-->

Billboard Ads

Muthulakshmi Raghavan Novels Free Download | Muthulakshmi Raghavan is a one of the famous family based novel writer in Tamil Literature. She have been writing vary novels about family and relationship. Do you want to read any other novels just drop the name of the book on comment section.

Muthulakshmi Raghavan Novels Free Download in PDF Format

Are you the reader of family drama novels? Just check it out other famous writers works from here, Ramanichandran, Sashi Murali, Mallika Manivannan and Srikala Novels.

muthulakshmi raghavan novels free download in pdf format, muthulakshmi raghavan novels, muthulakshmi raghavan latest novels, muthulakshmi raghavan tamil novels free download, mr novels
Muthulakshmi Raghavan Novels Free Download in PDF Format

Muthulakshmi Raghavan Novels Free Download

“கூ.. குக்கூ.. கூ...” என்ற சப்தத்துடன் எக்மோரில் இருந்து கிளம்பியது 'பொதிகை' எக்ஸ்பிரஸ்.. 'கிச்.. கிச்.. கிச்...' என்ற தாளலயத்துடன் நகரத் தொடங்கியது.. வந்தனா அவளிருந்த கம்பார்ட்மெண்டின் வாசலில் கம்பியைப் பிடித்தபடி நின்று.. அவளை வழியனுப்ப வந்திருந்த பாஸ்கரனுக்கு டாட்டா சொல்லிக் கொண்டிருந்தாள்...

Agal Vilakku Novel PDF Download


“டாடா.. பை.. பை.. அப்பா ..'
அவளின் உற்சாகக் கூவல் ரயிலின் சப்தத்தையும் மீறி எதிரொலித்தது.. ஒரு மாதகால விடுமுறையை சித்தப்பா வீட்டில் கழிக்கப் போகும் நினைவில் அவள் மனதில் உல்லாசம் வந்து எட்டிப் பார்த்தது..

"அம்மாகிட்டச் சொல்லிருங்க.."
கூவியபடி கையசைத்தவள்.. ரயிலுடன் இணைந்து ஓடி வந்த அந்த வாலிபனைக் கண்டதும்.. அப்பாவுக்கு டாட்டா சொல்வதை மறந்துவிட்டு.. அவனை 'ஆ'வென்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது விட்டாள்...

Azhagana Ratchasiye Novel PDF Free Download

PART - 1

'இந்த வேகத்திலே ரன்னிங்ரேஸில ஓடினான்னா பர்ஸ்ட் பிரைஸ் கப்பு நிச்சயமா இவனுக்குத்தான்..' மனதுக்குள் அவனுடைய ஓட்டத்தை பாராட்ட வேறு செய்தாள்..

Azhagana Ratchasiye Novel PDF Free Download

PART - 2

அவனோ அவளைப் பார்த்து சைகை செய்தான்.. எவ்வளவு தைரியமிருந்தால் ரயிலுடன் ஓடிவந்து அவளை கிண்டல் செய்வான்..? அதையும் அவளுடைய அப்பா பார்க்கும்படி செய்துவைக்கிறானே.. அவளுடைய அப்பா அவளைப் பற்றி என்ன நினைப்பார்..?

“மிஸ்டர்..."
ஒற்றை விரலாய் ஆள்காட்டி விரலை உயர்த்தி.. அவள் குரலையும் உயர்த்திய அதே நேரத்தில் அவளது பாதத்தை உரசிக் கொண்டு எதுவோ போனது.. வந்தனா கால்விரல்கள் வலித்ததில்..

"ஆ...” என்ற அலறலுடன் பாதத்தைப் பார்த்தாள்..
லேசாக சிராய்ந்திருந்தது.. ரன்னிங் ரேஸ் விட்டவனைப் பார்த்து ஆள்காட்டி விரலை உயர்த்திக் காண்பித்ததிற்காக அவன் எதையோ வீசி அவள் காலை உடைத்திருக்கிறான் என்று முடிவு கட்டினாள் வந்தனா..

Azhagana Ratchasiye Novel PDF Free Download

PART - 3

ஆத்திரத்துடன் எட்டிப் பார்த்தவள்..
“நேருக்கு நேரா மோதனும்.. அதை விட்டுட்டு எதைக் கொண்டும் அடிக்கக் கூடாது..” என்று கத்த ஆரம்பித்தாள்...

Anantha Geetham MR Novel Download


இன்னும் கத்தியிருப்பாள்.. அதற்குள் அவன் கம்பார்ட்மெண்டின் வாசலில் இருந்த கம்பியைப் பிடித்து ஒற்றைக்காலை ரயிலில் வைத்துப் பாய்ந்து ஏறி விட்டான்.. ஏறியதோடும் இல்லாமல் 'நேருக்கு நேரா மோதனும்..' என்று அறை கூவல் விடுத்தவளின் மீது நேருக்கு நேராக மோதியும் வைத்தான்..

