-->

Kadhal Vaibogame is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Kadhal Vaibogame PDF book download link is available.

Kadhal Vaibogame PDF Download | Ramanichandran Novel

காதல் வைபோகமே என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Kadhal Vaibogame Novel

புதியவர்களை, அவளது மலர்த்த முகம்‌ வசீகரித்துத்‌ தான்‌ பழக்கம்‌. அனால்‌, இவன்‌ எடுத்த எடுப்பில்‌ எரிந்து விழுகிறானே. அப்படி. அவள்‌ என்ன தப்பு செய்துவிட்டாள்‌? யோசிக்கும்போதே, தான்‌ வழியில்‌ நிற்பதைச்‌ சாருமதி உணர்ந்தாள்‌. உடனேயே, “சாரி...!” என்றபடி, அவசரமாசு அவனது வழியை விட்டு விலகிக்‌ கொண்டாள்‌.

அவன்‌ பேசாமல்‌ தன்‌ வழியே போயிருக்கலாம்‌. அனால்‌, “நடுவழியில்‌ நின்று நாடகம்‌ போடாதிருந்தால்‌, போகிற வருகிற மனிதர்களுக்குத்‌ தொல்லையாக இராது!” என்று ஓர்‌ அம்பை எய்துவிட்டுத்தான்‌ போனான்‌. இவன்தான்‌ அவன்‌, அதே கடுவன்‌ பூனை.

அன்று அவன்‌ பேசியது சாருவை ரொம்பவே உறுத்திவிட்டது. மாலை வாங்குவதற்காக அவளோடுகூட வந்த ரஞ்சனிடம்‌ புலம்பித்‌ தீர்த்துவிட்‌டாள்‌.“மூன்னே பின்னே தெரியாத யாரோ ஒருத்தன்‌. என்னிடம்‌ எவ்வளவு கடுமையாகப்‌ பேசினான்‌. என்னவோ, வேண்டும்‌ என்று, அவனது வழியை மறைத்துக்‌ கொண்டு நின்ற மாதிரியல்லவா, பேசினான்‌. தொல்லை என்றானே.

அவனுக்குத்‌ தொல்லை கொடுப்பதுதான்‌ எனக்கு வாழ்வின்‌ லட்சியமா? கொழுப்புதானே! அதற்காக, நீ ஏன்‌ அவனைத்‌ திட்டவில்லை?” என்று அத்தை மகனைச்‌ சாரடூனாளன்‌.

“திட்டுவதா? அந்த ஆளையா? ஐயோ! அவனைப்‌ பார்த்தால்‌ மல்யுத்தம்‌ தெரிந்தவன்‌ போலத்‌ தோன்றியதே! அதற்கு மேல்‌, அவனிடம்‌ வாயைத்‌ திறப்பேனா? என்னை என்னவென்நு நினைத்தாய்‌? உன்‌ அருமை அத்தைக்கு, நான்‌ ஒரே பிள்ளை தெரியுமா? உருப்படி யாக வீ டு போய்ச்‌ சேர வேண்டுமே என்றுதான்‌, வீர தீரனே என்றாலும்‌, யாம்‌ சற்று ஒதுங்கியே இருந்தோம்‌, மீன்‌ விழியாளே!” என்று முடித்தான்‌ ரஞ்சன்‌.

