-->

Kanavu Meipada Vendum is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Kanavu Meipada Vendum PDF book download link is available.

Kanavu Meipada Vendum PDF Download | Ramanichandran Novel

கனவு மெய்பட வேண்டும் என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Kanavu Meipada Vendum Novel

சீற்று நேரம்‌. மைத்ரேயிக்கு ஒன்றுமே சொல்லத்‌ தோன்றவில்லை! எதுவுமே செய்யத்‌ தோன்றவில்லை! திகைப்பினால்‌ விரிந்த கண்கள்‌, பிரதீபனின்‌ .முகத்‌ நில்‌ நிலைக்க, எவ்வளவு நேரம்‌ அவள்‌ அப்படி மலைத்து நின்றாளோ, அவளுக்குத்‌ தெரியாது! அது மிகச்‌ சில வினாடிகளாகவும்‌ இருக்கலாம்‌; பல நீண்ட நிமிடங்களாகவும்‌ இருக்கலாம்‌!

“இதோ, உன்‌ ஃபைல்‌!'' என்றபடி, பிரதீபன்‌, அவளது ஃபைலை நீட்ட, ''வாங்கிக்‌ கொள்ளம்மா!'' என்று பரமசிவமும்‌ சேர்ந்து கூறவும்தான்‌, அவளுக்குக்‌ கொஞ்சம்‌ சுய உணர்வு வந்தது.

எவ்வளவு நேரமாய்‌ ஃபைலை நீட்டிக்‌ கொண்டிருக்கிறானோ என்று, அதுவேறு தவிப்புடன்‌ ''நான்‌... நன்றி சார்‌! என்‌... என்னால்‌, நம்பவே முடியவில்லை சார்‌। அவ்வ....வளவு பேர்‌ நடுவில்‌... ௭..என்னைப்‌ போய்‌... சார்‌, ரொம்ப ரொம்பத்‌ தாங்க்ஸ்‌....சார்‌!'' என்று, திக்கு முக்காடித்‌ திக்கித்‌ திணறி ஒருவாறு, தன்‌ நன்றியைத்‌ தெரிவித்து முடித்தாள்‌.

"இதைத்தான்‌ நானும்‌ சொன்னேன்‌. ரொம்பவும்‌ சின்னப்‌ பெண்ணாக இருக்கிறாளே! இவளால்‌ இந்தப்‌ பொறுப்பை வகிக்க, அதாவது, சரியானபடி வகிக்க எப்படி முடியும்‌ என்று, கேட்டேன்‌! நல்லதுக்குச்‌ சொன்னால்‌, காதில்‌ வாங்கிக்‌ கொண்டால்தானே?

குடும்ப வழக்கம்‌! இன்றைக்கா மாறிவிடப்‌ போகிறது? ' என்று அலுத்துக்‌ கொண்டாள்‌ சித்திப்‌ பெண்மணி. முகம்‌ கருத்தபோதும்‌, அவளது பேச்சைக்‌ கவனியாத பாவனையுடன்‌, ''இவர்கள்‌ .என்‌ சித்தி... சித்தப்பாவுடைய மனைவி. நிறுவனத்தின்‌ டைரக்டர்களில்‌ ஒருவர்‌. பெயர்‌ சுலோசனா சீனிவாசன்‌. துணிகளின்‌ தரம்‌ பற்றிய சந்தேகம்‌ எதுவானாலும்‌ இவர்களிடம்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

ஏன்‌, அதுபற்றிச்‌ சித்தியிடம்‌ பயிற்சி எடுத்துக்‌ கொள்வது நல்லதும்‌ கூட'' என்றவன்‌, மைத்துனர்‌ மகனின்‌ பாராட்டில்‌ உச்சிகுளிர்ந்து போயிருந்த சுலோசனாவிடம்‌ ''கேட்கும்போது கற்றுக்‌ கொடுப்‌பீர்கள்‌ இல்லையா, சித்தி?'' என்று புன்னகையோடு வினவினான்‌.
Download Ramanichandran PDF Novels More:


இளகிப்போய்விட்ட... அந்த அம்மாள்‌, ''கேட்க வேறு வேண்டுமாடா? இந்த நிறுவனம்‌ என்னதும்‌ தானே? இதன்‌ லாப நஷ்டங்கள்‌ எங்களையும்‌ தான்‌ பாதிக்கும்‌ என்றாலும்‌, எங்களுக்கு இதில்‌ பங்கே இல்லாவிட்டாலும்‌ கூட உனக்காக நான்‌ இந்தச்‌ சிறு உதவி செய்ய மாட்டேனா?'' என்று குரல்‌ கனிய விளம்பினாள்‌.

