-->

Kadhal Oruvanai Kaipidithen is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Kadhal Oruvanai Kaipidithen PDF book download link is available.

Kadhal Oruvanai Kaipidithen PDF Download | Ramanichandran Novel

காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன் என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Kadhal Oruvanai Kaipidithen Novel

திலோத்தமா எதிர்பார்த்ததுபோல, சித்தரஞ்சன்‌ அவளை அழைத்துச்‌ சென்ற இடம்‌ நகைக்கடைதான்‌. புராதனப்‌ பெருமையை நீர்க்க விடாமல்‌, ஐம்பது ஆண்டுகளுக்கும்‌ மேலாக இன்றளவும்‌ காப்பாற்றிக்‌ கொண்டிருக்கும்‌, தரமான நகைகளுக்குப்‌ பெயர்‌ பெற்ற கடை, தரமான வைரங்கள்‌, அவர்களது தனிப்‌ பெருமை!

விலையும்‌ அதற்குச்‌ சரியாக, அதிகமாகவே இருக்கும்‌ என்று, திலோத்தமா கேள்விப்பட்டிருக்கிறாள்‌. அதனாலேயே, செந்திருவும்‌ அவளும்‌ அந்தக்‌ கடையைத்‌ தவிர்த்திருக்கிறார்கள்‌. கட்டுப்படியாகாது என்று. இப்போதும்‌, அங்கே செல்ல அவளுக்குத்‌ தயக்கமாகவே இருக்க, இறங்க முயற்சி செய்யாமல்‌ அப்படியே அமர்ந்திருந்தாள்‌!

கேள்வியாக நோக்கியவனிடம்‌ அவள்‌ காரணத்தைச்‌ சொல்ல “பரவாயில்லை, வா. இங்கே உள்ள தரத்துக்குச்‌ சற்று அதிகம்‌ கொடுப்பதில்‌ தப்பு இல்லை என்று அம்மா சொல்லுவார்கள்‌. என்னைக்‌ கேட்டால்‌, பிடித்துப்‌ போனால்‌, தரம்‌ இல்லாதது என்று தெரிந்தாலும்‌, என்ன விலை வேண்டுமானாலும்‌ கொடுக்கலாம்‌ என்பதுதான்‌'' என்றான்‌, சித்தரஞ்சன்‌.

வியப்புடன்‌ நோக்கி, ''அதெப்படி ரஞ்சன்‌? என்னதான்‌ பிடித்திருந்தாலும்‌, தரம்‌ குறைவானது என்று தெரிந்த பிறகும்‌, அதிக விலை கொடுப்பது, அசட்டுத்தனம்‌ ஆகாதா?” என்று கேட்டாள்‌ திலோத்தமா.

"என்ன செய்வது?'' என்று தோளை குலுக்கினான்‌ சித்தரஞ்சன்‌. தொடர்ந்து “ஒரு பொருளின்‌ முக்கியத்துவம்‌, அந்தப்‌ பொருளின்‌ தரத்தில்‌ மட்டும்‌ இருப்பதில்லையே! ஒன்று எவ்வளவு உயர்ந்த ரகமாக இருந்தாலும்‌, பிடிக்காத பொருளாக இருந்தால்‌, அதை நாம்‌ வாங்குவது இல்லை! அதே பொருள்‌ பிடித்துப்‌ போய்‌ விட்டால்‌, சரி, ஏதோ தொண்ணுறு சதவீதம்‌ இருந்தாலும்‌ பரவாயில்லை என்று வாங்கத்தானே, செய்வோம்‌? எத்தனை தினுசு உயர்வகை ஐஸ்க்ரீம்‌ தினுசுகள்‌ வந்து விட்டபோதும்‌, இன்னமும்‌ வெறும்‌ குச்சி ஐசை விரும்பி வாங்கி ரசித்து உண்பவர்கள்‌ எவ்வளவு பேர்‌ இருக்கிறார்கள்‌?'” என்று கேட்டான்‌ சித்த ரஞ்சன்‌. யோசித்துப்‌ பார்த்தாள்‌ அவள்‌.

அவள்‌ யோசிக்கும்போதே, ''நிறமும்‌, டிசைனும்‌ பிடித்து விட்டால்‌, கொஞ்சம்‌ மட்டமான துணியையும்‌ வாங்குவது இல்லையா?”” என்று மீண்டும்‌ வினவினான்‌ அவன்‌. என்னவோ பெரிய விஷயத்தைக்‌ காரிய காரணங்களோடு வாதாடி நிலை நிறுத்துவது போல! கனம்‌ கோர்ட்‌டார்‌ அவர்களே என்று தொடங்கச்‌ சொல்லவில்லை!