“நேற்று அம்மா வைத்த மீன்‌ குழம்பு ஏன்ன ருசி, தெரியுமா! என்று நெட்டையும்‌ விட்டான்‌. ஏய்‌, போடா!” என்று சிரிப்பும்‌, கோபமுமாகச்‌ சொன்னவளுக்கு அப்போதும்‌ தாங்கவில்லை. கொஞ்சம்‌ இடைஞ்சலாக வழியில்‌ நின்றது தப்புதான்‌. ஆனாலும்‌, முதல்‌ தடவையாகப்‌ பார்க்கிற ஒருவரிடம்‌... ஒரு பெண்‌ணிடம்‌... அதுவும்‌ ஓர்‌ இளம்பெண்ணிடம்‌, அதிலும்‌, ஓர்‌ அழகான இளம்‌ பெண்ணிடம்‌, ஒருவர்‌ இப்படியா பேசுவது? ஏன்‌ ரஞ்சித்‌, நான்‌ அழகாகத்தானே இருக்‌கிறேன்‌?'' என்று ஒரு திடீர்க்‌ கலக்கத்தில்‌, அத்தை மகனிடம்‌ சந்தேகம்‌ கேட்டாள்‌ சாரு.
Download Ramanichandran PDF Novels More:


“நன்றாகத்தான்‌ இருக்கிறாய்‌! அதுவும்‌, ரொம்பவுமே நன்றாகவே இருக்கிறாய்‌. அதனால்தான்‌ அந்த மல்யுத்த வீரனுக்குக்‌ கோபம்‌. அழகான பெண்‌, அடுத்தவனுக்கு மாலை போடுகிற மாதிரி நின்றால்‌, ஆத்தப்‌ பெண்ணிடம்‌ அவனுக்குக்‌ கோபம்‌ வருமா, வராதா?”

“அடுத்தவனுக்கா? யாருக்கு? தூக்கித்தானே பார்த்துக்‌ கொண்டி ருந்தேன்‌.“நீ மாலையைத்‌ தூக்கிப்‌ பார்த்த விதம்‌, அந்த மாலையை எனக்குப்‌ போட்டுப்‌ பார்க்கிற மாதிரி இருந்தது!” என்று ரஞ்சன்‌ விளக்கினான்‌

“உனக்கா? நானா? போடா, போ!" என்றாள்‌, அவள்‌ ஏளனமாக.“ரொம்ப நல்லது! நானும்‌ ஒன்றும்‌, உனக்காகக்‌ காத்துக்‌ கொண்டிருக்கவில்லை. அளை விடு.” என்றான்‌ ரஞ்சன்‌. “விடத்தான்‌ வேண்டும்‌. உன்னை நான்‌ ஒருபோதும்‌ மணக்கமாட்டேன்‌. என்‌ கனவு நாயகனுக்கு, நீ அரையடி. குள்ளம்‌, தெரியுமா? அனால்‌ என்னைப்‌ போய்‌, இப்படித்‌ தப்பாக நினைத்து விட்டானே! என்று மீண்டும்‌ புலம்பினான்‌.

தன்னைக்‌ குள்ளம்‌ என்று சாரு சொன்னாள்‌ என்ற ஆத்திரம்‌ ரஞ்சனுக்கு.“அப்படியானால்‌, உனக்கு அந்த அள்தான்‌ லாயக்கு. ஆனால்‌, ஒரு பார்வையில்‌, “ஒத்தெல்லோ” மாதிரித்‌ தப்பாக நினைத்துவிட்டானே. வேண்டுமானால்‌ ஒன்று செய்‌. அந்த அளின்‌ பின்னோடு ஓடிப்போய்‌, அவரைப்‌ பிடூத்து உண்மையை விளச்கு. கூடவே, ஒரு வருங்‌காலத்துக்காக ஒரு விண்ணப்பத்தையும்‌ போட்டுவிட்டு வா. இங்கே தொழில்‌ விஷயம்‌ நான்‌ பார்த்துக்‌ கொள்ளுகிறேன்‌!” என்று, ரஞ்சன்‌ கிண்டலடித்த பிறகுதான்‌, சாருமதி அந்தப்‌ பேச்சை விடுத்தாள்‌.

கடுவன்‌ பூனை, கடுவன்‌ பூனை என்று விட்டு, கடைசியாக அவனையே படம்‌ பிடிக்கும்படி. ஆயிற்றே. ஆனால்‌, அன்றைய நினைவு. அவனுக்கு இருக்கக்‌ கூடுமா என்று யோசித்தபடியே படம்‌ பிடித்தாள்‌ சாரு. லென்ஸின்‌ வழியே பார்க்கும்போது இன்றும்‌ அவன்‌ நல்ல மனநிலையில்‌ இல்லை என்பது நன்கு விளங்கியது.