அவன் மோதிய வேகத்தில் ரயில் பெட்டியின் உள்ளே சாய.. அந்த இடத்தில் நின்றிருந்த வந்தனா பின்னால் சாய்ந்தாள்..
'தட்' என்ற சப்தத்துடன் அவள் கீழே விழ.. அவன் அவள் மேலே விழுந்து தொலைத்தான்...

Engiruntho Aasaigal MR Novel Free Download

PART - 1

வந்தனா இமை கொட்டி விழித்தாள்.. இப்படியொரு மோதல் நிகழக்கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்க வில்லை என்பது அவள் இமைகளைக் கொட்டி விழித்ததில் இருந்து தெரிந்தது..

அப்படியொரு புயல் வேகப் பாய்ச்சலுடன் அவன் அவள் மேல் தாவி வைப்பான் என்று அவள் கனவா கண்டாள்..?
'ஏண்டாக் கிண்டல் பண்றன்னு கேட்டது ஒரு குத்தமாடா..?'

Engiruntho Aasaigal MR Novel Free Download

PART - 2

அவள் எழுந்து கொள்ள முனைந்தாள்.. அது முடியாமல் அவள் மேல் கனமான போர்வை போல அவன் விழுந்திருந்ததில் அவள் சுள்ளென்று எரிந்து விழுந்தாள்..
“மரியாதையா எழுந்திருச்சுரு.. இல்லைன்னா நடக்கறதே வேற.."

Engiruntho Aasaigal MR Novel Free Download

PART - 3

இதைச் சொல்லியவளின் மனதுக்குள் உதைப்பு இருக்கத்தான் செய்தது.. அவன் மரியாதையாக எழுந்து கொண்டால்தான் ஆயிற்று.. இல்லையென்றால் என்ன நடந்து விடும் என்று அவள் மனம் வேறு அவளிடம் கிராஸ் கொஸ்டின் கேட்டு அவள் வயிற்றைக் கலக்கி வைத்தது..

'டேய்.. எழுந்திருச்சுத் தொலைடா..'
அவள் மனதுக்குள் திட்டித் தீர்த்தது அவன் காதுகளில் விழுந்ததைப்போல அவன் எழுந்து நின்றான்..
'அப்பாடி..' அவசரமாக எழுந்து கொண்ட வந்தனா சர்வஜாக்கிரதையாக தள்ளி நின்று கொண்டு அவனிடம் சண்டைக்கு வந்தாள்..

Engiruntho Aasaigal MR Novel Free Download

PART - 4

"என்ன மிஸ்டர்.. ஈவ்டீஸிங்ன்னு கம்ப்ளெயிண்ட் கொடுக்கனுமா..?"
இப்படிக் கேட்டவளை அவன் முறைத்துப் பார்த்ததில் அவளுக்கு என்னடா இது என்று ஆகி விட்டது..
Muthulakshmi Raghavan Novels Free Download in PDF Format
அவள் பாட்டுக்கு தேமே என்று ரயிலில் ஏறி.. சமர்த்துப்பெண்ணாக அவளுடைய அப்பாவிற்கு கையாட்டிக் கொண்டிருந்தாள்.. அப்படி நின்ற அறியாப் பெண்ணை ரயிலுடன் இணையாக ஓடி வந்து 'கவர்' பண்ண முயன்றவன் அவன்..

Engiruntho Aasaigal MR Novel Free Download

PART - 5


அதற்கு அவள் என்னத்தைப் பெரிதாக கண்டித்து விட்டாள்..? ஒற்றை விரலை உயர்த்தி.. 'மிஸ்டர்..' என்று சொல்லி விட்டாள்.. சைட் அடிக்கப்படும் பருவப்பெண் இதைக் கூடச் சொல்ல மாட்டாளா என்ன..? அவன் செய்த சைகைக்கு அவள் அந்த எச்சரிக்கையை விடுக்கா விட்டால் வழியனுப்ப வந்திருந்த அவளின் அப்பா அவளைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்..?

அதனால்தானே.. அவ்வளவு ஹேண்ட்சம்மான ஒருவன் ரயிலின் ஓட்டத்துக்கு இணையாக ஓடிவந்து அவளை சைட் அடித்ததில் மனம் இனித்த போதும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் கோபப்படுவதைப் போல பாவனை செய்து அவனை மிஸ்டர் என்று எச்சரித்தாள்..?

Engiruntho Aasaigal MR Novel Free Download

PART - 6

அதற்கு எதையோ எடுத்து வீசி.. அவளது கால் விரல்களைப் பதம் பார்த்தவன் அவன்.. அடிபட்டால் ஆத்திரம் வராதா..? அந்த ஆத்திரத்தில் நேருக்கு நேராய் மோதனும் என்ற வார்த்தைகளை அவள் கொட்டி விட்டால் உடனே அவன் அதை வேதவாக்காய் எடுத்துக் கொண்டு அவளுடன் நேருக்கு நேராய் மோதி விடுவதா..? அந்த மோதலை அவள் தாங்குவாளா..?

