-->

Kathirukiren Rajakumara is a tamil romance novel written by ramanichandran. You can download PDF book of the family based this fiction novel in this page. Sample of the novel is also attached in this page so that you can read the sample. In last paragraph Kathirukiren Rajakumara PDF book download link is available.

Kathirukiren Rajakumara PDF Download | Ramanichandran Novel

காத்திருக்கிறேன் ராஜகுமாரா என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Sample of Kathirukiren Rajakumara Novel

ஆண்டுக்கணக்கில்‌ நயனதாராவின்‌ கனவுகளின்‌ நாயகன்‌. அன்றுவரையும்‌ மாற்றம்‌ இல்லாமல்‌ அதே உயரத்‌தோடு, அதே கம்பீரத்தோடு, அதேமுக அமைப்போடு நிதானமாக வந்து கொண்டிருந்தான்‌! ஸ்விட்ச்‌ போட்டாற்போல்‌ முகமெல்லாம்‌ விகசிக்க, இமைதட்டி விழிப்பது கூட பாவம்‌ என்பது போல பார்வை அவன்‌ மேலேயே நிலைத்திருக்க மெல்ல எழுந்தாள்‌ நயனதாரா.

கால்கள்‌ தடுமாறிய போதும்‌ பிடிவாதமாக அவன்‌ பார்வைக்காகக்‌ காத்து நின்றாள்‌. இந்தப்‌ பாதிப்பு அவனிடமும்‌ இருக்குமா? இத்தனை ஆண்டுகளாக அவனும்‌ கனவு கண்டிருப்பானா? அவள்‌ கனவு காணத்‌ தொடங்கிய முதல்‌ நாளிலிருந்து அவன்‌ மாறவில்லை தான்‌. ஆனால்‌ அவள்‌ மாறியிருக்கிறாளே! உயரமாய்‌ வளாந்து, குண்டு உடல்‌ மெலிந்து, இந்த மாற்றங்களை எல்‌லாம்‌ அவன்‌ கனவில்‌ கண்டிருப்பானோ? இல்லாவிட்டால்‌ அவளை எப்படி இனம்‌ கண்டுபிடிப்பான்‌? இல்லை. கண்டுபிடித்தே ஆக வேண்டும்‌. கடவுளே. முருகா! காப்பாற்று.

ஆனால்‌ அவன்‌ அவளைப்‌ பார்த்தால்‌ அல்லவோ கண்டு கொள்வதும்‌ மற்றதும்‌! அவனுக்குத்தான்‌ அவன்‌ அருகில்‌ வந்து சூழும்‌ யார்‌ யாரையோ பார்த்து, இனிக்க, சிரிக்கப்‌ பேசவே நேரம்‌ சரியாக இருந்ததே!

பாரேன்‌, என்னைப்‌ பாரேன்‌ என்று டெலிபதியில்‌ மனதால்‌ அழைத்தாள்‌ நயனதாரா. யாரோ ஏதோ கூற, அதைச்‌ சற்றுக்‌ குனிந்து கேட்டு, தன்‌ வெண்பல்‌ வரிசை பளீரிட முறுவலித்தபடியே திரும்பியவனின்‌ பார்வை அவளிடம்‌ அவன்‌ முகம்‌ மேலும்‌ மலரவம்‌, உள்ளும்‌ புறமும்‌ பூவாய்‌லர அவளும்‌ அவனது முறுவலைத்‌ திருப்பினாள்‌.

அவன்‌ அவளைத்‌ தெரிந்து கொண்டு விட்டானே? இது பூலோகமே அல்ல. தேவலோகம்‌.” அவன்‌ தேவேந்திரன்‌. அவள்‌ இந்திராணி... சீ. தேவேந்திரன்‌ அகலிகை விஷயத்தில்‌ ணனுக்கு எத்தனையோ கோபிகைகள்‌! இது கைலாசம்‌ தான்‌.
Download Ramanichandran PDF Novels More:


அவன்‌ பிறப்பிறப்பிலாத தெய்வம்‌, சிவம்‌. அவள்‌ சக்தி... அவளது நெஞ்சத்‌ துடிப்பின்‌ வேகத்தை மேலும்‌ அதிகரித்தபடி அவன்‌ அவள்‌ அருகே வந்தான்‌. கையை நீட்டி,“ஆடவருகிறாயா, ராஜகுமாரி?" என்று ஆங்கிலத்தில்‌ கேட்கவும்‌ அவளுக்கு உலகமே மறந்து போயிற்று. தனக்கு ஆடத்‌ தெரியாது என்ற நினைவே இல்லாமல்‌, அவனது நீட்டிய கையுள்‌ தன்‌ கையை வைத்து, உடல்‌ சிலிர்த்‌தாள்‌.

