-->

Kannal Partha Velai is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Kannal Partha Velai PDF book download link is available.

Kannal Partha Velai PDF Download | Ramanichandran Novel

கண்ணால் பார்த்த வேளை என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Kannal Partha Velai Novel

காரணத்தைச்‌ சொல்லுமுன்‌, அவளுடைய தந்தயின்‌ தொழிலைப்‌ பற்றி, அவளுக்கு எவ்வளவு தெரியும்‌ என்று, தயாளன்‌ சுசிதாவைக்‌ கேட்டான்‌. குணசேகரனுடைய ஆடிட்டர்‌ அளவுக்குத்‌ தெரியாதே தவிர, தந்தையின்‌ தொழிலைப்‌ பற்றிக்‌ கிட்டத்தட்ட நன்‌றாகவே அவள்‌ அறிவாள்‌. தொழில்‌ என்பதை விடவும்‌, தொழில்கள்‌ என்றே சொல்லலாம்‌।

சுசிதாவுடைய தாத்தா நடத்தி வந்த எண்ணை வியாபாரத்தையும்‌, அவர்‌ விட்டுவிடவில்லை. அது, எந்தவிதக்‌ குறைவும்‌ இல்லாமல்‌, வெகு சிறப்பாகவே நடந்து வந்தது!

கூடவே, அதன்‌ அடுத்தபடியாக, இந்த ஃபாஸ்ட்‌ ஃபுட்‌ தொழிலை, அவரே தொடங்கி, வெகு வெற்றிகரமாகவே நடத்தி வந்தார்‌ என்கிறவரை, .அவளுக்குத்‌ தெளிவாகத்‌ தெரியும்‌!

தந்‌ைத ஒன்றும்‌ தப்பான தொழில்‌ செய்கிறவர்‌ அல்ல என்பதால்‌, குடும்பத்தினரிடம்‌ இருந்து, தன்‌ தொழிலைப்‌ பற்றி அவர்‌ மறைத்ததும்‌ இல்லை என்றாள்‌ அவள்‌ பெருமையோடு।

ஒரு விதத்தில்‌ சவால்‌ விடுவது போலவும்‌! அவளுடைய தந்தையின்‌ தொழிலைக்‌ குற்றம்‌ சொல்லி, அதனால்‌ விரோதம்‌ என்று நீ சொல்லிவிட முடியாது என்று சொல்லாமல்‌ சொல்வது போல! அவளது குரலில்‌ முறுவலித்துவிட்டு, இப்போது என்னைப்‌ பற்றியதற்கு வருவோம்‌!'' என்று, தயாளன்‌ தன்னைப்‌ பற்றிய விவரம்‌ சொன்னான்‌.

எப்படி. குணசேகரன்‌ சங்கிலித்‌ தொடராகத்‌ துரித உணவகங்களைப்‌ பல கிளைகளைத்‌ தொடங்கி நடத்தி வருகிறாரோ, அதே போல, நகரின்‌ மிக முக்கியப்‌ பகுதிகளில்‌, பெரிய சூப்பர்‌ மார்க்கெட்டுகளை வைத்து நடத்தி ஈகிறவன்‌ அவன்‌. "தாயகம்‌'' என்று கேள்விப்பட்டிருப்பாய்‌'' என்றான்‌ அவன்‌ வெகு நிச்சயமாக!

"அதுவா, உங்களுடையது?!'' என்று ஆச்சரியத்துடன்‌ கேட்டாள்‌ அவள்‌! 'தாயக'த்தில்‌ கிடைக்காத பொருளே கிடையாது என்பது, அவளது கல்லூரித்‌ தோழிகளிடையே, பிரசித்தம்‌!

வீட்டுக்குக்‌ கூடப்‌ பல பொருட்களை அங்கேதான்‌ வாங்குவது! அதன்‌ தரம்‌ பற்றி, மிக உயர்வாகப்‌ பேசுவார்கள்‌! எப்போதும்‌, கூட்டம்‌ நிரம்பி வழியும்‌!“அது நிஜமாகவே, உங்களுக்கே உரியதா?''

'ம்‌. படிக்கும்போதே, என்‌ மனதில்‌ இதே திட்டம்‌। அப்பாவுக்கு ஸ்ட்ரோக்‌ வந்த பிறகு, திருப்பூரில்‌ பனியன்‌ தொழிற்சாலையில்‌ பிரச்சினை வந்தது! உழைக்க இயலாத அப்பாவும்‌ அவருடைய குடும்பமும்‌, தன்‌ உழைப்பை உறிஞ்சி உண்பதாகப்‌ பெரியப்பாவுக்குத்‌ தோன்றி விட்டது!
Download Ramanichandran PDF Novels More:


நல்ல வேளையாக ஏமாற்ற முயற்சி பண்ணாமல்‌, சொத்தை பண மதிப்புப்‌ போட்டுப்‌ பிரித்துக்‌ கையில்‌ தந்துவிட்டார்‌!" ''உங்கள்‌ கனவை நனவாக்கிக்‌ கொண்டீர்கள்‌!”