Enniyirunthathu Yedera Full Novel PDF

PART - 1

அவள் எதனால் அவனிடம் அப்படியொரு அறைகூவலை விடுத்தாள்..? ரயிலோடு ஓடி வந்து கொண்டிருப்பவனால்.. ரயிலுக்குள் நிற்பவளிடம் நேருக்கு நேராய் மோதி விட முடியாது என்ற தைரியத்தில்தானே..?

நிலைமை இவ்வாறிருக்க.. அவள் அறைகூவல் விடுத்தாள் என்ற ஒரேயொரு காரணத்திற்காக பெரிய ஜேம்ஸ்பாண்ட் 007யைப் போல ரயிலுக்குள் பாய்ந்து அவள் மீது நேருக்கு நேராக மோதி அவளை வீழ்த்தி.. அவள் மேல் வீழ்ந்தும் விட்டு.. அவள் என்னவோ தவறு செய்ததைப் போல அவளை அவன் முறைப்பது எந்த வகையில் நியாயமாகும்..?

Enniyirunthathu Yedera Full Novel PDF

PART - 2

"ஈவ் டீஸிங்கா..? நானா..? உன்னையா..?”
அவன் அலட்சியமாக உதட்டைச் சுழித்து அவளை ஏற இறங்கப் பார்த்த விதத்தில் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது..
' செய்கிறதையெல்லாம் செய்துட்டு.. கேள்வியைப் பாரு..' மனதுக்குள் வெகுண்டாள்..

Enniyirunthathu Yedera Full Novel PDF

PART - 3

“ஜோக் அடிக்காம உன் சீட்டைப் பார்த்துப் போய் உட்காரு..” அதே அலட் சியத்துடன் அவன் சொன்னான்..
அத்துடன் நில்லாமல் அவளை முறைத்தபடி வாய்க்குள் முணுமுணுத்தான்.. அவையெல்லாம் அவளைத் திட்டும் வசவு வார்த்தைகள் என்று சர்வ நிச்சயமாக 

அவளுக்கு உறுதியானது.. 'இவன் எதுக்கு என்னைத் திட்டறான்..?' அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது..
அவன் செய்து வைத்திருக்கும் அத்தனை வேலைகளுக்கும் அவள் தான் அவனைத் திட்டவேண்டும்.. அவன் அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.. அவளும் போனால் போகிறதென்று மன்னித்துத் தொலைக்க வேண்டும்.. இவையெல்லாம் நடக்காமல் வேறுவிதமாக நடந்து கொண்டிருக்கிறதே..

Enniyirunthathu Yedera Full Novel PDF

PART - 4

அவன் மோதிய வேகத்தை உணர்ந்தவள் அவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க வல்லை.. அவனாவது.. மன்னிப்புக் கேட்பவதாவது.. அவனைப் பார்த்தால் மன்னிப்புக் கேட்கும் ரகமாகவும் தெரியவில்லை..
'திமிர் பிடிச்சவன்...'

அந்தத் திமிர் பிடித்தவன் மன்னிப்புக் கேட்டு.. அவளும் பெருந்தன்மையாக மன்னித்தருள்வது என்பது நடக்கக் கூடிய ஒன்றா..?
அதனால் அவள் அப்பேற்பட்ட பேராசையை எல்லாம் கைவிட்டு விட்டாள்.. அந்த தடிமாட்டுத் தாண்டவராயன் அவள் மீது நேருக்கு நேராக மோதுகிறேன் பேர்வழியென்று அவனது மொத்த கனத்தையும் அவளைச் சுமக்க வைத்ததில் அவளது எழும்புகள் நொறுங்கும் தறுவாய்க்குச் சென்று நூலிழையில் தப்பிப் பிழைத்தன...

Enniyirunthathu Yedera Full Novel PDF

PART - 5

கால்விரல்களின் வலியோடு.. எலும்புகளின் வலியும் சேர்ந்து கொண்டதில் பொறுக்க மாட்டாமல்தான் அவனிடம்.. என்னப்பா.. ஈவ்டீஸிங் என்று புகார் பண்ண வேண்டுமா என்று கேட்டுவிட்டாள்.. வலிதாங்கியவள் அதைக்கூடக் கேட்க மாட்டாளா என்ன..?

Enniyirunthathu Yedera Full Novel PDF

PART - 6

இத்தனை கொடுமைகளையும் அவன் பண்ணிவிட்டு நியாயம் கேட்டவளை 'கன்' எடுத்துச் சுட்டுப் பொசுக்கவா என்று பார்த்து வைத்தால் என்ன அர்த்தம்..? அதிலும் அவளையெல்லாம் அவன் கிண்டல் செய்ய மாட்டான் என்ற வகையில் பேசி வைக்கிறானே... | Muthulakshmi Raghavan Novels Free Download in PDF Format

'இவன் என்ன எனக்கு கோவில்கட்டி கும்பாபிஷேகமா பண்ணிட்டான்..?' அவளுக்கு மனம் தாளவில்லை .. நகைச்சுவை பேசாமல் வேலையைப் பார்க்கப் போகச் சொல்லி விட்டு அவளை வாய்க்குள் திட்டித் தீர்க்கிறானே.. இந்த உத்தம புத்திரன் மனதுக்குள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று கேள்வி கேட்காமல் அவள் எப்படி அவளுடைய இருக்கையைத் தேடிப் போவாள்..?