ஹாலின்‌ நடுவில்‌, ஆடுகிறவர்களோடு கலந்து கொள்ள ஓர்‌ எட்டு எடுத்து வைத்த பிறகே நிலை உணர்ந்தவளாகி, எனக்கு ஆடத்‌ தெரியாதே என்று இதைக்‌ கற்று வைக்கவில்‌லையே என்ற தவிப்புடன்‌, தடுமாறி உரைத்தாள்‌ நயனதாரா.

அவன்‌ இலகுவாக முறுவலித்து, “அதனால்‌ என்ன? கூடச்‌ சேர்ந்து ஆட ஆட எளிதாகக்‌ கற்றுக்‌ கொள்ளலாம்‌. அதிலும்‌... உன்‌ போல நளினமான உடலமைப்பு உள்ளவர்களுக்கு இதைக்‌ கற்றுக்‌ கொள்வது மிகவும்‌ சுலபம்‌. கற்றுக்‌ கொடுப்பதே சுகமும்‌ கூட. அந்த பாக்கியம்‌ எனக்குத்‌ தருவாயில்லையா?”' என்று அவன்‌ குரலில்‌ கொஞ்சலுடன்‌ கேட்டபோது அவளுக்கு மறுக்கத்‌ தோன்றவில்லை.

அவனிடம்‌ பாராட்டைப்‌ பெற்றுவிடும்‌ பிடிவாதத்தோடு ந்ததாலோ என்னவோ, கால்‌ ஸ்டெப்ஸ்‌ அவளுக்கு விரைவிலேயே பிடிபட்டுப்‌ போயிற்று. அடுத்து இடையில்‌ அவனது கையின்‌ சிறு சிறு அழுத்தங்கள்‌ அவள்‌ எந்தப்‌ பக்கமாய்ச்‌ செல்ல வேண்டும்‌ என்பதை உணர்த்தி விட, விரைவிலே

அவனோடு இணைந்து ஆடத்‌ தொடங்கி விட்டாள்‌ நயனதாரா. ஒன்றுமட்டும்‌ அவளகக ஆச்சரியமாய்‌ இருந்தது. பொதுவாக யாரும்‌ தன்னைத்‌ தொட்டுப்‌ பேச அவள்‌ அனுமதித்தது இல்லை. தாயார்‌ தவிர, உடனொத்த தோழிகளோடு கூட விளையாட்டாகத்‌ ல அணைத்து, மடியில்‌ சாய்ந்து என்று பழக அவளுக்குப்‌ பிடிக்காது. கூடக்‌ கொஞ்ச நேரம்‌ காத்து நின்றாலும்‌ பரவாயில்லை என்று முடிந்த அளவு கூட்‌டம்‌ இல்லாத பஸ்களில்‌ தான்‌ ஏறுவாள்‌. அப்படியும்‌, எப்போதாவது ஏதாவது இடிமாடுகள்‌ மோதி விட்டால்‌ கூசிப்‌போவாள்‌.

ஆனால்‌ இன்று அவனது அருகாமையும்‌, தொடுகையும்‌ இயல்பு; போல உணர்வது குறித்து உள்ளூர வியப்புடன்‌ உவகையும்‌ கொண்டாள்‌. எல்லாம்‌ அவன்‌ உடையவன்‌ என்பதால்‌ அல்லவா? இத்தனைக்கும்‌ இன்னமும்‌ அவனுடைய பெயர்‌ கூட அவளுக்குத்‌ தெரியாது; அவளது பெயர்‌ அவனுக்குத்‌ தெரிந்திருக்கவும்‌ வழி இல்லை என்பதை எண்ணும்‌ போது சிரிப்பும்‌ வந்தது.

ஆனால்‌ இதுதானே இயற்கையின்‌ ரசவாதம்‌? அன்‌றேக்கே அந்த ஸ்ரீராமனும்‌ சீதையும்‌ ஒருவரை ஒருவர்‌ அவர்‌ இன்னார்‌ என்று அறிந்து கொண்ட பிறகா காதலித்தார்கள்‌? அண்ணலும்‌ நோக்க அவளும்‌ நோக்க என்று வெறும்‌ ஒரு பார்வையில்‌ அல்லவா 'இருவரும்‌ மாறிப்புக்கு இதயம்‌ எய்தி' மனம்‌ பறி கொடுத்தார்கள்‌!

