-->

100+ Ramanichandran Tamil Novels Free Download PDF

ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list @pdftamil
Ramanichandran Novels Free Download PDF

Ramanichandran Novels Free Download | You can download 100+ Ramanichandran Novels in PDF format. In this page you can get a separate download link for a every single novel and through that you can download it. If you want any more tamil novels or books just comment below in comment section.

Ramanichandran Tamil Novels Free Download

எதிர்பார்ப்புகள் என்றால், அது அவருக்காகத்தான். ஏனெனில், வீட்டினருக்காக . அவர் செய்ய வேண்டிய கடமைகள் என்று. பெரிதாக எதுவும் இல்லை .
வரிசையாக, அவருடைய பெற்றோர். பெற்றுப் போட்டிருந்த ஐந்தாறு பெண்களுக்குத் திருமணம் செய் யவோ , வீட்டை, நிலத்தை விற்றுக் கடன் வாங்கிப் படிக்க வைத்த பெற்றோரின் கடன் தீர்க்கவோ, அவருக்கு அவசி யம் இருக்கவில்லை .

ஏனெனில், அண்ணனும் தம்பியுமாக. அந்தக் காலத்திலேயே, அவர்களுடைய பெற்றோர். அளவோடு தான் பெற்றிருந்தார்கள்.

Aasai Aasai Aasai Download Ramanichandran Tamil Novels 

aasai aasai aasai, ramanichandran novels, ramanichandran novels download @pdftamil
Aasai Aasai Aasai Free Download


'ஓகோ' என்று பெரிய பணக்காரர்கள் இல்லை யென்றாலும், பிள்ளைகள் விரும்பிய படிப்பைப் படிக்க வைக்க அவர்களுடைய பெற்றோரிடம் வசதியும் கூடவே மனமும் இருந்தது.

ராகவன், முதுநிலைப் பட்டதாரியாகி, அரசாங்க வேலையில் அமர்ந்த போது. குடும்பமே மிகவும் சந்தோ ஷப்பட்டது. அவருக்கு . அழகான மனைவி அமைந்து, வசுந்தரா வும் அடுத்து சௌந்தர்யாவும் பிறந்துவிட, அவருக்குப் பெரிய வேலையும், நல்ல குடும்ப வாழ்வும், இலகுவாக அமைந்து போயின.

Amudham Vilayum Ramanichandran Novels Free Download

amudham vilayum, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list
Amudham Vilayum Novel PDF Download


ராகவனுக்கும். கேசவனுக்கும் வயது வித்தியாசம் சற்று அதிகம். ராகவனுக்குச் சௌந்தர்யாவும் பிறந்து. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான், கேசவன் மருத்து வப் படிப்பை முடித்தார்.
படிப்பை முடித்து. மேலே பயிற்சிப் பணியையும் அவர் நிறைவு செய்யும் போதே. நகரின் பெரிய மருத் துவ மனையொன்றில், கை நிறையச் சம்பளத்துடன் பணி புரியும் வாய்ப்பு, அவருக்காகக் காத்திருந்தது.

இந்த மகனுக்கும், மூத்தவனைப் போலவே, நிறை வான வாழ்வு அமையப் போகிறது என்று. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த போதுதான், கேசவன் வக்கரித்துக் கொண்டார்.

Anbin Thanmayai Arindha Pinne Ramanichandran Tamil Novels

anbin thanmayai arindha pinne, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf
Anbin Thanmayai Arindha Pinne Novel PDF


நிறைவான வாழ்வு என்பதன் இலக்கணம். அவ ரைப் பொறுத்தவரையில் வேறு, என்றார்.
மருத்துவப் படிப்பின் அடிப்படையே மக்கள் சேவை, அதிலும் முக்கியமாகக் கிராம மக்களுக்குப் பணிபுரிவதே. தன் லட்சியம் என்று பிடிவாதம் பிடித்த வர். பெற்றோரோ, அண்ணனோ . யார் என்ன சொன்ன போதும் கேளாமல் ஒரே பிடியாகக் கிளம்பிச் சென்று விட்டார்.

ஒரு சிற்றூரில், போர்டை மாட்டிக் கொண்டு தொழிலையும் தொடங்கினார். வருமானம் என்று, பெரிதாக ஒன்றும் இல்லைதான். ஆனால், டாக்டரின் வயிறு வாடாமல், சுற்று வட்டாரத்து மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.

