-->

Kadhal Konda Manathu is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Kadhal Konda Manathu PDF book download link is available.

Kadhal Konda Manathu PDF Download | Ramanichandran Novel

காதல் கொண்ட மனது என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Kadhal Konda Manathu Novel

இந்துமதியின்‌ திருமணத்தைச்‌ சுரேசனோடு நிச்சயித்தார்‌, தர்மராஜன்‌. சுரேசனுடைய குடும்பமும்‌ மகிழ்ச்சியோடு இந்த ஏற்பாட்டுக்கு ஒப்பியது. அதிலும்‌, சுரேஷுடைய தாயார்‌, எப்போதுமே இந்துமதியை, '*என்‌ பிரிய மருமகளே!'' என்றுதான்‌ அழைப்பாள்‌. அவ்வப்போது, இந்துமதியை வெளியே அழைத்துப்‌ போவாள்‌. ஏதாவது பலகாரம்‌ செய்தால்‌, இந்துவுக்கென்று கொஞ்சம்‌ கொண்டு வந்து கொடுப்பாள்‌.

எல்லாம்‌ நன்றாகத்தான்‌ இருந்தது. ஆனால்‌, ஒரு நாள்‌ திடுமென வந்து, 'பணத்துக்காகச்‌ சின்னப்‌ பிள்ளைகளைக்‌ கொல்லுகிற குடும்பத்தில்‌ பெண்‌ எடுக்க முடியாது!'' என்று சுரேசனுடை பெற்றோர்‌ கூறவும்‌ தர்மராஜன்‌ அதிர்ந்து போனார்‌.

பால்‌ பவுடரைப்‌ பற்றிய கதையைக்‌ கேட்டுப்‌ பேசுகிறார்கள்‌ என்று எண்ணி, அதெல்லாம்‌ வெறும்‌ வதந்தி என்று அவர்களுக்கு எடுத்துச்‌ சொன்னார்‌. ஆனால்‌, “அது வதந்தியாக இருக்கலாம்‌. ஆனால்‌, நீங்கள்‌, உங்கள்‌ சொத்து பத்துகளை எல்லாம்‌ ஈடு வைத்துக்‌ கடன்‌ வாங்கி இருப்பதும்‌, தொழிலிலும்‌ மேலும்‌ மேலும்‌ நட்டப்பட்டுக்‌ கொண்டிருப்பதும்‌ பொய்‌ அல்லவே! அப்போது, உங்கள்‌ பேத்தியை என்‌ மகனுக்குக்‌ கட்டினால்‌, அவனுக்கு என்ன கிடைக்கும்‌? பட்டை நாமமா?

கோவிந்தா, கோ... விந்தாவா? வேண்டாம்‌, சாமி, வேண்டாம்‌! உங்களுக்கு ஒரு கும்பிடு, உங்கள்‌ பேத்‌திக்கு ஒரு கும்பிடு. வருகிறோம்‌!'' என்று இரு கைகளையும்‌ பட்டென்று தட்டி விடை பெற்றனர்‌, அவர்கள்‌.


“இல்லை! அப்படிச்‌ சொல்லாதீர்கள்‌! ஒரு பெண்‌ணின்‌ வாழ்வு!'' என்று கெஞ்சுதலாக ஏதோ சொல்ல முயன்றவரின்‌ . கையை, இந்துமதியின்‌ கை இறுகப்‌ பற்றியது. ''சொத்துக்குக்‌ கொசுறாகப்‌ பெண்ணை மணக்கிறவர்‌களின்‌ வீட்டில்‌ வாழ எனக்குப்‌ பிரியமில்லை, தாத்தா!'' என்றாள்‌ அவள்‌.

அந்த நேரத்து வேகத்தில்‌ சொல்லிவிட்டாலும்‌, உள்ளூர அவளுக்கு வலியே. அவளுக்காகக்‌ குடும்பத்தோடு இங்கேயே வந்து விடப்‌ போவதாகத்‌ தாயும்‌ மகனுமாகச்‌ சொன்னதெல்லாம்‌, தாத்தாவின்‌ இந்த வீடு, மற்ற சொத்துக்காகத்‌ தானா? 'உன்‌ அம்மா இந்த வீட்டை விட்டு, உன்னோடு வந்து இருக்க மாட்டார்கள்‌.
Download Ramanichandran PDF Novels More:

புருரனை இழந்த பெண்ணிடம்‌ இருந்து, மகளையும்‌ பிரிக்கிற பாவத்தை நாங்கள்‌ செய்யமாட்டோம்‌. அதனால்‌ எல்லோருமாக அங்கேயே இருந்து விடலாம்‌!' என்றதைப்‌ பெரிய தியாகமாக எண்ணினாளே கடைசியாக, அது இந்த வீட்டைக்‌ கபளீகரம்‌ செய்யும்‌ திட்டமாக அல்லவா இருந்திருக்கிறது!