உள்ளங்கள்‌ ஒன்றுபட்ட பிறகு ஊராவது, பேராவது? எல்லாம்‌ முக்கியத்துவம்‌ இழந்து ஒன்றுமில்லாமல்‌ போய்‌ விடுகின்றனவே! இசை மாறி ஒலிக்கவும்‌, அங்கே ஆடிக்‌ கொண்டிருந்த மற்ற ஜோடிகளைப்‌ போல அவளும்‌ அவனோடு பின்னிப்‌ பிணைந்து ஆடத்‌ தொடங்கினாள்‌. ஆடும்போது ஒருதரம்‌ அனிதாவும்‌ அவளுடைய வருங்‌காலக்‌ கணவனும்‌ நயனதாராவின்‌ அருகில்‌ வந்தனர்‌.

தோழியைக்‌ கவனித்து விட்டு, வியப்பும்‌ மகிழ்ச்சியுமாக அனிதா ஏதோ சொல்ல வாயெடுத்தாள்‌. ஆனால்‌ நயனதாராவுக்கு, அவளோடு கூட ஆடியவனின்‌ முகம்‌ தவிர வேறு எதுவும்‌ கண்ணில்‌ படாது போனதோடு, அனிதாவுடைய வருங்கால வாழ்க்கைத்‌ துணையும்‌ அவள்‌ காதில்‌ ஏதோ சொல்லத்‌ தொடங்கவும்‌ அனிதா சொல்ல வந்தது சொல்லப்படாமலே நின்று போயிற்று.

ஆட்ட வேகத்தில்‌ இரு ஜோடியினரும்‌ விலகியும்‌ போய்‌ விட்டனர்‌. அந்த ஆட்டத்தின்‌ முடிவில்‌ அவளை ஓர்‌ ஓரமாக அழைத்துச்‌ சென்றான்‌ அவன்‌. வேகத்துடன்‌ இடையிட்ட ஒரு ஜோடியின்‌ மேல்‌ இடித்து விடாமல்‌ அவசரமாக அவள்‌ ஒதுங்கிய போது சேலையின்‌ உள்‌ முனையின்‌ சரிகை கால்‌ கொலுசில்‌ மாட்டிக்‌ கொள்ளவே, சற்று ஒதுங்கிச்‌ சென்று குனிந்து, சரிகை இழை அறுந்து விடாமல்‌ கொலுசிலிருந்து சேலையை விலக்கலானாள்‌.

அருகில்‌ கிடந்த நாற்காலியில்‌ அமர்ந்து, அவனும்‌ குனிந்து, '*லுக்‌ இந்த ஆட்டம்‌ நள்ளிரவு தாண்டியும்‌ நடக்கும்‌. அதுவரை இங்கேயே இருந்தாக வேண்டும்‌ என்று ஒன்றும்‌ என்றான்‌ குரலில்‌ ஒரு வேகத்துடன்‌. 'இல்லை' என்று தலையாட்டினாள்‌ அவள்‌. நள்ளிரவு வரை இங்கே இருந்தால்‌ தாயார்‌ கதிகலங்கிப்‌ போவாள்‌ என்‌பது கூட அப்போது நயனதாராவின்‌ கவனத்துக்கு வரவில்லை.

இங்கே இத்தனை பேர்‌ நடுவில்‌ நின்று ஆடிக்‌ கொண்டு இருப்பதை விட, இவர்கள்‌ இருவருமாக மட்டுமாய்‌ எங்காவது அமர்ந்து பேசலாமே. இங்கேயே 'லாபி'யில்‌, அல்லது ஏதாவது பார்க்கில்‌, ஏன்‌, பீச்சுக்குக்‌ கூடப்‌ போகலாம்‌. அங்கே கொஞ்ச நேரம்‌ பேசிக்‌ கொண்டு இருந்து விட்டு வீடு திரும்பலாம்‌. பேசுவதற்குத்தான்‌ எத்தனையோ, எத்தனை யுகத்து சமாசாரங்களோ இருக்கின்றனவே! இனியேனும்‌ இருவரும்‌ ஒருவரை ஒருவர்‌ முதலில்‌ அடுத்தவர்‌ பெயரையாவது….
kathirukiren rajakumara novel, ramanichandran novels, ramanichandran tamil novels download, tamil novels, pdf tamil novels free @pdftamil
Kathirukiren Rajakumara

Info of Novel

Name of the Book:

காத்திருக்கிறேன் ராஜகுமாரா

Book About:
Tamil Novel
Author:
Ramanichandran
Download Format:
PDF - Ebook
Book Size:
287 Pages
ISBN-13:
5195182032890
Publisher:
Ramanichandran
Copyright Date:
2004
Copyrighted By:
Ramanichandran Novels
Language:
Tamil
Book Genre:
Fiction / Novel

Download Ramanichandran Novel

Final Words

Ramanichandran அவர்களின் நாவல் Kathirukiren Rajakumara என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்!