Anbu Manam Maariyathen Ramanichandran Novels Free Download PDF

anbu manam maariyathen, ramanichandran novels, ramanichandran novels download @pdftamil
Anbu Manam Maariyathen RC Novel PDF


வயிறு வாடும் நிலைமை ஏற்பட்டு, டாக்டர் வேறு பசிய நிலம் தேடிப் போய்விட்டால். அப்புறம் இந்த மாதிரி இரவு பகல் என்றில்லாமல், கூப்பிட்ட நேரத்தில் வந்து வைத்தியம் பார்க்கும். ஒரு நல்ல மலிவான மருத்துவர். அவர்களுக்கு எங்கே கிடைப்பார்?
எனவே, டாக்டருக்கு மரியாதை இருந்தது. கூடவே அவரைப் பொறுத்த வரையில், தேவைக்குமிஞ்சியே வருவாயும் இருந்தது.

வற்றாத சுனையும், சுனைக் கோயிலும், கோயிலைச் சுற்றிக் கானகமாய் அடர்ந்து உயர்ந்த மரங்களும், பெரிய குளங்களும், குளத்துப் பாசனத்தில் செழித்து வளர்ந்த பயிர்களுடன் கூடிய பசிய வயல்களும், எளிய மனிதர் களுமாக, அந்த ஊர் மிகவும் பிடித்துப் போனது.

Atharkoru Neram Undu Ramanichandran Novels Free Download

atharkoru neram undu, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf
Atharkoru Neram Undu Novel Free Download


ஆனால், டாக்டர் எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு, மகனைப் பார்க்க வந்த பெற்றோருக்கோ , பெற் றோருடன் கூட வந்த அண்ணனுக்கோ. டாக்டரின் வாழ்க்கை முறை, கொஞ்சமும் பிடிக்கவில்லை.

காரும், பங்களாவுமாக , ஒளிமிக்க. ஓர் உன்னத மான வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, இந்தப் பட்டிக்காட்டில், புதைந்து போய் தன்னை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறான். பையன், என்று மிகவும் வருத்தப் பட்டார்கள்.
மீண்டும் ஒரு தரம், கேசவனிடம் சொல்லிப் பார்த்து அலுத்து விட்டு ''உன் தலைவிதி'' என்று. கை கழுவி விட்டு, மறுபடியும் சென்னை போய்ச் சேர்ந்தார்கள்.

Aval Enge Piranthirukiralo Ramanichandran Tamil Novels

aval enge piranthirukiralo, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list
Aval Enge Piranthirukiralo RC Novel PDF


ஒரு திருமணத்தைச் செய்து வைத்தால் மற்றதை மனைவி பார்த்துக் கொள்வாள் என்று. அதற்கு முயற்சி எடுத்தார்கள். ஆனால், திருமணத்தில் விருப்பமில்லை என்று. அந்த முயற்சிக்கும். கேசவன் முட்டுக்கட்டை போட்டு விட, அவரது எதிர்காலத்தைப் பற்றிய நம் பிக்கை. அவருடைய குடும்பத்தாருக்கு . அற்றுப் போயிற்று.

ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமணம் செய்து கொள்ளப் போவதாக, ஒரு கடிதம் கேசவனிடமி ருந்து வந்தது.
பெண், அந்தப் பக்கமே என்றதும், எல்லோருக்கும் பாதி உற்சாகம் குறைந்து போயிற்று.

Avanum Avalum Ramanichandran Novels Free Download PDF

avanum avalum, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf
Avanum Avalum Ramanichandran Novel PDF


அங்கே போய் பெண்ணைப் பார்த்ததும், மிச்சமும் மறைந்து போயிற்று.
செல்வி, அந்த ஊர்க்காரியே . சின்னப் பண்ணை யார் மகள் என்றார்கள். வயது. சற்று அதிகம் போலத் தோன்றியது. அதுபற்றிக் கேட்டபோது. ஜாதகம் சரியில் லாமல் திருமணம் தட்டிக் கொண்டே போனதாகப் பெண்ணுடைய தாயார் சொன்னாள்.
மற்றபடி அங்கேயும், இந்தத் திருமணத்தில் அதிக மகிழ்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை.

