-->

Iruvar Alla Oruvar Endru Theriyuma is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph PDF book download link is available.

Iruvar Alla Oruvar Endru Theriyuma PDF Download | Ramanichandran Novels

இருவர் அல்ல ஒருவர் என்று தெரியுமா என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Iruvar Alla Oruvar Endru Theriyuma Novel

நந்தகுமாரன்‌ சொன்ன திட்டத்தைச்‌ சட்டென்று நம்பாதது வந்தனா மட்டுமல்ல. அவனுடைய உயிர்‌ நண்பர்களான சுந்தரும்‌, பசுபதியும்‌ கூட, அதே போலத்‌ தான்‌ நம்பவில்லை.“என்ன உளறல்‌ இது, நந்தா? கேட்க சகிக்கவில்‌லையே. என்ன ஆயிற்று ? நேற்று வரை, உன்‌ மேல்மாடி ஒழுங்காகத்தானே இருந்தது ?'' என்று அவனை ரொம்‌பவும்‌ சந்தேகமாகத்தான்‌ பார்த்தார்கள்‌.

நண்பன்‌ சற்று அலட்சியமாகப்‌ பார்த்தபடி அசையாமல்‌ நிற்கவும்‌, '“எப்படியும்‌, இது சுத்தப்‌ பைத்தியக்காரத்‌தனம்‌, மச்சி! கொஞ்சம்‌ யோசித்துப்‌ பார்த்தால்‌, உனக்கே புரியும்‌” என்றார்கள்‌, ஒரே குரலாக!

பயன்படுத்திய வார்த்தைகளில்‌ சிறுசிறு வித்தியாசங்கள்‌ இருந்தனவே தவிர, மொத்தத்தில்‌, இருவரது கருத்தும்‌ ஒன்றேதான்‌. கடினமாக இருக்கும்‌ என்று எண்ணிய முதலும்‌ முக்‌கியமானதுமான வேலை எளிதாக முடிந்துவிடவே, நண்பர்களிடம்‌, அதை இன்னமும்‌ சற்று இலகுவாகவே எதிர்பார்த்திருந்த நந்தகுமாரனுக்கு, இப்போது கோபம்‌ வந்தது.
Download Ramanichandran PDF Novels More:


“இப்போது என்னடா சொல்லுகிநீர்கள்‌ ? என்னைப்‌பாயை பிறாண்டாத கிறுக்கன்‌ என்றா? சரி. என்னை விடுங்கள்‌? அப்படி நடக்க முடியாதது, அடியோடு ஒத்து வராது என்றால்‌, அந்தப்‌ பெண்‌ சம்மதிப்பாளா? நம்‌ முன்னே பூதமாய்‌ நின்று மிரட்டிக்‌ கொண்டிருக்கும்‌ பிரச்சினையை “பூ' என்று ஊதித்தள்ள அருமையான ஒரு வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்‌. அதைப்‌ பாராட்டா விட்டாலும்‌ பரவாயில்லை. ஒரேடியாகப்‌ பைத்தியம்‌ என்று பட்டம்‌ கட்டி விட்டீர்களே!”' என்று எரிச்சல்‌பட்டான்‌.

நண்பனது ஏமாற்றம்‌ புரிய, மற்றவர்கள்‌ அவனைச்‌ சமாதானம்‌ செய்ய முற்பட்டார்கள்‌.“அப்படியில்லை மச்சி! நீ நினைப்பது போல, இது சாதாரணமான... உன்‌ வார்த்தையையே சொல்வதானால்‌ பூ' என்று ஊதித்‌ தள்ளிவிடக்‌ கூடிய விஷயம்‌ அல்ல. இரண்டு பேரின்‌ முழு எதிர்கால வாழ்வையும்‌ பாதிப்பது என்று தொடங்கிய பசுபதியை இடைமறித்து, “அப்படியல்ல என்பதைத்தான்‌ முதலிலேயே சொன்னேனே! யாருக்கும்‌ ஒரு பாதிப்பும்‌ நேராது!” என்று நந்தா பொறுமையிழந்து கூறினான்‌.