அவ்வளவுதான்‌! அந்த அளவுக்குத்‌ தீவிரமான வாதம்‌! ஆச்சரியமாகத்‌ திரும்பிப்‌ பார்த்தவளுக்கு மனதில்‌ வேறு ஓடியது. சித்தரஞ்சனது கட்டுமானத்‌ தொழில்‌. இதில்‌, சற்றுத்‌தரம்‌ தாழ்ந்த பொருள்‌ எதையோ அவசரத்‌ தேவைக்கு வாங்கிவிட்டு அதை நியாயப்படுத்துவதற்காகச்‌ சப்பைக்‌ கட்டு கட்டுகிறாளோ?

தந்தையிடம்‌ வாங்கிக்‌ கட்டிவிட்டு, அதே விவாதங்களை, இப்போது அவளிடமும்‌ தொடர்கிறான்‌ போலும்‌! ஆனால்‌, கட்டிடத்‌ தொழிலில்‌ தரக்குறைவு மிகவும்‌ ஆபத்தில்‌ கொண்டு போய்‌ விடக்‌ கூடும்‌ என்பார்களே! தொழிலில்‌ இவனுக்கு இருக்கும்‌ நல்ல பெயர்‌ கெட்டு விடக்‌ கூடாதே என்றிருந்தது, அவளுக்கு. இதை மெல்லச்‌ சொல்ல வேண்டும்‌!

ஆனால்‌ தந்தையிடம்‌ ரஞ்சன்‌ திட்டு வாங்கியிருப்‌பானோ என்ற எண்ணமே வேதனையைத்‌ தர, தலையசைத்து ''ஒருவேளை, நீங்கள்‌ சொல்வது போலவும்‌ இருக்கலாம்‌! விடுங்கள்‌. இப்போது விலையைப்‌ பற்றிப்‌ பொருட்படுத்தாமல்‌, இங்கேயே வாங்கலாம்‌ என்பது உங்கள்‌ எண்ணம்‌. சரி வாருங்கள்‌, போவோம்‌!'' என்று காரை விட்டு இறங்கினாள்‌ திலோத்தமா.

“அது மட்டுமல்ல...” என்று ஏதோ சொல்லத்‌ தொடங்கிய சித்தரஞ்சன்‌ அதற்கு மேல்‌ எதுவும்‌ சொல்லாமல்‌, பேச்சை நிறுத்திவிட்டுத்‌ தானும்‌ இறங்கி. கார்க்‌ கதவுகளை ரிமோட்‌ மூலம்‌ பூட்ட்‌, இருவரும்‌ சேர்ந்து, கடையை நோக்கிச்‌ சென்றனர்‌.

அவன்‌ எதைச்‌ சொல்லத்‌ தொடங்கிவிட்டு நிறுத்தினான்‌? அது என்னவென்று அவனிடம்‌ கேட்கும்‌ ஆவலைத்‌ திலோ கஷ்டப்பட்டு அடக்கிக்‌ கொண்டாள்‌. என்னவோ, அவன்‌ சொல்ல வந்தது, அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்‌ கூடியது அல்ல என்று, அவளுக்கு வெகு நிச்சயமாகத்‌ தோன்றியது.

யோசித்து, அவனே நிறுத்திவிட்ட பிறகு, அதைப்‌ போய்க்‌ குடைவானேன்‌? அதைவிட... அதற்குள்‌ உரிமையாளரே முன்‌ வந்து வரவேற்கவும்‌, அதுபற்றி அவளால்‌, மேலே யோசிக்க முடியாமல்‌ போயிற்று. அந்த உற்சாக வரவேற்பாலும்‌, அதைத்‌ தொடர்ந்து நடந்த பல நிகழ்ச்சிகளாலும்‌!

சித்தரஞ்சனுடைய தாயார்‌, மகன, மகனுடைய வருங்கால மனைவியின்‌ வரவு பற்றி, நகைக்கடை உரிமையாளருக்கு போன்‌ பண்ணிச்‌ சொல்லியிருந்தாள்‌. எனவே அறிமுகங்கள்‌ முடிந்ததும்‌ “அம்மா சொன்னார்‌கள்‌ சார்‌. சில அருமையான செட்டுகள்‌ எடுத்து வைத்‌திருக்கிறேன்‌. உள்ளே, நம்‌ அறைக்கு வந்து பாருங்கள்‌.