''நிச்சயமாக!'' என்றான்‌ அவன்‌ திருப்தியுடன்‌!“அதற்கும்‌ அப்பாவுக்கும்‌, என்ன தொடர்பு? எதனால்‌, விரோதம்‌ ஏற்பட்டது?'' நினைக்க முடியாமல்‌, மனம்‌ முதலில்‌ திகைத்தது! தந்தையுடைய எதிரி என்று தாயார்‌ கூறியது கூடப்‌ பெரிதாகத்‌ தோன்றவில்லை! ஆனால்‌, விரோதம்‌ என்று, இவனே சொன்னானே! "அது ஒரு பெரீய்ய கதை!'' என்றான்‌ அவன்‌ சோகப்‌ பெருமூச்சுடன்‌!

“ரொம்பவும்‌ நடிக்க வேண்டாம்‌! இது பற்றி அம்மாவிடம்‌ நீங்கள்‌ கூறியதை நானும்‌ கேட்டுக்‌ கொண்டுதான்‌ இருந்தேன்‌।'' என்றாள்‌ அவள்‌, உள்ளூர சினம்‌ துளிர்க்க அயராமல்‌, ''ஆனால்‌, மிஸ்டர்‌ குணசேகரனுக்கு, இப்படி ஓர்‌ அழகான மகள்‌ உண்டு என்று, எனக்கு அப்போது தெரியாதே!'” என்று விளக்கம்‌ கூறினான்‌ அவன்‌!

தன்னை மீறி, உச்சிக்‌ குளிரத்தான்‌ செய்தது அவளுக்கு. ஆனால்‌ அதை மறைத்து, ''தெரிந்திருந்தால்‌, விரோதம்‌ ஏற்படாமல்‌ தடுத்து நிறுத்தியிருப்பீர்கள்‌ போல!'' என்றாள்‌ அப்பாவி போல!

அது தே!" என்றுரைத்து, மீண்டும்‌ அவளை வியப்படைய வைத்தான்‌ அவன்‌! அவள்‌ திகைக்கவும்‌, ''இந்த விவரம்‌ முன்பே தெரிந்திருந்‌தால்‌, திருமதி குணசேகரனிடம்‌ விரோத விஷயத்தை உண்மையான வருத்தத்துடன்‌ தெரிவித்திருப்பேன்‌! ற்றபடி, விரோதத்தைத்‌ தவிர்ப்பது, என்னால்‌ ஆகாத காரியம்‌।'' என்று விளக்கினான்‌ தயாளன்‌!

"ரொம்பத்‌ தெளிவான விளக்கம்‌!'' என்று, பாராட்டுவது பாலச்‌ சொல்லி, அவள்‌ உதட்டைப்‌ பிதுக்கினாள்‌! "சரி! தெளிவாகவே சொல்லுகிறேனே! இந்த விரோத விவகாரத்தில்‌, என்‌ பங்கு மிகவும்‌ குறைவு! 'கொங்குத்‌ தங்க' த்தை, அவருக்கு விற்க மறுத்ததிலும்‌, பத்திரிகைக்கு நடத்த விடாததிலும்‌ மட்டுமே, எனக்குப்‌ பங்கிருக்கிறது அவ்வளவே, என்‌ பணி எல்லாம்‌...''

“என்னது! 'கொங்குத்‌ தங்கம்‌' உங்கள்‌ பத்திரிகையா?” என்று ஆச்சரியப்பட்டாள்‌ சுசிதா. "இப்படிக்‌ காதளவோடிய கண்களை அகல விரித்துக்‌ கேட்கும்போது ஆமாம்‌ என்று சொல்லிவிடத்தான்‌ ஆசையாக இருக்கிறது! ஆனால்‌, உண்மை வேறாயிற்றே। பத்திரிகை நிறுவனத்தில்‌ என்‌ நண்பன்‌ மனோவுக்கு பாதி உரிமை இருக்கிறது! பத்திரிகையை நடத்துவதும்‌, அவன்‌ தான்‌?''