Enniyirunthathu Yedera Full Novel PDF

PART - 7

"என்ன மிஸ்டர்.. செய்கிறதையெல்லாம் செய்துட்டு.. பெரிய நியாயவாதியப் போல பில்ட் அப் கொடுக்கறிங்க. உங்களுக்கு நான் பேசறது ஜோக்காத் தெரியுதா..?" வந்தனா பொரிந்தாள்..

"பேசாம போயிரு.. நானே கடுப்பில இருக்கேன்.. ஆமாம்.. தெரியாமல்தான் கேட்கிறேன்.. ஒரு டிக்கெட்டை வாங்கிட்டா.. இந்த டிரெயின் முழுவதையும் நீ சொந்தமா விலைக்கு வாங்கிட்டதா நினைப்பா..?"

Enniyirunthathu Yedera Full Novel PDF

PART - 8

கால்களை லேசாக ஆட்டியவாறு தோரணையாக அவன் கேட்டான்.. அவள் திகைத்தாள்...
'இவன் ஏன் இப்படிக் கேட்டு வைக்கிறான்..?'
அவளுக்குப் புரியாத போதும் அவனுக்குப் பதில் சொல்லாமல் விட்டு விடக்கூடாது என்ற வேகத்துடன்..

"அது உங்க நினைப்பு.. நானாவது டிக்கெட் வாங்கிட்டு ரயிலை சொந்தம் கொண்டாடறேன்.. நீங்க வித்-அவுட்டில நேருக்கு நேரா மோதின மகராசனாச்சே...” என்றாள்..
"வித் அவுட்டா..? நானா..?” அவன் விழிகளை உருட்டினான்..

Ezhu Swarangal MR Novel Free Download

PART - 1

"பின்னே..? பர்ஸ்ட் கிளாஸ் ஏஸி கோச்சுக்கு டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கீங்களா..? ரயிலோட ஓடி வந்து என்னைக் கிண்டல் பண்ணினதுமில்லாம மிரட்ட வேற செய்கிறிங்களா..?"

“கிண்டல் பண்ணினேனா..? நானா..?” “பின்னே..? உங்க குளோனிங்தான் வந்து கிண்டல் பண்ணுச்சா..?"
அவன் யோசனையோடு தாடையை தடவியபடி அவளை ஏற இறங்க பார்த்து வைத்தான்.. எதற்காக அப்படிப் பார்த்து வைக்கிறான் என்று தன்னைத்தானே ஒருதரம் பார்த்துக் கொண்டாள் வந்தனா..

Ezhu Swarangal MR Novel Free Download

PART - 2

"எதை வைத்து உன்னை நான் கிண்டல் பண்ணினேன்னு சொல்ற..?” கண்கள் இடுங்க அவன் கேட்டான்.. “பின்னே..? ரயிலோட ரன்னிங்ரேஸ் விட்டுக்கிட்டே.. எண்ணைப் பார்த்துக் கையைக் கையை ஆட்டினா நீங்க எனக்கு 'டாட்டா' சொல்கிறிங்கன்னு நான் நினைத்துக்கனுமாக்கும்.. அதைக் கண்டிச்சதுக்கு கல்லை விட்டெறிஞ்ச மகராசனாச்சே நீங்க..” அவள் கால் விரல்களைக் தடவிக் கொண்டாள்..

“கல்லா ..? இதுவா..?” அவன் குனிந்து தூக்கிக் காட்டியது கல்லையல்ல.. அழகான பெட்டியை..! வந்தனா மீண்டும் இமை கொட்டி விழித்தாள்.. 'பெட்டியா..? இதுவா என் கால் விரலைத் பேர்த்தது..?'
“உங்க ஊரில இதைத்தான் கல்லுன்னு சொல்லுவாங்களா..?" அவன் நிதானமாக கேட்டான்..

Ezhu Swarangal MR Novel Free Download

PART - 3

“என்னமோ.. வாம்மா.. மின்னலுங்கிறதைப் போல விர்ருன்னு ஒன்னு என் கால்விரலைப் பதம் பார்த்துக்கிட்டுப் போனதுதான் தெரியும்.. நீங்க கல்லைக் கொண்டு அடிச்சீங்களா.. இல்ல.. பெட்டியக் கொண்டு அடிச்சீங்களான்னு யாருக்குத் தெரியும்...?” வந்தனா முணுமுணுத்தாள்..