Azhagu Mayil Aadum Ramanichandran Tamil Novels

azhagu mayil aadum, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list
Azhagu Mayil Aadum Free Download


பெண்ணின் பிடிவாதத்தினால் திருமணம் நடப்பதா கப் பேச்சு காதில் விழுந்தது. மாப்பிள்ளையின் கிராம சேவையே அவளைக் கவர்ந்ததாகக் கேள்விப் படவும், திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள், மணம் முடிந்த கையோடு. வாய் திறவாது. ஊர் திரும்பி விட்டார்கள்.
மேலும் நாலு ஆண்டுகள் கழித்து. கேசவனுடைய மகன் பிறந்தபோது. அவருடைய பெற்றோர்கள் இருவ ருமே மறைந்து விட்டிருந்தார்கள்.
சோகம் என்னவென்றால், கேசவனுடைய மனைவி யும் இறந்து போனதுதான்.

Banumathi Ramanichandran Novels Free Download

banumathi ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf
Banumathi Novel Free Download


துக்கத்துக்காகச் சென்றிருந்த ராகவன், அப்போதே னும், நகர்ப் புறத்துக்குத் திரும்பும்படி தம்பியிடம், ஒரு தரம் சொல்லிப் பார்த்தார்.
ஆனால், நாற்பது வயதுக்குமேல், புதிதாக ஒரு வாழ்வை அமைப்பது கடினம் என்று கேசவன் மறுத்து விட்டார். அத்தோடு, கிராமமோ. நகரமோ , எல்லாம் ஒன்றுதான். என்று ஒரு சிரத்தையற்ற தன்மையும், அவ ருக்கு ஏற்பட்டு விட்டிருந்தது.

வாழ்க்கைத் துணையை , அப்போது தான் இழந்தவ னுக்கு. எதிலும் ஆர்வம் உண்டாவது கடினம்தான் என்று தம்பியின் பதிலை எதிர்த்து வாக்குவாதம் செய்து கொண் டிராமல் ராகவன், அப்போது திரும்பிச் சென்று விட்டார். 

Chandini Ramanichandran Tamil Novels

chandini, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list
Chandini Novel PDF Download


அப்புறம் மீண்டும். ஒன்றரை நாள் பயணம் செய்து கிராமம் வரை சென்று. உடன் பிறந்தவனுடன் இது பற்றிப் பேச , அவருக்கு ஊக்கம் உண்டாகவில்லை.
ஒருவன் நல்லபடியாக வளர்ந்து மேல் மட்டத்தை அடைய வேண்டும் என்றால், அந்த உந்துதல், அவனுக் குள்ளாகவே, இருக்க வேண்டும். அதை விட்டு, கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளைக்கு?
அத்தோடு, தம்பிக்கும், நாற்பதுக்கு மேல், வயதாக வில்லையா ? தனக்கு எது நல்லது. எது கெட்டது என்று அவனுக்காகத் தெரிய வேண்டாமா? அவனே யோசித் துச் செய்யட்டும்!

Devi Ramanichandran Novels Free Download PDF

devi, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list
Devi Novel Free Download


தனக்கு இல்லை என்றாலும், தன் பிள்ளையின் எதிர்கால நலனிலாவது ஒரு மனிதனுக்கு அக்கறை இராது? அக்கறை இருப்பவன், அதற்குத் தேவையான தையும், தானே செய்யாமலா , இருப்பான்?


ஏன் ராகவனுக்கே வேறு யார் வந்து செய்தார்கள் ? அவரே படித்து, அவரே வேலை தேடிக் கொள்ளவில் லையா? படிப்பதற்குப் பணம் மட்டும் தானே, தகப்பனார் கொடுத்தார்? மற்றபடி முயற்சி, முன்னேற்றம் எல்லாம் அவரது சொந்த உழைப்புதானே?

Ellam Unakkaga Ramanichandran Tamil Novels
ellam unakkaga, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels 2019 free download pdf, ramanichandran novels pdf
Ellam Unakkaga Novel PDF


இப்படியெல்லாம் எண்ணிக் கொண்ட போது, மன தின் சிறு மூலை உறுத்த. ராகவன், தம்பிக்கு. அவரது எதிர்காலத் திட்டம் என்ன என்று கேட்டு. ஒரு கடிதம் எழுதிப் போட்டார்.

