-->

Kadhalenum Solaiyile is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Kadhalenum Solaiyile PDF book download link is available.

Kadhalenum Solaiyile PDF Download

காதல் எனும் சோலையிலே என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Kadhalenum Solaiyile Novel

சில நாட்களாகவே ஜீவரேகாவுக்குச்‌ சரியாகச்‌ சாப்பாடு இறங்கவில்லை. அழைப்பிதழைக்‌ கண்ட பிறகோ உணவு அடியோடு செல்லவில்லை. சரியான ஆகாரமின்றிப்‌ பலவீனப்பட்டிருந்த உடம்பு இப்போது தாராதேவியின்‌ பேச்சில்‌ உதறத்‌ தொடங்கியது. பெருமுயற்சி செய்து மனதை அமைதிப்படுத்திக்‌ கொண்டு கேட்டாள்‌, “அப்படிப்பட்ட பட்டாம்பூச்சி மனிதரை நீங்கள்‌ ஏன்‌ மணம்‌ புரிய வேண்டும்‌?" என்று.

கேட்ட மறுகணமே, "நீ யாரடி கேட்பது?" என்று இவளும்‌ விரட்டி அடித்தால்‌ என்ன செய்வது? வேறு எப்படி விஜயனைப்‌ பார்ப்பது என்று பதறிப்‌ போனாள்‌ ஜீவரேகா. யோசனையோடு ஜீவரேகாவை நோக்கினாள்‌ அவள்‌. பிறகு தொடங்கினாள்‌. "இதெல்லாம்‌ சொன்னால்‌ உனக்குப்‌ புரியுமோ, என்னவோ? சொல்ல வேண்டிய அவசியம்‌ கூட இல்லைதான்‌. ஆனாலும்‌... சரிதான்‌, கேட்டுக்கொள்‌. அத்தானுக்கும்‌ எனக்கும்‌ திருமணம்‌ என்பது சிறு வயதிலேயே முடிவான விஷயம்‌.
Download Ramanichandran PDF Novels More:

மாமா 'ஸ்ட்ரோக்‌' விஷயம்‌ தெரியும்‌ அல்லவா? அவருக்காகத்‌ தான்‌ இப்போது அவசரமாகத்‌ திருமணத்தை நடத்தப்‌ போவது கூட, இப்போது நான்‌ மறுத்தால்‌ மாமாவின்‌ உயிரே போய்விடும்‌... அத்தோடு அத்தானுடைய தொழில்களுக்காக' என்‌ அப்பா நிறையப்‌ பணம்‌ கொடுத்திருக்கிறார்‌; நிறைய என்றால்‌ ஆயிரத்தில்‌ கணக்கிடாதே. பத்து லட்சம்‌ ரூபாய்‌. எனக்கு சீதனம்‌ போலக்‌ கொடுத்ததுதான்‌... இதை வேறு வகையில்‌ வசூல்‌ பண்ணவும்‌ முடியாது..."

“அதற்காக? பணத்துக்காகப்‌ பெண்ணைப்‌ பலி கொடுப்பாரா உங்கள்‌ தந்‌ைத?" என்று சூடாகக்‌ கேட்டாள்‌ ஜீவரேகா. விசித்திரப்‌ பிராணியைப்‌ பார்ப்பதுபோல அவளைப்‌ பார்த்தாள்‌ தாராதேவி. ''பலியென்ன வந்தது? உன்னோடெல்லாம்‌ பழகியதைச்‌ சொல்கிறாயா? பணக்காரப்‌ பிள்ளைகள்‌ என்றால்‌ உன்‌ போலப்‌ பெண்கள்‌ மேலே விழுந்து பழகுவதும்‌, இவர்கள்‌ பல மலர்‌ நாடுவதும்‌ சகஜம்தானே.

கல்யாணம்‌ ஆனபிறகு ஊர்‌ மேயாமல்‌ பார்த்துக்‌ கொள்வது மனைவியின்‌ சாமர்த்தியம்‌. அத்தானும்‌ இனி ஒழுங்காக இருப்பதாகச்‌ சத்தியம்‌ செய்திருக்கிறார்‌." "பணக்காரப்‌ பிள்ளை என்கிறீர்கள்‌, உங்கள்‌ தந்தையிடம்‌ அந்தப்‌ பணக்காரர்‌ பத்து லட்சம்‌ கடன்‌ வாங்குவானேன்‌?" என்று கேட்கும்‌ போதே உள்ளூரக்‌ கணக்கு விரிந்து மிரட்டியது.