Ezhu Swarangal MR Novel Free Download

PART - 4

"ஹலோ.. உன்னை அடிக்கன்னு ஒன்னும் பெட்டியை வீசி எறியலை.. பெட்டியை உள்ளே போட்டுட்டு.. நான் கம்பியைப் பிடிச்சு ஏறியாகனும்.. அதனாலதான் வீசினேன்.. நான்தான் வழி விடுன்னு சைகை காட்டிக்கிட்டே ஓடி வரேனில்ல.. உன் மரமண்டைக்கு அது உறைக்கலையா..? என்னவோ நான் சர்க்கஸ் காட்டறதைப் போல 'ஆ'ன்னு என்னையும்.. என் ஓட்டத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு விலகாம நிற்கிற..? உன்னையெல்லாம் டிரெயினை விட்டு வெளியிலே தூக்கிக் கடாசி இருக்கனும்.."

அவன் பார்த்த பார்வையில் அந்த உத்தேசமிருந்ததில் வந்தனா பதறிப்போய் பின்னால் நகர்ந்து கொண்டாள்..
“என்ன து..?" Muthulakshmi Raghavan Novels Free Download in PDF Format
"பின்னே..? உனக்குத்தான் பின்னே.. பின்னேன்னு பின் பாட்டுப் பாடத் தெரியுமா..? எனக்குத் தெரியாதா..? டயத்துக்கு டிரெயினை மிஸ் பண்ணாம பிடிச்சுட்டல்ல.. உனக்கு அந்தத் திமிர்.. கடைசி செகண்டில ஓடி வருகிறவனைப் பார்த்தா வேடிக்கை பார்க்கத் தோணுது..?”

Ezhu Swarangal MR Novel Free Download

PART - 5

அவனும் அவளுடன் ரயில் பயணம் செய்ய வந்தவனா..? 'இது ஏன் எனக்குத் தோணாம போச்சு..?'
வந்தனாவுக்கு தன் தலையில் தானே குட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது.. அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதில் குட்டப்போன கையை இறுக்கிக் கொண்டாள்.. அவன் அதை சுவராஸ்யமாக பார்த்து வைத்ததில் உதட்டைக் கடித்துக் கொண்டாள்..

Ezhu Swarangal MR Novel Free Download

PART - 6

"வாசலிலதான நிற்கிற..? ஓடி வருகிறவன் நீட்டற பெட்டியை வாங்கி உள்ளே போட்டுட்டு.. அவனுக்கு கை கொடுக்கலாம்ன்னு மனசில தோணுச்சா..? அந்த அளவுக்கு ஹெல்ப்பிங் டெண்டன்சி..?"
அவன் சொல்லிக்காட்டியதில் அவளுக்கு முகம் சிவந்து போனது.. “எனக்குத் தோணலை..” முகம் கன்றச் சொன்னாள்..

“தோணாதில்ல.. எப்படித் தோணும்..? அதெல்லாம் மண்டையில் மசாலா இருக்கிறவங்களுக்குத்தான் தோணும்.. உனக்குத் தோணாது.. போகுது போ.. உன்னிடம் நான் அது ரெண்டையும் எதிர்பார்க்கல.. வழியை விட்டுத் தொலைன்னுதானே சைகை செஞ்சேன்..? நீ அதையும் செஞ்சு தொலைக்காம ஒட்டு மொத்த வழியையும் ஒற்றை ஆளா மறைச்சு நின்னுக்கிட்டு சண்டை போட்டா.. நான் டிரெயினைப் பிடிப்பேனா.. இல்லை.. உனக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருப்பேனா..?”

Ezhu Swarangal MR Novel Free Download

PART - 7

எதனால் அவன் அவளை முறைத்துப் பார்த்து விட்டு வாய்க்குள் திட்டித் தீர்த்தான் என்பது புரிந்து விட.. வந்தனா நாக்கைக் கடித்துக் கொண்டாள்..
"இதிலே இவங்க காலைப் போர்க்க கல்லைத் தூக்கிப் போட்டேனாம்.. நேருக்கு நேரா மோதறதுக்காக ரயிலுக்குள்ள ஏறினேனாம்.. என்னம்மா சீன் கிரியேட் பண்ற..! நீ பேசாம சினிமாவுக்கு திரைக்கதை வசனம் எழுதப் போயிரலாம்..” அவன் பரிந்துரை செய்ய..

"யாரு பார்க்கிறது..?” என்று அவள் கேட்டு வைத்தாள்... "அது புரொடுயுசரோட தலைவிதி...” என்றவன் அவளைத் தாண்டி நடந்தான்.. “அப்ப நீங்கதான் படம் எடுக்கனும்...” அவள் அவனைத் தொடர்ந்தாள்..
“பழி தீர்க்கனும்ங்கிற முடிவோடதான் நீ இருக்கிற.." என்றபடி அவன் உட்கார்ந்த சீட்டைப் பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது..

Kadhal Enbathu Ethuvarai Novel Download


“இங்க ஏன் உட்காருகிறிங்க..?” என்று கேட்டாள்..
"ஏன்னா.. இதுதான் என்னோட சீட்.." அவன் பெட்டியை சீட்டுக்கடியில் தள்ளி விட்டு.. வாகாக சாய்ந்து அமர்ந்து காலை நீட்டிக் கொண்டான்..