அவர் எழுதிப் போட்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு. இப்படியே இருந்து விடப் போவதாகக் கேசவனி டமிருந்து அவருக்குப் பதில் வந்தது.
குழந்தையை, மாமனார் வீட்டில் நன்கு கவனித்துக் கொள்வதால், பிரச்சினை ஏதும் இல்லை என்றும், 

Ellorukkum Aasai Undu Ramanichandran Novels Free Download
ellorukkum aasai undu, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Ellorukkum Aasai Undu Ramanichandran Novels


அதனால் வீணாகக் கவலைப்பட வேண்டாம் என்றும். அண்ணனுக்குத் தேறுதல் வேறு, பின் குறிப்பு வேறு. இணைக்கப்பட்டிருந்தது.
எப்படியோ தொலையட்டும்' என்று. கடிதத்தைத் தூக்கிப் போட்டதோடு . ராகவன், தம்பியை மறந்தே போனார் எனலாம்.
அப்படி மறப்பது அவருக்குக் கடினமாகவும் இருக கவில்லை.

Enakkagave Nee Ramanichandran Tamil Novels
enakkagave nee, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Enakkagave Nee Free Download


சொந்தக் குடும்பத்தின் தேவைகள், மகள்களின் படிப்பு, வளர்ச்சி, மாப்பிள்ளை தேடுதல், என்று வேறு எதையும் நினைக்க, அவருக்கு நேரமும் இருக்கவில்லை.
அவரே மறந்து விட்ட பிறகு, வீட்டில் மற்றவர்களுக் குக் கேசவனைப் பற்றிய நினைவு எப்படியிருக்கும்?

இவ்வாறு, அனைவருமே, மறந்து விட்ட ஒரு மனிதர், திடும் என்று வந்து நிற்கவும், எல்லோருக்குமே பிரமிப்பாய்த் தானிருந்தது.
முதலில் சுதாரித்துக் கொண்டு . " வாருங்கள் சித்தப் பா'' என்று வரவேற்றவள் வசுந்தராதான்.

Endrendrum Unnoduthan Ramanichandran Novels Free Download
endrendrum unnoduthan, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download, ramanichandran novels 2019 free download pdf
Endrendrum Unnoduthan PDF Download


அதன் பிறகே, "வாடா, வா. ஏது இவ்வளவு தூரம் ? உன் சுனையூரும், அதன் சுற்றுவட்டார மக்களும், உன்னை எப்படி இங்கே வர விட்டார்கள்? வா. உள்ளே வந்து உட்கார்.'' என்று உடன் பிறந்தவரை, ராகவன் உள்ளே அழைத்தார்.

'ஆமாம் உட்காருங்கள்'' என்று எல்லோரும் வர வேற்பில் இணைந்து கொள்ள, கேசவனும், ஹாலினுள் வந்து, சோஃபாவில் அமர்ந்தார்.

En Kannil Paavai Andro Ramanichandran Tamil Novels
en kannil paavai andro, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
En Kannil Paavai Andro RC Novels


"என்ன சாப்பிடுகிறீர்கள்?" என்று. இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தபடியே கேட்டு விட்டு , மைத்துனன் பதில் சொல்லுமுன்பாகவே "ஒரு கடிதம் கூட எழுதவில்லையா? நீங்கள், எங்களையெல் லாம் மறந்தே விட்டீர்கள் என்று நினைத்து விட்டேன்" என்றார் சரசா.

''மறக்க முடியுமா அண்ணி , உட்கார்ந்து, எழுதத் தான் எனக்கு . நேரமே கிடைப்பதில்லை. டிஸ்பென்சரி'. நோயாளிகள் என்று. பொழுது முழுதும் வேலையி லேயே, கழிந்து போய் விடுகிறது'' என்றார் கேசவன்.

Enna Enna Aasaigalo Ramanichandran Novels Free Download PDF
enna enna aasaigalo, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Enna Enna Aasaigalo Novel PDF

 
கூடவே, தன்னிலிருந்து பேச்சைத் திருப்பி, "வசுவும், சௌ சௌ. சௌந்தர்யாதானே, அடுத்தவள் பெயர்? இரண்டு பேரும் நன்றாக வளர்ந்து விட்டார்களே!'' என்றார் மெச்சுதலாக.