“எப்படி மச்சீ? நீயே, உன்‌ திட்டத்தைப்‌ பற்றி யோசித்‌துப்‌ பார்‌. யாரோ ஒருத்தி! அவளை மணந்து கொண்டால்‌, உன்‌ வீட்டில்‌ தீவிரமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்‌ திருமண ஏற்பாடுகள்‌ அப்படியே நின்று போகும்‌என்கிறாய்‌.

அந்த அளவில்‌, இது முழுக்க முழுக்க சரிதான்‌. ஆனால்‌, பின்‌ விளைவுகள்‌? முதலில்‌ உன்‌ அப்பா! முகத்தில்‌ கரி பூசிய மாதிரி, அவருக்கு எவ்வளவு கோபம்‌ வரும்‌ ?'' என்று பசுபதி எடுத்துச்‌ சொன்ன விஷயம்‌, நந்தகுமாருக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.

“டேய்‌, என்‌ அப்பா கோபம்‌ எனக்குத்‌ தெரியாதா? என்ன, இப்போது கூடக்‌ கொஞ்சம்‌ திட்டுவார்‌, அவ்‌வளவுதானே? பொறுத்துக்‌ கொண்டால்‌ போயிற்று!“இல்லை நந்தா. முகத்தில்‌ முழிககாதே என்று, வீட்டை விட்டே விரட்டலாம்‌.”

“அதெல்லாம்‌ மாட்டார்‌. அவர்‌ கோபத்தை எத்தனை முறை பார்த்துவிட்டேன்‌! என்‌ அன்பு மச்சான்களா, என்‌ அப்பாவுக்கு, நான்‌ ஒரே பிள்ளை! ஏக புத்திரன்‌! அக்கா தங்கைகள்‌ கூடக்‌ கிடையாது! கொஞ்ச நாள்‌ கூட வேண்டாம்‌, ஒரே நாளில்‌ அவரது கோபம்‌ மாயமாக ஈறைந்து போகும்‌!'”' என்றான்‌ அவன்‌ சர்வ நிச்சயமாக.

"ஓ. பெறற மனம்‌ பித்தாகும்‌! சரிடா, அவரை விடு. அதப்‌. பெண! திருமணம்‌ பெயரளவில்தான்‌ என்கிறாய்‌. உன்‌ பெற்றோர்‌, மனோகரி குடும்பத்தை நம்ப வைப்பதற்காகச்‌ சில காலம்‌, ஒரே இடத்தில்‌ வசிக்கப்‌ போவதாகவும்‌, அப்புறம்‌ அவரவர்‌ வழியில்‌ போகப்‌ போவதாகவும்‌ சொல்லுகிறாய்‌. அதனால்‌, அவளது பேர்‌ கெட்டு விடாதா? அவள்‌, ஒரு பெண்ணின்‌ வாழ்க்கை வீணாகுமே! அதை நினைத்தாயா?”

''ஆகாதுடா சாமிங்களா, ஆகாது. பிற்காலத்தில்‌ வேறு வாழ்க்கை அமையும்போது, நடந்ததை நேரில்‌ வந்து எடுத்துச்‌ சொல்ல நான்‌ முன்‌ வருவதோடு, அவள்‌ தொடர்ந்து நல்லவளாகவே இருந்தால்‌, ஒரு சாதாரண வைத்தியப்‌ பரிசோதனையும்‌, அதை நிரூபிக்கும்‌. அதே போல எனக்கு ஏதாவது என்றால்‌, அவளும்‌ வந்து வேண்‌டியதைச்‌ செய்வதாகச்‌ சொல்லுகிறாள்‌. போதுமா? எல்லாம்‌ நாங்கள்‌ விலாவாரியாகப்‌ பேசியாயிற்று.”

இந்த அளவுக்கு, விஷயம்‌ போய்‌ விட்டதா என்பது போல, சுந்தரும்‌ பசுபதியும்‌ ஒருவரை ஒருவர்‌ பார்த்துக்‌ கொண்டனர்‌. "நந்தா, நாங்கள்‌ உன்‌ நண்பர்கள்‌, நல்லதை கெட்‌பதை எடுத்துச்‌ சொல்வது எங்கள்‌ கடமை. இதில்‌, இன்‌னும்‌ சில அபாயங்கள்‌ இருக்கின்றன” என்று பசுபதி, தொடங்கினான்‌. “நீயும்‌ அந்த வந்தனாவும்‌, பெரும்‌பாலும்‌ ஒரே இடத்தில்‌ இருக்கப்‌ போகிறீர்கள்‌.