"இது எப்படி உங்க சீட்டாகும்..?” வந்தனா விடாமல் வழக்கடித்தாள்.. "நீ என்ன என்கூட வம்பு வளர்த்துக்கிட்டே இருக்கிற..?” அவன் எரிந்து விழுந்தான்.. "அப்படியொரு நேர்த்திக் கடன்ங்க எனக்கு... இது என்னோட சீட்..”
வந்தனா அவனுடைய சீட்டுக்கு எதிர் சீட்டைக் காண்பித்தாள்.. அவன் புருவங்களை உயர்த்தினான்..

Kaatrodu Thoothu Vitten Novel PDF


"வைத்துக்க.. நான் என்ன உன் சீட்டிலயா உட்கார்ந்திருக்கேன்..?" "அதெப்படி.. கரெக்டா எனக்கு எதிர் சீட்டில நீங்க வந்து உட்காருவீங்க..?" “இதே கேள்வியை நானும் உன்னைப் பார்த்துக் கேட்கலாமில்லையா..?"

அவன் நிதானமாக கேட்டான்.. அவளுக்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை.. திரைப்படத்தில் நடப்பதைப் போல அந்தச் சூழல் இருப்பதாக அவள் உணர்ந்தாள்.. அவளுக்கு எதிர் சீட்தான் அவனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நம்ப வ அள் மனம் மறுத்தது..

"வேனும்னா.. வாசலில ஒட்டியிருக்கிற பெயர் பட்டியலில கதிரவன்ங்கிற பெயர் இருக்கான்னு பார்த்துட்டு வா.."
அவன் ஓய்வாக சரிந்து கொண்டான்.. அவளாலும் ஏன் அதைப்போல ஓய்வாக ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை என்று அவள் மனம் குமைந்தாள்.. எதற்கும் இருக்கட்டுமென்று அவன் பாராத போது வாசல் பக்கமாக நழுவி பெயர் பட்டியலைப் பார்த்து விட்டு வந்தாள்., கதிரவன் என்ற பெயர் இருந்தது..

Geethaiyin Raadhai MR Novel Free Download


"கன்பார்ம் பண்ணியாச்சா..?”
அவளைப் பார்க்காமல் கையிலிருந்த பிஸினெஸ் மேசினைப் பார்த்தபடியே விழியுயர்த்தாமல் அவன் கேட்டான்..
அவன் அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறான் என்பதில் அவளுக்கு வெட்கமாகி விட்டது..

“நான் ஒன்னும் நேம் லிஸ்டைப் பார்க்கப் போகலை.. காத்து வாங்கப் போனேன்..." வந்தனா சமாளிக்க முயன்றாள்.
அவனது உதட்டை வளைத்த கேலிச்சிரிப்பு அவளை இம்சை செய்தது.. அவனை அவள் வேடிக்கை பார்க்கப் போய்.. கடைசியில் அவன் அவளை வேடிக்கை பார்ப்பதைப் போல ஆகிவிட்டதே..

Nilave Nee Satchi MR Novel PDF Download


“நம்பிட்டேன்.." அவன் குரலே அவனது நம்பாமையை அறிவித்தது..
'போடா.. நீ நம்பினால் எனக்கென்ன.. நம்பாவிட்டால் எனக்கென்ன..'
வந்தா ரோசத்துடன் அவள் சீட்டில் சரிந்து அமர்ந்தாள்.. கடந்து போன ஊர்களையும் மின் கம்பங்களையும் கண்ணாடி மறைத்த ஜன்னலில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.. யதேச்சையாக திரும்பிய போது அவளை அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்..

'இவனுக்கு என்னைப் பார்த்தால் எப்படியிருக்கு...?'
அவளின் மூக்கு நுனியில் கோபம் வந்து அமர்ந்து விட்டது.. அவனிடம் ஆக்ரோசமாக வினவியபோது அவன் மறுக்காமல்.. ஆமாம்.. அப்படித்தான்.. அவன் அவளை வேடிக்கைதான் பார்த்தான் என்று சொன்னான்.. அதற்காக இப்போது 'என்னாங்கிற..?' என்ற வினாவை எழுப்பாமல்..

“உன்னைப் பார்த்தால் ஸ்கூல் கோயிஸ் சில்ரனைப் போல இருக்கே..” என்று வினவி வைத்தான்...
“சில்ரனா..?” அவள் முகம் விளக்கெண்ணையைக் குடித்ததைப் போல ஆகிவிட்டது..

Nila Veliyil Novel PDF Free Download


அவளைப் போன்ற அழகான யுவதி ஒருத்தியை.. (அவள் அழகு என்பதை அவன் ஒப்புக் கொள்ள மாட்டான் என்றாலும் உலகம் ஒப்புக் கொள்ளுமே.. அவளுக்கு அது போதாதா..?) அவனைப் போன்ற மட்டக் கேவலமான தோற்றத்தைக் கொண்ட ஒருவன்.. (இதை நினைக்கும் போதே.. அவளது மனச்சாட்சி 'அடிப்பாவி...' என்று அலறி வைத்தது.. சற்று நேரத்திற்கு முன்புதான் அவள் அவனை மகா ஹேண்ட்சம்மான ஒருவன் என்று விழியகல பார்வையிட்டதை கனகாரியமாக நினைவு படுத்தி வைத்தது.. 