"இதைத்தான்‌ நானும்‌ சொன்னேன்‌. ரொம்பவும்‌ சின்னப்‌ பெண்ணாக இருக்கிறாளே! இவளால்‌ இந்தப்‌ பொறுப்பை வகிக்க, அதாவது, சரியானபடி வகிக்க எப்படி முடியும்‌ என்று, கேட்டேன்‌! நல்லதுக்குச்‌ சொன்னால்‌, காதில்‌ வாங்கிக்‌ கொண்டால்தானே? குடும்ப வழக்கம்‌! இன்றைக்கா மாறிவிடப்‌ போகிறது? ' என்று அலுத்துக்‌ கொண்டாள்‌ சித்திப்‌ பெண்மணி.

முகம்‌ கருத்தபோதும்‌, அவளது பேச்சைக்‌ கவனியாத பாவனையுடன்‌, ''இவர்கள்‌ என்‌ சித்தி... சித்தப்பாவுடைய மனைவி. நிறுவனத்தின்‌ டைரக்டர்களில்‌ ஒருவர்‌. பெயர்‌ சுலோசனா சீனிவாசன்‌. துணிகளின்‌ தரம்‌ பற்றிய சந்தேகம்‌ எதுவானாலும்‌ இவர்களிடம்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

ஏன்‌, அதுபற்றிச்‌ சித்தியிடம்‌ பயிற்சி எடுத்துக்‌ கொள்வது நல்லதும்‌ கூட'' என்றவன்‌, மைத்துனர்‌ மகனின்‌ பாராட்டில்‌ உச்சிகுளிர்ந்து போயிருந்த சுலோசனாவிடம்‌ ''கேட்கும்போது கற்றுக்‌ கொடுப்‌பீர்கள்‌ இல்லையா, சித்தி?'' என்று புன்னகையோடு வினவினான்‌.

இளகிப்போய்விட்ட... அந்த அம்மாள்‌, ''கேட்க வேறு வேண்டுமாடா? இந்த நிறுவனம்‌ என்னதும்‌ தானே? இதன்‌ லாப நஷ்டங்கள்‌ எங்களையும்‌ தான்‌ பாதிக்கும்‌ என்றாலும்‌, எங்களுக்கு இதில்‌ பங்கே இல்லாவிட்டாலும்‌ கூட உனக்காக நான்‌ இந்தச்‌ சிறு உதவி செய்ய மாட்டேனா?'' என்று குரல்‌ கனிய விளம்பினாள்‌.

பிரதீபன்‌ மைத்ரேயியிடம்‌ திரும்பவும்‌, அந்தப்‌ பார்வையைப்‌ புரிந்து கொண்டு, “'ரொம்பவும்‌ நன்றி மேடம்‌! இப்படி உதவிக்கு சிறந்த துணை இருக்கும்‌ போது, எனக்கு என்ன கவலை? என்‌ மனமார்ந்த நன்றி, மேடம்‌!'' என்றாள்‌ மைத்ரேயி.

''ழ்ம்‌... நல்ல பெண்ணாய்தான்‌ தெரிகிறாய்‌! இப்படியே இருந்தால்‌, நமக்கிடையே பிரச்சினையே வராது!... அப்போது நான்‌ கிளம்புகிறேன்‌ பிரதீப்‌।' மகளிர்‌ சங்கத்துக்குப்‌ போகவேண்டும்‌. வரட்டுமா? என்னம்மா, மைத்ரேயி! நான்‌ கிளம்புகிறேன்‌. உனக்கு ஏதாவது சந்தேகம்‌ தோன்றினால்‌, .நாளனன்று என்னிடம்‌ கேள்‌! ஏனென்றால்‌ நாளை நான்‌ இந்த அலுவலகத்‌துக்கு வர இயலாது! வேறு வேலை இருக்கிறது! மகளிர்‌ மன்றத்திலிருந்து ஏழைகளுக்குச்‌ சாப்பாடு போடப்‌ போக வேண்டியிருக்கிறது! பத்திரிகை நிருபர்கள்‌ மூன்று பேர்‌ வருகிறார்கள்‌! அதனால்‌ நான்‌ போகாமல்‌ தீராது! வருகிறேன்‌... என்று பேசியபடியே கிளம்பிச்‌ சென்‌றாள்‌ அவள்‌.

மழை பெய்து ஓய்ந்தாற்போல இருந்தது மைத்ரேயிக்கு. முறுவலோடு, அந்த அமைதியைக்‌ கலைத்து, ''இவர்‌. மிஸ்டர்‌ பரமசிவம்‌. அவரது எளிமையான தோற்றத்தையும்‌ இலகுவான பேச்சையும்‌ பார்த்து அவரைத்‌ தவறாக எடைபோட வேண்டாம்‌. இவர்‌ இந்த நிறுவனத்தின்‌ தலைமை நிர்வாகி! என்‌ தந்தையோடு சேர்ந்து, இந்த நிறுவனத்தைத்‌ தொடங்கப்‌ பேருதவி செய்தவர்‌! இவரிடம்‌, .மெய்யாகவே, வேலை தொடர்‌பாக, நீங்கள்‌ எந்தவித .விளக்கங்களும்‌ கேட்கலாம்‌!" என்று அறிமுகப்படுத்தி வைத்தான்‌.