"சந்தோஷம்‌! இன்னமும்‌, உங்கள்‌ விரோதம்‌ பற்றி நீங்கள்‌ சொல்லவே இல்லை।'“சொல்லத்தான்‌ முயற்சிக்கிறேன்‌! ஆனால்‌, உன்‌ இடைக்‌ கேள்விகளால்‌, மகாபாரதக்‌ கதை போலப்‌ பல்வேறு கிளைக்‌ கதைகளையெல்லாம்‌ சொல்ல வேண்டியதாகி விட்டது! பத்திரிகையில்‌ பாதிப்‌ பங்கு கிடைத்தது பற்றிக்‌ கூட இன்னொரு கதை இருக்கிறது ஆனால்‌, அந்த விளக்கம்‌ இப்போது தேவையில்லை. இப்போதைக்குக்‌ 'கொங்குத்தங்க'த்தில்‌ பாதி உரிமை என்னது என்று தெளிவுபடுத்தி விட்டதால்‌, இனி, முக்கியக்‌ கதைக்கு வருவோம்‌! உன்‌ அப்பாவின்‌ ஃபாஸ்ட்‌ ஃபுட்‌ தயாரிப்புகள்‌ பற்றி உன்‌ கருத்து என்ன?''

"விளக்கம்‌ சொல்வது, நீங்களா அல்லது நானா?''
"நானேதான்‌! ஆனால்‌, சில காரணங்களை, உன்‌ மூலமே புரிய வைத்துக்‌ கொள்ளலாம்‌ என்று பார்த்தேன்‌! சரி, நானே சொல்லுகிறேன்‌! எங்கள்‌ 'கொங்குத்‌ தங்க'த்தில்‌, கலை, வணிகம்‌, அரசியல்‌, கல்வி, உணவு என்று பல்வேறு தலைப்புகளில்‌, அந்தந்தத்‌ துறையில்‌ வல்லுனர்கள்‌ எழுதுகிறார்கள்‌.

அப்படி எழுதும்போது, இரு மாதங்களுக்கு முன்பாக, உன்‌ அப்பாவின்‌ 'குணா ஃபாஸ்ட்‌ ஃபுட்‌' பற்றி எழுதியிருக்கிறார்கள்‌! ஒரு சில அயிட்டங்களில்‌ சுவைக்‌காக எண்ணெய்‌ அதிகம்‌ சேர்த்திருப்பதாகவும்‌, அது உடல்‌ நலத்துக்கு நல்லதில்லை என்றும்‌ எழுதி விட்டார்கள்‌. அந்த வகை உணவு, தயாரித்து வைத்தது, நிறைய வீணாகி விட்டது என்று உன்‌ அப்பாவுக்குக்‌ கோபம்‌। அலுவலகத்‌தில்‌ வந்து கத்தியிருக்கிறார்‌।

''ஐம்பது காசுப்‌ பத்திரிகையை வைத்துக்‌ கொண்டே, அடுத்தவர்‌ தொழிலைக்‌ கெடுப்பதா? பத்திரிகையையே விற்றுவிடு., வாங்கிக்‌ கொள்கிறேன்‌.” என்றாராம்‌! அப்போது தான்‌, பத்திரிகையில்‌ எனக்கு உள்ள உரிமை தெரிய வந்திருக்கிறது!

"ஏற்கனவே, 'தாயக'த்துக்கு உன்‌ தந்த எண்ணை அனுப்‌பியதில்‌, விலையில்‌ வேறுபாட்டினால்‌, எங்களுக்குள்‌ சிறு புகைச்சல்‌ இருந்தது! அதை மனதில்‌ கொண்டு, நான்‌ பவண்டும்‌ என்றே அப்படி எழுதச்‌ சொன்னதாகக்‌ குணசகரன்‌ நினைத்து விட்டார்‌!

"பத்திரிகையில்‌ எழுதுகிறவர்கள்‌, அந்தந்தத்‌ துறையில்‌ வல்லவர்கள்‌., அவர்களது எழுத்துரிமையில்‌ நான்‌ நையிடுவது இல்லை என்று உண்மையைச்‌ சொன்னால்‌, தில்‌ வாங்கவே மறுக்கிறார்‌. நான்‌ என்ன, பத்திரிகையயரான என்‌ நண்பன்‌ மனோவே அடுத்தவர்‌ எழுத்தில்‌ யிட மாட்டான்‌! இது, எங்கள்‌ பத்திரிகையின்‌ கொள்கை! ஆனால்‌, மிஸ்டர்‌ குணசேகரன்‌, அதை ஒத்துக்‌ கொள்ள புத்து. என்னைப்‌ பெரும்‌ விரோதியாகவே கருதி விட்டார்.
kannal partha velai novel free download, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Kannal Partha Velai 

Info of Novel

Name of the Book:

கண்ணால் பார்த்த வேளை

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
315 Pages
ISBN-13:
5195182032893
Publisher:
Ramanichandran
Copyright Date:
2002
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Kannal Partha Velai என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!