'பத்து லட்சம்‌ என்றால்‌ பத்து நூறு ஆயிரங்கள்‌ அடேயப்பா' எவ்வளவு பணம்‌“உனக்குத்‌ தெரியாதா, மாமாவுக்கு ஸ்ட்ரோக்‌ வந்தது. பாங்கில்‌ ஓ.டி. எல்லாம்‌ கட்டிவிடச்‌ சொன்னது... என்‌ அப்பா மட்டும்‌ உதவியிருக்காவிட்டால்‌ எல்லாம்‌ போய்‌ அத்தான்‌ குமாஸ்தா வேலை. பார்க்க வேண்டிய நிலைக்குப்‌ போயிருப்பார்‌. ஏன்‌, உதயா, வித்யா இரண்டு பேரும்‌ கூட அம்போதான்‌. அவர்களும்‌ தன்‌ வேலையைத்‌ தானே செய்து கொண்டு கிடக்க வேண்டி இருந்திருக்கும்‌" என்றாள்‌ அவள்‌ இளக்காரமாய்‌.

“தன்‌ வேலையைத்‌ தானே செய்வது ஒன்றும்‌ கேவலம்‌ அல்ல" என்றாள்‌ ஜீவரேகா ஆத்திரமாக. ஒருகணம்‌ அவளை வியந்து நோக்கி விட்டுத்‌ தாரா, "உனக்கு அப்படித்தான்‌ தோன்றும்‌. போகட்டும்‌, உன்‌ பெயர்‌, ராதியா, ஷீலுவா, நளினா, அல்லது ஜீவியா? எதுவென்று சொல்‌. எல்லோருக்கும்‌ அழைப்பு அனுப்பியிருப்பதால்‌ நாலு பேருமே வரக்கூடும்‌ என்றார்‌ அவர்‌. சொல்லு, உன்‌ பெயரைச்‌ சொன்னால்‌ அவர்‌ சொன்னபடி, உனக்குச்‌ செய்ய வேண்டியதைச்‌ செய்து விடுகிறேன்‌" என்றாள்‌ மீண்டும்‌ பழைய அலுப்புக்‌ குரலுக்கு மாறி.

தாராதேவி வேகமாக அடுக்கிய பெயர்கள்‌ - அதிலும்‌ செல்லச்‌ சுருக்கங்கள்‌ - முக்கியமாகத்‌ தன்‌ பெயரின்‌ ஜீவிச்‌சுருக்கம்‌ தீவரேகாவை அதீ:ர வைத்தது. “நீ என்‌ 'ஜீவி' நான்‌ 'உன்‌ விஜி" என்று கொஞ்சிய அவன்‌ மட்டும்‌ தானே இன்று வரையில்‌ அவளை 'ஜீவி' என்று அழைத்த ஒரே ஒரு ஜீவன்‌.

தங்கள்‌ உறவு பற்றி யாரிடமும்‌ சொல்லவில்லை என்றவன்‌ இந்தச்‌ செல்லப்பெயர்‌ வரைக்கும்‌ இவளிடம்‌ சொல்லியிருக்கிறானே. இதை மட்டுமா? ராதி, நளினி, ஷீலு...“இ... இதெல்லாம்‌ யார்‌ பெயர்கள்‌?...?” என்றாள்‌ ஈனசுரத்தில்‌“தான்‌ பழகிய பெண்கள்‌ என்று அத்தான்‌ சொன்னார்‌.

தன்னிடம்‌ வந்தால்‌ தானே பார்த்துக்‌ கொள்வதாயும்‌, என்னிடம்‌ கலகம்‌ செய்ய முயன்றால்‌ நானே கவனித்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்றும்‌ கூறியிருந்தார்‌. இப்போதைக்கு இந்த நாலு பேரும்தான்‌ என்றாரே. உன்‌ பெயரைச்‌ சொல்ல மறந்து விட்டாரா? பரவாயில்லை. உன்‌ பெயரையும்‌ உனக்கு எவ்வளவு தேவை என்பதையும்‌ சொல்லு. நான்‌ தந்து விட்டு அத்தானிடம்‌ கூறிவிடுகிறேன்‌."

“நான்‌... நான்‌..." ஜீவரேகாவின்‌ குரல்‌ விக்கி உடைந்தது.“ஓர்‌ இருபது போதுமா? இருபது என்றால்‌ நூறல்ல ஆயிரத்தைச்‌ சொல்லுகிறேன்‌" என்று எழுந்து உட்புறம்‌ நோக்கி நடந்தாள்‌ தாராதேவி.

“இதற்கே இரண்டு லட்சம்‌ ஓடிவிடும்‌ போல இருக்கிறது. சே. மான ஈனம்‌ இல்லாததுகள்‌'' என்ற அவளது முணுமுணுப்பு ஜீவரேகாவின்‌ காதுகளில்‌ தெளிவாகவே விழுந்தது. உள்ளே சென்றவள்‌ திரும்பி வருமுன்‌ ஜீவரேகா வெளியேறி விட்டாள்‌.