அதென்ன, வேலை தொடர்பாக என்று ஓர்‌ இடைச்சொருகல்‌? இந்த முதலாளி ஏன்‌ என்னை அடியோடு அறியாத வேற்றாளாகி நடத்துகிறார்‌ என்று இவரிடம்‌ போய்க்‌ கேட்டு விடுவேனா என்ன? அந்த அளவுக்கு என்னை நானே மட்டமாகக்‌ காட்டிக்‌ கொள்ள நான்‌ ஒன்றும்‌ முட்டாள்‌ அல்லவே! ஆனால்‌, வேலை தந்திருக்கிறான்‌! அதை எண்ணி, இந்தச்‌ சிறு அவமானத்தை... அல்லது அலட்சியத்தைப்‌ பொருட்‌படுத்தாமல்‌ விட்டு விடுவது மேல்‌! வேலை என்றால்‌ எப்பேர்ப்பட்ட வேலை!

மற்ற இருவரும்‌ வணக்கம்‌ தெரிவித்துக்‌ கொண்‌டான பின்‌, ''வேறு ஏதேனும்‌ தெரிய வேண்டுமா? என்று கேட்டான்‌ பிரதீபன்‌. "நான்‌ எப்போதிருந்து வேலைக்கு வரட்டும்‌, சார்‌?'' என்று ஆர்வமும்‌ சிறு வெட்கமுமாக மைத்ரேயி வினவவும்‌ பரமசிவம்‌ மெல்ல நகைத்தார்‌

"இப்போதிருந்தே நீ வேலையில்‌ சேர்ந்தாற்போலத்‌ தானம்மா! வேலைக்குரிய்‌ ஆர்டர்‌, இன்றிரவே நம்‌ அலுவலகக்‌ கூரியர்‌ மூலம்‌ உன்‌ வீட்டுக்கு வந்து சேரும்‌!” என்றார்‌ அவர்‌. “அதனால்‌, நாளையிலிருந்தே வேலைக்கு வரலாம்‌! வேறு ஏதேனும்‌ தெரிய வேண்டுமா?'' என்று மீண்டும பிரதீபன்‌ விசாரித்தான்‌.

வேறு என்ன என்பது போல அவள்‌ யோசிக்கவும்‌, "உன்‌ சம்பளம்‌ என்னவென்று தெரிய வேண்டாமா?'' என்று பிரதீபன்‌ கேட்கவும்‌, மைத்ரேயியின்‌ முகத்தில்‌ லேசாக அசடு வழிந்தது.

ஒரு பதவி எனும்போது, பதவிக்குரிய அலுவல்‌ ஒரு பாதி என்றால்‌, அதற்கான ஊதியம்‌ அந்தப்‌ பதவியின்‌ மறுபாதி! வேலை கிடைத்த மகிழ்ச்சியில்‌, வரவேண்டிய சம்பளத்தைப்‌ பற்றிய எண்ணம்‌ கூட, அவளுக்கு எழவே இல்லையே!

தயக்கத்துடன்‌ நோக்கி, ''எவ்வளவு?'' என்று அவள்‌ வினவியபோது பிரதீபன்‌ சொன்ன பதில்‌, சற்றுநேரம்‌ அவளது மூச்சையே நிறுத்தி விட்டது எனலாம்‌! அவளது ஊதியம்‌ எவ்வளவு என்பதை வீட்டினரிடம்‌ மைத்ரேயி சொன்னபோது, அவர்களும்‌ அவளைப்‌ போலவேதான்‌ திகைத்தார்கள்‌.

"அவ்வளவா? கிட்டத்தட்ட உன்‌ அப்பா சம்பளம்‌! அவருக்கே சென்ற ஆண்டுதானே அந்தச்‌ சம்பளம்‌ வந்தது!'' என்று மலைத்து விட்டு, சிவகாமி திருப்தியுடன்‌ புன்னகை செய்தாள்‌. '“உன்‌ சம்பளத்துக்கு அப்படியே தங்கமாக வாங்கிச்‌ சேர்த்தால்‌ விரைவிலேயே உனக்கு நிறைய நகை போட்டுக்‌ கல்யாணம்‌ பண்ணலாம்‌'' என்று சந்தோஷப்பட்டாள்‌.
kanavu meipada vendum novel, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Kanavu Meipada Vendum

Info of Novel

Name of the Book:

கனவு மெய்பட வேண்டும்

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
265 Pages
ISBN-13:
5195182032892
Publisher:
Ramanichandran
Copyright Date:
2000
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Kanavu Meipada Vendum என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!