வீடு மட்டுமல்ல, தாத்தாவின்‌ எல்லாச்‌ சொத்துக்களையுமேதான்‌ அவர்கள்‌ குறி வைத்திருக்க வேண்டும்‌. வீட்டையும்‌, தோட்டத்தையும்‌, தாத்தாவின்‌ மற்ற சொத்துகளையும்‌, அவைகளை எப்படியெப்படி மாற்றிப்‌ பிரித்து விற்றால்‌, எத்தனை கோடிகள்‌ கிடைக்கக்கூடும்‌ என்பது பற்றியெல்லாம்‌ சுரேசன்‌ கண்கள்‌ பளபளக்கப்‌ பேசியதை, அவளுடைய தாத்தாவுக்குரிய பாராட்டாக எடுத்துக்‌ . கொண்டது, அவளுடைய முட்டாள்தனம்‌ அல்லவா?

அவ்வப்போது, இந்த நினைவுகளினால்‌ முகம்‌ சோர்ந்து விடும்‌ பேத்தியைப்‌ பார்த்துப்‌ பார்த்துத்‌ தாத்தாவின்‌ நெஞ்சு கனத்துப்‌ போயிற்று. இது அவரால்‌ வந்த சோகம்‌ அல்லவா? சிட்டுக்‌ குருவியாகச்‌ சுற்றிக்‌ கொண்டிருந்த பெண்‌! கல்லூரி, தோழிகள்‌, வீடு, தோட்டம்‌ என்று மகிழ்ச்சியோடு திரிந்த வளை, கல்யாணம்‌ அது இதென்று சொல்லி, இப்போது மனம்‌ கலங்க வைத்துவிட்டாரே!

பேத்தியின்‌ வாட்டம்‌ ஒரு புறம்‌ என்றால்‌, தொழில்‌ துறை சண்டிக்‌ குதிரையாகப்‌ படுத்துக்‌ கொண்டது. இவை அனைத்தையும்‌ விட, உடல்‌ நிலையின்‌ பின்னடைவு அபாய முரசு கொட்டி அவரை அதிர வைத்தது. இன்னும்‌ அதிக காலம்‌ அவர்‌ இருந்து பார்க்க முடியாது.

அன்றைய கனவில்‌ வாழும்‌ மகள்‌! இன்றைய நனவில்‌ வாடும்‌ பேத்தி! செலவுக்கான பணத்தைக்‌ கொடுத்தால்‌, வீட்டுப்‌ பொறுப்பைத்‌ தேவகி கவனித்துக்‌ கொள்வாள்‌. சிக்கனமாகக்‌ கூட இருப்பாள்‌. ஆனால்‌, இவர்களது வாழ்க்‌கைப்‌ பொறுப்பு? அதற்கு அவர்தானே வழி செய்தாக வேண்டும்‌?

கடவுள்‌ இருக்கிறார்தான்‌! ஆனால்‌, எல்லாம்‌ 'அவன்‌' பார்த்துக்‌ கொள்வான்‌ என்று சும்மா இருக்கத்‌ தர்மராஜனுக்குத்‌ தைரியம்‌ இல்லை. வெகுவாக யோசித்து விட்டுத்‌ தயானந்தனோடு டெலிபோனில்‌ பேச முயன்றார்‌.

ஆனால்‌, அவனது தொழில்‌ முறையே அப்படித்தானோ, என்னவோ? சூறாவளிப்‌ பயணம்‌ மேற்கொண்டு, உள்நாடு, வெளிநாடு என்று சுற்றிக்‌ கொண்டிருந்த அவனை, அவரால்‌ பிடிக்க முடியவே இல்லை.

கடைசியாக அவர்‌ நம்பிக்கை இழந்து ஓய்ந்து, தயானந்தனுக்கு அவருடன்‌ பேசப்‌ பிரியம்‌ இல்லையோ என்று, அது வேறு எண்ணிக்‌ கூசிக்‌ குறுகி, இன்னமும்‌ உடம்பைக்‌ கெடுத்துக்‌ கொண்டிருக்கையில்‌, அவனே அவருக்குப்‌ போன்‌ செய்தான்‌.