மனிதன்‌ எப்போதுமே, சரியான சிடுமூஞ்சிதான்‌ போலும்‌. அனால்‌, அதை வெளிப்பார்வைச்குக்‌ காட்டிக்‌ கொள்ளாதிருக்க. அவன்‌ பெருமுயற்சி செய்து கொண்டி.ருந்தான்‌. மற்றவர்களோடு சேர்ந்து உற்சாகமாகப்‌ பேசுவதும்‌, சிரிப்பதும்‌, கூடவே யாரும்‌ அறியாதவாறு, சைக்கடிகாரத்தைப்‌ பார்ப்பதுமாகப்‌ பொழுதை ஓட்டிக்‌ கொண்டிருந்தான்‌ அவன்‌.

துரைக்கு, மற்றவர்களோடு கலந்து பழகப்‌ பிடிக்கவில்லை போலும்‌. எப்போது எழுந்து ஓடலாம்‌ என்று கணக்குப்‌ போட்டுக்‌ கொண்டிருக்கிறான்‌. அதற்குள்‌, மணப்பெண்ணுக்குப்‌ பெண்கள்‌ நலுங்கு வைப்பது முடிந்து, ஆரத்தி சுற்றி மணையிலிருந்து எழுப்பி அவளுக்கு மோதிரம்‌ போட, மசனை அழைத்தார்‌, பையனுடைய தாயார்‌.

லேசாக அசடு வழிந்தவாறே, ஆனால்‌ ஆவலுடனேயே எழுந்து சென்றான்‌ மணமகன்‌, வெட்கமும்‌ மகிழ்ச்சியுமாக, ஓாக்சகண்ணால்‌ அவள்‌ நோக்க, அவளுக்கு மோதிரத்தை அணிவித்த அவன்‌ ரசசியமாக அவள்‌ சையை வருட, எல்லாம்‌ லென்சின்‌ வழியே கண்ணில்பட, ஒரு நல்ல திரைப்படம்‌ பார்க்கிற உணர்வு சாருமதிக்கு.

திடுமெனக்‌ காதருகில்‌, “உங்கள்‌ வேன்‌ என்‌ காரை வழி மறித்து நிற்கிறது. அதை எடுத்து, நகர்த்தி நிறுத்தி விட்டு, அப்புறமாக வந்து படம்‌ எடுங்கள்‌!'' என்றது. எல்லையை நெருங்கிவிட்ட பொறுமையை, இழுத்துப்‌ பிடித்துக்‌ கொண்டிருந்த ஒரு குரல்‌.

அவசரமாக ஒரு கணம்‌ திரும்பிப்‌ பார்த்தால்‌, திரும்பு முன்னரே அவள்‌ ஊகித்தது போலவே, அவனேதான்‌. இவனது வழியை மறிப்பதே, அவளுக்கு வேலை என்று எண்ணுகிறானா? ஒன்று அவள்‌, அல்லது அவளது வேன்‌!

அப்படித்தான்‌ நினைப்பதுபோல, அவனது முகத்தில்‌ தெரிந்த அலுப்பு கூற, அவள்‌ நிமிர்ந்தாள்‌. “நாங்கள்‌ வேளை நிறுத்தும்போது, அங்கே நெருக்கடி ஓன்றும்‌ இல்லையே, மறுபக்கம்‌ ஏராளமாக இடம்‌...”
kadhal vaibogame novel, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Kadhal Vaibogame

Info of Novel


Name of the Book:

காதல் வைபோகமே

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
264 Pages
ISBN-13:
5195182032891
Publisher:
Ramanichandran
Copyright Date:
2006
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Kadhal Vaibogame என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!