இருந்தது?''- என்று கரிசனமாகக்‌. கேட்டான்‌ அவன்‌.

"சொல்லப்போனால்‌ அது பற்றிப்‌ பேசத்தான்‌ நான்‌ இத்தனை முறை இங்கு வந்தேன்‌." அதை என்னவென்று கேட்காமலே விரட்டீனாயே' என்ற குற்றச்சாட்டு தொக்கி நின்றது. "எங்கள்‌. வீட்டுப்‌ பொருளாதாரம்‌; அது பற்றி மற்றவர்கள்‌ பேச என்ன இருக்கிறது?

அதைப்‌ பற்றிப்‌ பேசுவதற்கு உனக்கு உரிமையில்லை என்று அவளும்‌ மறைமுகமாகவே கூறினாள்‌.“மற்றவர்கள்‌... சாதாரணமான சமயங்களில்‌ குடும்பத்தினர்‌ தவிர மற்றவர்கள்‌ அது பற்றிப்‌ பேசுவது அநாகரீகம்தான்‌. ஆனால்‌ அன்புக்குரியவர்களை இழந்து நிலை குலைந்து நிற்கும்‌ அறியாப்‌ பெண்‌ எதிலும்‌, ஏமாந்துவிடக்‌ கூடாதே என்று எச்சரிப்பது மனிதத்‌ தன்மை. ஏனெனில்‌ அப்படி ஏமாற்றவும்‌ எத்தனையோ பேர்‌ இருக்கிறார்கள்‌'' என்றான்‌ அவன்‌.

இதை இவன்‌ சொல்வதா? அன்புக்குரியவர்களை முன்‌ நிறுத்தி மனதை நிலை குலையவைத்து அவளை முழுக்க முழுக்க நாசமாக்கியவன்‌.“பாம்பின்‌ கால்‌ பாம்பறியும்‌!” என்றாள்‌ மயூரி குத்தலாக.“அப்படியென்றால்‌ அர்த்தம்‌ புரியவில்லையே? நான்‌ எப்போது யாரை ஏமாந்நினேன்‌?''

நல்ல கேள்விதான்‌. அவன்‌ ஏமாற்றவில்லையே? ஒளித்து மறைத்து எதையும்‌ .அவன்‌ செய்யவைக்கவில்லையே? கண்ணைக்‌ திறந்து கொண்டுதானே கிணற்றில்‌ குதிக்க வைத்தான்‌.

சோர்வடன்‌ அவள்‌ கண்களை மூடித்‌ திறக்கவும்‌, போகட்டும்‌. அது பற்றி உன்னோடு வாதாட, நான்‌ இங்கே வரலில்லை. ஒரு குடும்பத்‌ தலைவர்‌ இப்படித்‌ திடுமென இறந்துவிட்டால்‌ 'எனக்குப்‌ பணம்‌ தர வேண்டும்‌. கைமாற்று வாங்கினார்‌. முன்‌ பணம்‌ வாங்கினார்‌. அது இத ' என்று சொல்லிக்‌ கொண்டு புற்றீசல்‌ போல பலர்‌ வருவார்கள்‌. தகுந்த சான்று இல்லாமல்‌ யாருக்கும்‌ பணம்‌ கொடுத்துவி_வேண்டாம்‌ என்று எச்சரிக்கத்தான்‌ வந்தேன்‌. வீட்டைப்‌ பார்த்தால்‌ எச்சரிக்கைக்கு உரிய காலம்‌ கடந்து விட்டது போலத்‌ தோன்றுகிறதே” என்றான்‌ அவன்‌ இரங்கிய குரலில்‌.

இந்த எச்சரிக்கை ஆப்போதே கிடைத்திருந்தால்‌ 'ஐ்யோ கடனா' என்று சுலங்கி முதலில்‌ கொடுத்துவிட்ட ஓர்‌ இருபதாயிரம்‌ மிஞ்சியிருக்கக்‌ கூடும்‌. “இவ்வள கடனா' என்று கலங்கும்படியும்‌ நேர்ந்திராது. இவன்‌ மீதுள்ள வெறுப்பில்‌ பார்க்க மறுத்து அவளே இழுத்துக்‌ கொண்டது.

ஆனால்‌ இவ்வளவுக்குப்‌ பிறகு இவனை வரவேற்றுப்‌ பேசி இவன்‌ உதவியை ஏற்பதும்‌ ேகவலம்தான்‌. அதைவிட இருபதாயிரம்‌ தொலைத்தது ஒன்றும்‌ பெரிதில்லை. அத்தோடு இந்த இருபதாயிரம்‌ எத்தனை காலம்‌ அவளைக்‌ - காப்பாற்றிவிடப்‌ போகிறது?

“அப்படி ஒன்றும்‌ விட்டுவிடவில்லை என்று மற்ற பணம்‌ பட்டுவாடா செய்தது பற்றி சிறு திமிர்வடனேயே அவனிடம்‌ சொன்னாள்‌. "யோசித்து செயல்பட்டிருக்கிறாய. கெட்டிக்காரிதான்‌ ' என்று பாராட்டினான்‌ மனுபரதன்‌. ௮வனது பாராட்டுதலும்‌ அவளுக்குப்‌ பிடிக்கலில்லை.
Irulukku Pin Varum Jothi 

Info of Irulukku Pin Varum Jothi RC Novel 

Name of the Book:

இருளுக்கு பின் வரும் ஜோதி

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
236 Pages
ISBN-13:
5195182032884
Publisher:
Ramanichandran
Copyright Date:
1995
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Irulukku Pin Varum Jothi PDF

Thanks For Downloading... Irulukku Pin Varum Jothi...

Ramanichandran அவர்களின் நாவல் Irulukku Pin Varum Jothi RC Novel PDF Download என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!