"ஆமாம், பெண்கள் இரண்டு பேரும், நல்ல வளர்த்தி. இருவருமே உங்கள் அண்ணனைப் போல. ஆனால் சாயலில், சின்னவள் மட்டும் தான், என் ஜாடை" என்றாள் சரசா. பெருமையாக

Ennai Yar Endru Enni Ramanichandran Tamil Novels
ennai yaar endru enni, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Ennai Yar Endru Enni Novel Download


முதலிலேயே, கேசவன், அண்ணா , உன் இரண்டா வது மகள், என்ன அழகு என்று வியந்திருக்க வேண் டும். அதுதான் இல்லையென்றாலும், தன் சாயலைக் குறிப்பிட்டு சரசா சொன்ன பிறகாவது ஆமாம், உங்க ளைப் போலவே சின்னவள். மிகவும் அழகு' என்று கூறியிருக்க வேண்டும்.

Ennavale Kadhal Enbadhu Ramanichandran Novels Free Download PDF
Ennavale kadhal enbathu, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Ennavale Kadhal Enbadhu Free Novels


இரண்டையும் விட்டு விட்டு, குளிர் பானம் கொண்டு வந்து கொடுத்த வசுவிடம், 'ரொம்ப தாங்க்ஸ் அம்மா . தொண்டை வறண்டு போயிருந்தது. தேவையறிந்து. கொணர்ந்து கொடுத்தாய். உன் பெரிய பெண். கெட்டிக்காரி, அண்ணா அருமையான குழந்தை' என்று அவர் பாராட்டியது மன்னிக்க முடி யாத குற்றமாக, சௌந்தர்யாவுக்குப் பட்டது.

ஆனால், தந்தையின் முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது என்று. தாயார் சொல்லிக் கொடுத்திருந்தது நினைவு வரவும், தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,

En Sinthai Mayanguthadi Ramanichandran Tamil Novels
en sinthai mayanguthadi, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download, ramanichandran novels 2019 free download pdf
En Sinthai Mayanguthadi RC Novel PDF


 "உங்கள் மகன் வரவில்லையா சித்தப்பா? ஒருவேளை, பட்டிக் காட்டிலேயே இருந்து பழகி விட்டதால், பட்டணத்துக்கு வர, அவனுக்குப் பயமாக இருக்கிறதாமா?' என்று. கேலி போலக் குத்தலா கக் கேட்டாள்.

'கருண் எதற்கும் பயப்பட மாட்டானம்மா' என்று கேசவன் முகம் சட்டென வாடியது. தமையனிடம் திரும்பி, கருண் பற்றி, "உன்னுடன் கலந்து ஆலோசிக்கத் தான், நான் இப்போது இங்கே வந்தேன், அண்ணா" என்று கூறவும், சரசாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத் தது.

En Uyire Kannamma Ramanichandran Novels Free Download PDF
En Uyire Kannamma RC Novels PDF


மைத்துனன் கிராமத்துப் பெண்ணை மணக்கப் போவதாகச் சொன்னதிலிருந்தே சரசாவுக்கு உள்ளுர ஒரு பயம்தான். கிராமத்துப் பெண்ணுக்கு நாகரீகம் கற்றுக் கொடு, என்று அந்தப் பெண்ணை அவள் தலையில் கட்டி விட்டால்?
ஆனால், தங்களுக்கு நாகரீகம் போதாது என்று. அங்கே யாரும் எண்ணியதாகவே தெரியாததால், சரசா அஞ்சிய பிரச்சினை, எழவே இல்லை.

En Uyir Neethane Ramanichandran Tamil Novels
en uyir neethane, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
En Uyir Neethane Novel Download


அடுத்து செல்வி இறந்த போது. குழந்தையைத் தன் தலையில் கட்டி விடுவார்களோ - முக்கியமாகக் கண வன், தானாகவே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விடுவாரோ என்று. அவள் கதி கலங்கிப் போயிருந்தாள்.
ஏனெனில், ராகவன் ஒரு மாதிரி மனிதர். வீட்டில் நடக்கும் பல விஷயங்களை, அவர்கண்ணில் படாமல் எளிதாகாவே மறைத்துவிடலாம். ஆனால் அவராக ஒன்று நினைத்து விட்டால், அதை மாற்றுவது. லேசில் முடியாது. லேசில்' என்ன? முடியவே முடியாது என்றே சொல்லி விடலாம்.