பொதுவாக இந்த மாதிரி வயதில்‌, ஓர்‌ ஆணும்‌, பெண்ணும்‌ தொடர்ந்து பார்த்துக்‌ கொண்டே இருக்கும்போது, ஒருவருக்கொருவர்‌ பேரழகாகத்‌ தோன்றி,. காதலிக்கத்‌ தொடங்கி பரிடுவார்களாம்‌. இது இயற்கையின்‌ தத்துவம்‌ என்று படித்திருக்கிறேன்‌. உங்கள்‌ இருவர்‌ வயதையும்‌ சற்று ஈரணிப்‌ பார்த்துக்‌ கொள்‌” என்று எச்சரித்தான்‌.

லேசாக முறுவலித்து '*வந்தனா அழகில்லை என்று யாரும்‌ சொல்ல முடியாது. ஆனால்‌, நாங்கள்‌ யதார்த்தவாதிகள்‌, பதி. இது ஒரு தொழில்‌ உடன்படிக்கை, அப்படிக்‌ கூடச்‌ சொல்ல முடியாது. அதுகூடத்‌ தொடரக்‌கூடியது. இது வெறும்‌ தேர்தல்‌ உடன்பாடு. அவ்வளவுதான்‌. ஜெயித்ததும்‌, அவரவர்‌ வாழ்வு அவரவருக்கு என்று பிரிந்து விடுவோம்‌.

அவளுக்கு படிப்புக்‌ கட்டணமும்‌, தொடர்ந்து படிப்பு முடியும்‌ வரையில்‌ வாழ்க்கைச்‌ செலவையும்‌ தருவது என்‌ பொறுப்பு. வந்தனா செய்ய வேண்டியது, என்‌ கையால்‌ தாலியை ஏற்று, என்‌ திருமணத்தை நிறுத்தி, மனோகரி சுந்தரோடு இணைவதற்கு உதவ வேண்டும்‌. இது எங்கள்‌ ஒப்பந்தம்‌. இதற்கு மேல்‌, உணர்வு பூர்வமாக எந்த உறவும்‌, எங்களுக்குள்‌ கிடையாது'' என்றான்‌ நந்தகுமாரன்‌.

“ஒருவேளை... ஒருவேளை, திருமணம்‌ ஆன பிறகு, விலகிப்‌ போக மாட்டேன்‌, விலக வேண்டுமானால்‌ பணம்‌ கொடு என்று வந்தனா கேட்டால்‌? மனைவி என்றால்‌ சொத்தையே பிடுங்க முடியுமே! அவள்‌ நல்ல குடும்பப்‌ பெண்ணே என்றாலும்‌...” என்று இழுத்தான்‌ பசுபதி.


“என்னடா பெரிய நல்லவள்‌? அவள்‌ அண்ணன்‌ மாரின்‌ புத்தியில்‌ பாதி போதுமே, இவளும்‌ வில்லியாவதற்கு! இதையே நானும்‌ யோசித்தேன்‌, யோசித்து, இன்னின்ன மாதிரி எங்கள்‌ ஒப்பந்தம்‌ என்று, அவளிடம்‌ எழுதியும்‌ வாங்கி விட்டேன்‌” என்று பெருமையோடு தெரிவித்தான்‌ நந்தகுமாரன்‌! விழி விரிய 'வாவ்‌!' என்றான்‌ பசுபதி. '“எல்லா வழியையும்‌ கவர்‌ பண்ணி விட்டாய்‌! நீ பெரிய ஆள்தான்‌.
iruvar alla oruvar endru theriyuma pdf, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Iruvar Alla Oruvar Endru Theriyuma

Info of Novel

Name of the Book:

இருவர் அல்ல ஒருவர்

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
264 Pages
ISBN-13:
5195182032884
Publisher:
Ramanichandran
Copyright Date:
1999
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Iruvar Alla Oruvar Endru Theriyuma என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!