ரயில்‌ நிலையத்தில்‌ உடனடியாக, ரயில்‌ ஏதும்‌ இல்லை என்றார்கள்‌. கிடைத்த பஸ்ஸில்‌ ஏறி திருச்சியை அடைந்தாள்‌. சென்னைக்குச்‌ செல்லும்‌ ரயிலில்‌ ஏறித்‌ தன்‌ இடத்தில்‌ சாய்ந்தாள்‌. பிறகு... பிறகு அவளது நெஞ்சு பிளந்து போயிற்று. ஆயிரம்‌ ஆயிரம்‌ ஆசைக்‌ கற்பனைகளும்‌ தூள்‌ தூளாய்‌ நொறுங்கிப்‌ போயின.

கொச்சிக்குக்‌ கிளம்பியதிலிருந்து இனிக்க இனிக்க அந்த ஏழுநாட்கள்‌ - அவை கனவோ என்ற பிரமைகூட ஒரு சமயம்‌ உண்டாயிற்றே. கனவாக இருந்திருந்தால்‌ எவ்வளவு நன்றாய்‌ இருக்கும்‌. ஆனால்‌ எதுவும்‌ கனவல்லவே.

அவனைக்‌ கண்டது, காதல்‌ கொண்டது, களித்தது, முகமறியாத ஒருத்தியிடம்‌ அவமானப்பட்டுத்‌ திரும்புவது.. இதில்‌ எதுவுமே கனவில்லையே. எவ்வளவு இலகுவாகத்‌ தன்னை இழந்தாள்‌! அதுவும்‌ பார்த்து நாலு முழு நாட்கள்‌ ஆகியிராத ஒரு அன்னியனிடம்‌!

அவன்‌ தான்‌ என்ன நினைத்திருப்பான்‌? என்ன நினைத்திருப்பான்‌ என்பதைத்தான்‌ அவள்‌.. அவனுடைய வருங்கால மனைவி சொன்னாளே - மான ஈனம்‌ இல்லாததுகள்‌. இதயம்‌ கிழிபட்டது; குத்தப்பட்டது நைந்தது. ஆனால்‌ நிற்காமலே துடிக்கிறதே என்பதுதான்‌ அவளுக்கு வருத்தம்‌. இனி?

ஒன்றுமில்லாத சூனியமாகவும்‌ அடிநுனி காணமுடியாத பூதாகாரமாகவும்‌ எதிர்காலம்‌ அவளை மருட்டியது. நாளைக்‌ காலைப்‌ பெற்றோரை எதிர்கொண்டாக டேவண்டுமே பெற்றவர்கள்‌!

அந்த ஏழு நாட்களும்‌ அவளால்‌ அடியோடு மறக்கப்பட்டிருந்த, அவளுடைய அப்பாவிப்‌ பெற்றோர்கள்‌, மகளிடம்‌ மகாநம்பிக்கை அவர்களுக்கு. எங்கள்‌ தங்கம்‌ பொய்கூடச்‌ சொல்லமாட்டாள்‌ என்பார்கள்‌.

அவர்களிடம்‌ என்ன சொல்வது? இந்தப்‌ பெருந்துயரத்திலிருந்து அவர்களை எப்படிக்‌ காப்பது? இதுவரை நடந்தது எதையும்‌ அவர்கள்‌ அறிந்திருக்கவில்லை. இனியும்‌ மறைத்துவிட்டால்‌ என்ன? கொஞ்ச காலம்‌ கழித்துத்‌ 'திருமணம்‌ செய்துகொள்‌' என்று ஒரு பிரச்னை கிளம்பக்கூடும்‌; அவளைப்‌ பொறுத்தவரை இனி யாரையும்‌ மணப்பது என்பது நடவாத விஷயம்‌.

இதுவரை நடந்ததை மறந்தோ, மறைத்தோ இன்னொரு ஆணை ஏற்பது அவளால்‌ இயலாது. எனவே அந்தப்‌ பிரச்சினை கிளம்பும்போது முடியாது என்று தீர்மானமாக மறுத்துவிட்டால்‌ மீறி அவளை மிரட்டி அடக்கும்‌ தன்மை உடையவர்கள்‌ அல்ல அவர்கள்‌.

எனவே இந்த அவமானத்தை அவர்களுக்குத்‌ தெரியாமல்‌ மறைத்துவிட வேண்டியதுதான்‌ என்ற முடிவுக்கு அவள்‌ வரும்போதே முக்கியமான ஒன்று உறைத்தது.
kadhalenum solaiyile novel free download, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Kadhalenum Solaiyile

Info of Novel


Name of the Book:

காதல் எனும் சோலையிலே

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
337 Pages
ISBN-13:
5195182032884
Publisher:
Ramanichandran
Copyright Date:
2001
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Kadhalenum Solaiyile Novel PDF

Thanks For Downloading...Kadhalenum Solaiyile Novel...

Ramanichandran அவர்களின் நாவல் Kadhalenum Solaiyile என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!