Geetha Ramanichandran Novels Free Download PDF
geetha, ramanichandran novels, ramanichandran novels download @pdftamil
Geetha PDF Download


எப்படியோ, அப்போதும் ஒருவாறு தப்பித்தாள். பிள்ளையைப் பற்றிப் பேசத்தான் வந்திருப்பதாகச் கேசவன் கூறவும், இதற்காகத்தான் பிள்ளையை இங்கே கொண்டு வந்து விடப் போவதாகச் சொல்லத்தான் மைத்துனர் வந்திருப்பதாக அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்து விட்டது.
இதை, எப்படித் தவிர்ப்பது?
குறிப்பாகச் சொன்னால் கணவர்தான் புரிந்து கொள்ள மாட்டார். மைத்துனருமா அப்படி?

இப்படி எண்ணிய சரசா . "பட்டிக்காடு, என்ன பட்டிக்காடு? அந்தச் சுனை நீரும், வயல் வெளிகளும், கள்ளமில்லாத கிராமத்து மக்களும் ... 

Idaiveli Athigamillai Ramanichandran Tamil Novels
idaiveli athigamillai, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Idaiveli Athigamillai RC Novel PDF


என்ன அருமை யான இடம் ? அதை விட்டு வர கருண் குட்டிக்கு எப்படி மனம் வரும்? அத்தோடு, உயிராய் வளர்க்கும் தாத்தா வும் பாட்டியும் அவர்களை விட்டு, அவன் வருவானாக் கும்? அப்படி வரச் சொல்ல, உன் சித்தப்பாதான். இரக்கமில்லாத ராட்சதனா?" என்று அவசரமாக உரைத் தாள்.

அண்ணனுக்கு நான் சளைத்தவனில்லை என்பது போல, கேசவனும், சரசாவின் குறிப்பைக் கவனிக்கவே இல்லை.

Ini Ellame Neeyallavo Ramanichandran Novels Free Download PDF
ini ellame nee allavo, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels
Ini Ellame Neeyallavo RC Novels


மாறாக, '' அவனுடைய தாத்தா, பாட்டிக்கு அவன் உயிரைப் போலத்தான். அதற்காக, வயதாகி விட்ட அவர்களிடமே அவனை விட்டு வைக்க முடி யுமா? அவனும், இந்தப் பிள்ளைகளைப் போல, நாகரீக மாக வளர்ந்து, படித்துப் பட்டம் பெற வேண்டாமா?' என்று யாரிடமோ சண்டையிடுவது போலக் கேசவன் வாதாடத் தொடங்கவும் சரசாவுக்கு பகீர்' என்றது.

அய்யோ , இந்த மனிதர். தன் பிள்ளையை, அவள் தலையில் கட்டத்தான். சுனையூரிலிருந்து இவ்வளவு தூரம் , தன் நோயாளிகளைக் கூட விட்டு விட்டு வந்திருக் கிறார்!

Idhu Oru Udhayam Ramanichandran Tamil Novels
idhu oru udhayam, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Idhu Oru Udhayam Novel PDF Download

என்னண்ணி, கருண் யார்? இவர்களுடைய சித் தப்பா மகன்தானே? அவனும், துடிப்பும் துள்ளலுமாக இதுபோல வளர வேண்டாமா? என்று, கேசவன் நேரடி யாக அவளிடம் கேட்டபோது, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இது போல என்றால்? இவர்களைப் போல நகரத் தில் வளர்வதா?
'ஆனால், இந்த நகர்ப்புற வாசமே வேண்டா மென்று தானே... நீங்கள்...' என்று இழுத்தாள்.

Ini Varum Udhayam Ramanichandran Novels Free Download PDF
ini varum udhayam, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels
Ini Varum Udhayam Free Download


பெற்றோரும், தானுமாகத் திரும்பத் திரும்பத் தம்பி யிடம் வாதாடியதும், தோற்றதும் நினைவு வர, ''அது தானே? அப்பா, அப்போது உன்னிடம், எவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னார்? நான் சொன்னதையும் கூடத்தான், நீ காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையே!'' என்று அண்ணன் குறைப்பட்டார்.

சற்று நேரம் தலை குனிந்து அமர்ந்திருந்து விட்டு, "இப்போதும், நான் கிராமத்துக்குப் போனதில், தப்பிருப் பதாக, எனக்குத் தோன்றவில்லை அண்ணா. செல்வி இருந்திருந்தால், அவள் பேச்சு, எப்படியும் எடுபட்டிருக் கும். பிள்ளைக்காக. அவளும் யோசித்திருப்பாள். 