அவள் சொல்வது 'அபாண்டம்..' என்ற உண்மையை பிட்டுப்பிட்டு வைத்தது.. அவள் 'போ.. மனச்சாட்சி...' என்று அதை புறம் தள்ளி விட்டு தன் நினைவைத் தொடர்ந்தாள்..) குழந்தை என்று வர்ணிப்பதா..? அந்த வர்ணணையையும் வேலை மெனக்கெட்டு அவளிடமே சொல்வதா..?

Neerada Nathiya Illai Novel Free Download


அவன் அதற்கும்.. ஆமாம்.. அதுக்கு இப்ப என்னாங்கிற என்று கேட்டு வைத்தான்.. அது போதாது என்று..
“எந்த ஸ்கூலில்.. என்ன கிளாஸ் படிக்கிற பாப்பா..?" என்றும் துணைக்கேள்வியொன்றை போட்டு வைத்தான்..

'இவன் என்ன இப்படிக் கேட்டு வைக்கிறான்..?'
வந்தனாவுக்கு உண்மையிலேயே அவளைப் பார்த்தால் பள்ளிக்குச் செல்லும் பாப்பாவைப் போல்தான் இருக்கிறதா என்ற கவலை வந்து விட்டது.. அவள் கடந்து போகும் மின் கம்பங்களை மறந்து விட்டு கைப்பையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எப்படியாவது எடுத்து முகம் பார்த்து விட வேண்டுமே என்ற கவலையில் ஆழ்ந்தாள்..

அவன் அதை உணர்ந்து கொண்டிருந்திருக்க வேண்டும்.. ஒரு விதமான நமட்டுச் சிரிப்புடன் அவளை வேடிக்கை பார்ப்பதைத் தொடர்ந்தான்.. அவள் முகத்தில் வந்து அமர்ந்திருந்த மலையளவு கவலையில் அவனுக்கு சிரிப்பு வந்தது.. அவள் அவனை வசீகரித்தாள்... 

Panithirai MR Novel PDF Free Download


'உண்மையிலேயே இவள் குழந்தைதான்...'
அவன் அவளைப் பார்க்கத் தோதா திரும்பி அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டான்.. கண்ணாடி பார்க்கும் கவலையிலிருந்த வந்தனா அதைப் பார்த்து விட்டுப் பல்லைக் கடித்தாள்.. அதை கண்டு கொண்ட கதிரவனோ புருவங்களை உயர்த்தி..

“என்ன ஆச்சு..?” என்று வெகு அக்கறையாக விசாரித்து வைத்தான்.. “ஊம்..? குழந்தை அழுகுது..” அவள் வெடுக்கென்று பதில் சொன்னாள்..
“உட்வர்ட்ஸை உன் வீட்டிலே கொடுத்து அனுப்பலையா..?" அவன் சிரிக்காமல் வினவி வைத்தான்..

அவளுக்கு உட்வர்ட்ஸ் தேவைப்படும் என்பதை அவள் வீட்டில் உணரவில்லையாம்.. பாவம் குழந்தை.. வழியில் அழுது வைக்குமே.. என்று அவர்கள் நினைத்து வைக்கவில்லையாம்.. அவன் எடுத்துச் சொன்ன விதத்தில்..

“உங்களைப் போல ரயிலில் மீட் பண்ற மகானுபவர் யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்கன்னு என் வீட்டிலே விட்டிருப்பாங்க.." என்றாள் வந்தனா..
“அடடா..” கதிரவன் வருத்தப்பட்டான்.. 'இது எதுக்கு...?’ வந்தனா சந்தேகமாக அவனைப் பார்த்தாள்..

Puthusa Puthusa Oru Kadhal Pattu


“ரயில் பயணத்திலே இப்படியொரு குழந்தையை மீட் பண்ணுவேன்னு எனக்கு முன்னாடியே தெரிந்திருந்தா உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டரை வாங்கிட்டு வந்திருப்பேனே.."

இப்போதும் அவன் சிரிக்கவில்லைதான்.. மாறாக அவன் கண்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன.. கோபத்தில் நுனிமூக்கு சிவக்க... அதை உறிஞ்சியபடி அவனை ‘வெட்டவா.. குத்தவா..' என்று பார்த்துக் கொண்டிருந்த அந்த அழகான இளம் பெண்ணின் சௌந்தர்யத்தில் அவன் மனம் லேசான மயக்கம் கொள்வதை அவனால் உணர முடிந்தது..