வாருங்கள்‌! என்று கடையின்‌ பின்புறமாக, இருந்த அவரது தனியிடத்தைச்‌ சைகையால்‌ காட்டி அழைத்தார்‌, கடைக்காரர்‌. கடை உரிமையாளரே வந்து வரவேற்ற விதமும்‌, அவரது “அருமையான செட்களும்‌' திலோத்தமாவுக்குக்‌ கொஞ்சம்‌ சங்கடமான உணர்வை அளித்தது.
Download Ramanichandran PDF Novels More:
அவர்கள்‌ இருவர்‌ வீட்டிலும்‌, ஒப்புதல்தான்‌. இவர்கள்‌ இருவரைப்‌ பற்றியோ, கேட்கவே வேண்டாம்‌! ஆனாலும்‌, ரொம்பப்‌ பெரிய அளவில்‌ அவனிடம்‌ பரிசு பெறுவதற்கு, அவளுக்கு ஒரு மாதிரி தயக்கமாக இருந்தது! எனவே, கடைக்காரரின்‌ அழைப்பை ஏற்றுத்‌ திரும்பியவனின்‌ சட்டையை லேசாகப்‌ பற்றி நிறுத்தி, “இங்கே, வெளியேயே, அழகாக நிறைய இருக்கிறதே! மு... முதலில்‌ இதிலேயே பார்ப்போமே!'' என்று கூறினாள்‌.

“இதெல்லாம்‌ என்னம்மா, சாதாரண நகைகள்‌! பானுமதி அம்மா மருமகளுக்கு ஏற்றதாகப்‌ பார்க்க வேணும்‌ என்‌றால்‌...“இல்லை, அதை அப்புறமாக அ... அத்தையோடு வந்தே பார்த்துக்‌ கொள்கிறேன்‌. இப்போது இதையே பார்க்கிறேன்‌'' என்று முடித்துவிட்டு, அருகில்‌ இருந்த“கவுண்டரில்‌' உள்ளவற்றை ஆராயலானாள்‌ திலோ.

கேட்பதை எடுத்துக்‌ காட்டுமாறு, கடைச்‌ சிப்பந்திகளைக்‌ கடைக்காரர்‌ விரட்டிக்‌ கொண்டிருக்கையில்‌“பணத்தைப்‌ பற்றி யோசிக்கத்‌ தேவையில்லை, தெரியுமல்லவா?”” என்று அவளது காதோரமாய்‌ குனிந்து கிசுகிசுத்‌தான்‌ சித்தரஞ்சன்‌.

பணத்தைப்‌ பற்றி யோசிக்காமல்தான்‌, ஊர்‌ ஊராக அலைந்து தொழிலை வளர்த்துக்‌ கொண்டிருக்கிறானாக்கும்‌? சம்பாதித்தது போதும்‌ என்று, சும்மா வீட்டில்‌ இருக்கவில்லையே!

ஆனால்‌, அவனோடு மீண்டும்‌ ஒரு வாக்குவாதத்தைத்‌ தொடங்க மனமற்று “இங்கே இருப்பவைகளை எனக்குப்‌ பிடித்திருக்கும்போது, வேறு எதற்கு?'” என்றதோடு நிறுத்திக்‌ கொண்டாள்‌ திலோ.

திலோத்தமா பொதுவாகக்‌ கையில்‌ இருக்கும்‌ பணத்‌துக்குச்‌ சரியாகப்‌ பெரிய, விலை உயர்ந்த நகையாகப்‌ பார்த்து வாங்குவதைவிடத்‌ தனக்கு மிகவும்‌ பொருத்தமாக இருப்‌பதையே தேர்ந்தெடுப்பது வழக்கம்‌.

kadhal oruvanai kaipidithen novel, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Kadhal Oruvanai Kaipidithen

Info of Kadhal Oruvanai Kaipidithen Novel

Name of the Book:

காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன்

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
328 Pages
ISBN-13:
5195182032889
Publisher:
Ramanichandran
Copyright Date:
2007
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Kadhal Oruvanai Kaipidithen Novel PDF

Thanks For Downloading... Kadhal Oruvanai Kaipidithen...

Ramanichandran அவர்களின் நாவல் Kadhal Oruvanai Kaipidithen Novel Free Download என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!