Intha Manam Enthan Sontham Nove PDF
intha manam enthan sontham, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels
Intha Manam Enthan Sontham


அத் தோடு இப்படித் தாத்தா, பாட்டியுடன், கருண் வசிக்க வேண்டிய நிலைமையும், ஏற்பட்டிராது. இன்றையச் சிக்கலும், நேர்ந்திராது' என்றார் தம்பி வறண்ட குரலில்

"அப்படி என்ன பிரச்சினை. இப்போது நேர்ந்து விட்டது?' என்று. தமையன் கேட்க, குண்டு வெடிப்ப தைத் தள்ளிப் போடும் எண்ணத்துடன், 'எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் தம்பி வந்திருக்கிறார். முதலில் உடம்பு , கிடம்பு கழுவி, ஏதாவது சாப்பிடட் டுமே, பசியோடு இருக்கும் போது. சின்னச் சின்னப் பிரச்சினைகள் எல்லாம், பூதமாகத் தோன்றும். நீங்கள் வருவது தெரியாது. ஆனாலும், ஏதோ இருப்பதை நிரவிச் சாப்பிடலாம். 

Iraivan Kodutha Varam Free Download
iraivan kodutha varam, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Iraivan Kodutha Varam RC Novels


வயிறு நிறைந்து விட்டால், அட, இதற்குப் போயா. இப்படிப் பயந்தோம்?'' என்று சிரிப்புக் கூட வரும். தானே இதைச் சமாளித்துக் கொள்ள லாமே என்று. சிக்கலை உங்களிடம் சொல்லாமலே, அவரது ஆருயிர்க் கிராமத்தை நோக்கிக் கிளம்பி விடு வார். உங்கள் தம்பி ஹிஹி'' என்று வலுக்கட்டாயமாய்ச் சிரித்து வைத்தாள் சரசா

அப்போதுதான், கேசவனுக்கு ஓரளவு விஷயம் புரிந்தது. அவரது பிரச்சினையை அண்ணன் அறிவதில், அண்ணிக்கு இஷ்டமில்லை. பிரச்சினை தெரியாது. 

Irulukku Pin Varum Jothi RC Novels
Irulukku Pin Varum Jothi Novel


வயிறு நிறையந்தோழிக் கொள்ள தெமா மொலைவில் அதாவது. அண்ணன், அவருக்கு உதவி செய்வதில் ஏன் என்று புரியாமல் கேசவன் சில கணங்கள் திகைத்துத் தடுமாறினார்.

அண்ணியின் குணம் பற்றி, முன்பு வீட்டுப் பெரிய வர்கள் பேசியதையெல்லாம் யோசித்துப் பார்த்து விட்டு, அதன் பிறகுதானே, அண்ணனிடம் கலந்து ஆலோசிக்க வென்று. அவர் இங்கு வந்ததே!
வெறும் ஆலோசனை கூட, ஓர் அண்ணனிடம், உடன் பிறந்த தம்பி கேட்கக் கூடாதா? அவர் ஒன்றும், பணம் காசையோ, உடல் உழைப்பையோ , மூத்தவரிடம் கேட்டு விடவில்லை!

Iruvaralla Oruvar Endru Theriyuma Novel
iruvaralla oruvar endru theriuma, ramanichandran novels, ramanichandran novels download
Iruvaralla Oruvar Endru Theriyuma RC Novels


இந்த இரண்டையும் மற்றவர்களுக்காகச் செலவு செய்யத்தானே . அண்ணிக்குப் பிடிக்காது. அப்படித் தானே அம்மா சொல்வதுண்டு. என்று யோசிக்கும் போதே. இந்த இரண்டையும் நாடி, அங்கே வரவில்லை என்பதை . தான் இன்னமும் தெளிவு படுத்தவில்லை என்பதைக் கேசவன் உணர்ந்தார்.

உடனே அவசரமாக. 'சாப்பாடு இருக்கட்டும் அண்ணி. எனக்குப் பசியே இல்லை. அத்தோடு, இது பசியாறும் வேளையும் இல்லை. வேளையற்ற வேளை யில், என்னால் உங்களுக்கு எதற்காக, வீண் சிரமம்? நான் வேறு வேலையாகச் சென்னைக்கு வந்தேன் அப்படியே, கருண் விஷயமாக. அண்ண னிடம், ஓர் ஆலோசனை மட்டும் கேட்டு விட்டுப் போகலாம் என்று
இங்கே வந்தேன்'' என்று சரசாவுக்கு . நிலைமையைத் தெளிவு படுத்தினார்.