கதிரவன் அவளிடம் விளையாட விரும்பினான்.. சற்று முன்பு ரயிலில் ஏறும்வரை அவனிடம் குடி கொண்டிருந்த அத்தனை களைப்பும்.. நிர்பந்தங்களும்.. உளைச்சல்களும் அவனை விட்டு விலகி ஓடியதைப் போல அவனுக்கு இருந்தது.. ரயிலில் ஏற ஓடி வந்தவனைப் பார்த்து ஒற்றை விரலை உயர்த்தி எச்சரிக்கைச் செய்த அந்த சின்னஞ்சிறு பெண்ணிடம் அவன் மனம் மையம் கொண்டது..

Poovum Puyalum MR Novel PDF


அவன்.. கதிரவன்..! கதிர் குருப் ஆஃப் கம்பெனிஸின் முதலாளி.. அவனுடைய அம்மா வாணியின் கூற்றுப்படிச் சொல்வதானால்.. நிற்க நேரமில்லாமல்.. கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பவன்.. அவனுடைய அப்பா சாணக்கியனின் வாக்குப்படிச் சொல்வதானால் தகப்பனுக்கே பாடம் சொல்லும் சுப்பிரமணியன்.. அவனுடைய தங்கை கார்த்திகாவின் பார்வையின் வழி சொல்வதானால்.. இளம் பெண்களைப் பித்துப் பிடிக்க வைத்து மயக்கும் பேரழகன்..Muthulakshmi Raghavan Novels Free Download.

"நீ என் காலேஜ் பக்கம் வராதே அண்ணா ..." "ஏண்டி ..?"
“போங்கம்மா.. உங்களுக்கு ஒன்னும் தெரியாது.. இவன் என் காலேஜ் பக்கம் வந்தா என் பிரண்ட் ஸெல்லாம் ஜொள்ளு விட ஆரம்பிச்சுடறாளுங்க.."

“பாருடா.. இதை நீ சொல்லவே இல்ல பாத்தியா..? யாராரு எத்தனை பக்கெட் ஜொள்ளு விட்டாங்க..? புள்ளி விவரத்தோட சொல்லு.. நான் கணக்குப் பண்றேன்.."
“அண்ணா ..? வேணாம்.."
"நீ தப்பாவே கால்குலேட் பண்ற பாத்தியா..? நான் பக்கெட் கணக்கைச் சொன்னேன் கார்த்திகா.."

Megangal Nagarkinrana MR Novel PDF


“உன் பிரண்ட்ஸ் உன் அண்ணன்கிட்ட கடலை போட நினைச்சா அதில உனக்கென்னம்மா பிரச்னை ..?"
"அதை ஏன்டாடி கேட்கறிங்க..? அத்தனை பேரும் போட்டி போட்டுக்கிட்டு அண்ணாவை இன்ட்ரொடுயூஸ் பண்ணி வைக்கச் சொல்றாங்க.. எனக்கு வேற வேலையே இல்லையா..? நான்தான் காலேஜ் பர்ஸ்ட்.. இவன் வந்தா என்னோட ஸ்டார் இமேஜ் போயிடுது.. இவனோட தங்கைன்னு இவனோட ஸ்டார் இமேஜ் வந்து என்மேல ஒட்டிக்கப் பார்க்குது.."

"விடு கார்த்திகா.."
இலகுவாக சொன்னான் கதிரவன்.. அவன் முகத்தில் விளையாட்டுத்தனம் மறைந்து தீவிரம் வந்திருக்கும்...
"அவங்களிடம் ஒரேயொரு பொய்யை சொல்லிப்பாரு.. அதுக்கப்புறமா உன்னை யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க..”

“என்ன பொய்யைச் சொல்லச் சொல்ற..?"
"என் அண்ணனுக்கு பிஸினெஸ்ஸில் பெரிய லாஸ்.. இனி அவன் முதலிலே இருந்துதான் எல்லாத்தையும் ஆரம்பிக்கனும்.. பண முதலீட்டுக்கு ஃபைனான்சியரைத் தேடிக்கிட்டு இருக்கான்.. உங்களில யாரு அவனுக்கு ஃபைனான்ஸ் பண்ணத் தயாரா இருக்கீங்களோ அவங்க முன்னால வாங்க.. என் அண்ணனுக்கு இன்ட் ரொடுயூஸ் பண்ணி விடறேன்...  | Muthulakshmi Raghavan Novels Free Download...

Vaigaraye Vanthuvidu Novel PDF


அவனும் இப்பேற்பட்ட உதவிக்கரத்தைத்தான் ரொம்ப நாளாத் தேடிக்கிட்டிருக்கேன்னு சொல்லு.. அதுக்குப் பின்னாலே யாராவது என்னை நினைச்சு ஜொள்ளு விட்டாங்கன்னா அப்பச் சொல்லு.. நீ இன்ட்ரொடுயூஸ் பண்ணலைன்னா என்ன.. நானே நேரில வந்து இன்ட்ரொடுயூஸ் அளிக்கறேன்.."

Thanks For Downloading… Muthulakshmi Raghavan Novels Free Download in PDF Format

Hope you downloaded the writer muthulakshmi raghavan novels in pdf format from our website. If there is any brokern links just inform us in comment section. Thanks for Downloading from PDF TAMIL.