தூரக்‌ கிழக்கு நாடுகளில்‌, புதிதாக ஒரு திட்டத்தைச்‌ செயல்‌ படுத்திக்‌ கொண்டிருந்தானாம்‌. தீவிரமான வேலையாம்‌. அது முடிந்ததும்‌, தொழிலில்‌ இறுக்கம்‌ தளர்வதற்காகப்‌ பத்து நாட்கள்‌ விடுமுறை எடுத்துக்‌ கொண்டு, மத்திய தரைக்‌ கடல்‌ பகுதியில்‌ போட்டிங்‌, ஆழ்கடல்‌ மூழ்கல்‌ என்று சுற்றப்‌ போய்விட்டானாம்‌. அதனால்‌, அவர்‌ அவனைத்‌ தேடிய செய்தி, அவனுக்குக்‌ கிடைக்கத்‌ தாமதம்‌ ஆகிவிட்டதாம்‌.

"ஆண்டுதோறும்‌ இது வழக்கம்தான்‌, சார்‌. விடுமுறையில்‌ இருக்கும்போது, என்‌ தந்‌ைத தவிர, யாரும்‌ என்னை அணுக முடியாது! போன்‌ நம்பர்கூட, யாரிடமும்‌ கொடுப்பதில்லை.

எனவே, அங்கிருந்து திரும்பிய பிறகுதான்‌ நீங்கள்‌ என்னைத்‌ தேடியது தெரிந்தது!'' என்று தாமதத்தின்‌ காரணத்தைத்‌ தெரிவித்து விட்டு, ''சொல்லுங்கள்‌, சார்‌, உங்களுக்கு நான்‌ என்ன செய்யக்‌ கூடும்‌?'”' என்று, தன்‌ இயல்பான கம்பீரக்‌ குரலில்‌, மரியாதை கலந்து தயானந்தன்‌ கேட்டபோது, பதில்‌ சொல்ல முடியாமல்‌, தர்மராஜனுக்குத்தான்‌ தொண்டை அடைத்துக்‌ கொண்டது.

"சார்‌... என்று அவன்‌ மீண்டும்‌ கேட்கவும்‌, தொண்டையைச்‌ செருமிக்கொண்டு, அவர்‌ கேட்டே விட்டார்‌. ''என்ன செய்ய வேண்டும்‌, என்ன செய்ய வேண்டும்‌ என்று அடிக்கடி கேட்பீர்களே, தம்பி. என்‌ பேத்தியை மணந்து கொள்கிறீர்களா?” என்று முன்னுரை,

முகவுரை ஏதும்‌ இல்லாமல்‌ பட்டென்று கேட்டு விட்டார்‌. தயானந்தன்‌ வெகுவாகத்‌ திகைத்துப்‌ போனான்‌. ஒரு சிறு அமைதியின்‌ பின்‌, ''சா..ர்‌, என்னைப்‌ பற்றி மற்றவர்களை விட உங்களுக்கு நன்றாகத்‌ தெரியும்‌. மூளை கெட்டு, என்ன மாதிரி மடத்தனம்‌ செய்ய இருந்தேன்‌ என்று... அதன்‌ பிறகும்‌...” என்று இழுத்தான்.

“தப்பே செய்யாதவனை விடத்‌ தப்பு செய்து திருந்தியவனை நம்பலாம்‌. ஏனென்றால்‌, சூடு பட்டது எளிதில்‌ மறவாது. ஆனால்‌... உங்களுக்கு அவ்வளவாகப்‌ பிடிக்கவில்லை என்றால்‌, நான்‌ வற்புறுத்த மாட்டேன்‌, தம்பி!'” என்றார்‌ தர்மராஜன்‌.

"ஐயோ, அப்படியில்லை சார்‌. என்னைப்‌ பொறுத்த வரையில்‌, நீங்கள்‌ தருவது வரம்‌. ஆனால்‌, உங்கள்‌ பேத்தியின்‌ விருப்பம்‌ எப்படி என்று... அது பற்றிக்‌ கேட்டுக்‌ கொண்டீர்களா, சார்‌?'' என்று கேட்டான்‌ அவன்‌. அவரும்‌ புரிந்து கொண்டார்‌. அன்று, வருங்கால மாமியார்‌ என்று யாரையோ சொன்னாயே, அது பற்றிப்‌ பேத்தியின்‌ மனநிலை என்ன என்று கேட்கிறான்‌.

kadhal konda manathu novel free download, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Kadhal Konda Manathu Novel

Info of Kadhal Konda Manathu Novel 

Name of the Book:

காதல் கொண்ட மனது

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
273 Pages
ISBN-13:
5195182032885
Publisher:
Ramanichandran
Copyright Date:
2004
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Kadhal Konda Manathu Novel

Thanks For Downloading... Kadhal Konda Manathu Novel...

Ramanichandran அவர்களின் நாவல் Kadhal Konda Manathu Novel Free Download PDF என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!