Kadhal Kondathu Manathu Ramanichandran Novels Free Download PDF
kadhal kondathu manathu, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels
Kadhal Kondathu Manathu Novel PDF


சட்டென முகம் மலர . "இல்லாவிட்டால் இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள் போல. இது உங்கள் அண்ணன் வீடு. அடிக்கடி வந்து போய் இருக்க வேண்டாமா?' என்று. போலியாகக் குறைப்பட் டாள்.
தாயை நன்கு அறிந்திருந்த வசுந்தராவுக்கு . அன் னையிடம், உள்ளுரக் கோபமும், சிறிய தகப்பனாரிடம் மிகுந்த பரிதாபமும் ஏற்பட்டன. சிக்கல் என்று தவிப்பு டன் வந்த மனிதரை, அதைச் சொல்லக் கூட விடாமல் விரட்ட முயற்சிக்கிறார்களே இந்த அம்மா!

Kadhal Oruvanai Kaipidithen PDF
kadhal oruvanai kaipidithen, ramanichandran novels, ramanichandran novels download
Kadhal Oruvanai Kaipidithen RC Novel


சிறிய தந்தையை நோக்கி, 'என்ன பிரச்சினை சித்தப்பா? அதை. முதலில் சொல்லுங்கள் ! அல்லது அப்பாவிடம், தனியாகச் சொல்ல வேண்டுமானால், நாங்கள் வெளியே போய் விடுகிறோம்'' என்று. இனிய குரலில் வினவினாள்.
ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்த போதும், அதைக் காட்டிக் கொள்ள முடியாமல், 'ஆமாம்... அண் ணனுக்கும் தம்பிக்கும் இடையே எத்தனையோ இருக் கும். நடுவில் நாங்கள் எதற்கு? வாங்கடி போகலாம்'' என்று. ஒரு மாதிரிக் கிண்டலாகக் கூறி, மகள்களை அழைத்தாள்.

Kadhal Vaibogame Free Download
kadhal vaibogame, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download, ramanichandran novels 2019 free download pdf
Kadhal Vaibogame Ramanichandran Novels


"அதில்லை. அண்ணி...'' என்று இழுத்த தம்பி யைத் தடுத்து. "போகட்டும், விடு, கேசவா . எல்லாரும்
இருந்தால் உன்னால், லகுவாகப் பேச முடியாது. தேவைப்பட்டால், பிறகு சொல்லிக் கொள்ளலாம்...'' என்று ராகவன் முடித்து விட்ட பிறகு, அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல், சரசா மகள்களோடு வெளியேறி னாள்.

Kadhalenum Solaiyile RC Novel
kadhalenum solaiyile, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Kadhalenum Solaiyile PDF


செல்லுமுன், கேலி போல, "உங்கள் அப்பா, அவர் தம்பியோடு, கொஞ்சிக் குலாவ வேண்டுமாம். இடை யில், பானகத் துரும்பு போல, நாம் எதற்கு? கிளம்புங் கள்'' என்று ஓர் அம்பை எய்துவிட்டுத்தான் சென்றாள்.

பதிலே சொல்லாமல், ராகவன் எழுந்து வந்து கதவைச் சாத்திக் கொண்டு விட, சரசா, 

Kanavu Meipada Vendum Ramanichandran Novels Free Download PDF
kanavu meipada vendum, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Kanavu Meipada Vendum

மூத்த மகளிடம் பாய்ந்தாள். 'உன் சித்தப்பன் பேசுவதற்கு நீ என்னடி, நாட்டாமையா? பெரிய பண்பின் சிகரம் என்று, எண் ணமோ? அவனுக்கு எலுமிச்சைச் சாறு வேறு! தேவையா ! நான் சொல்லாமல், உன்னை யாரடி, கொடுக் கச் சொன்னது? பாவி அங்கே தனியாக , என்ன என்ன சொல்லப் போகிறானோ ? ஒன்றுமே தெரிய வில்லையே' என்று. ஆத்திரத்துடன், சரசா அங்கலாய்த் தாள்.

Kannal Partha Velai Ramanichandran Tamil Novels
kannal partha velai, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Kannal Partha Velai PDF


இந்தப் பாய்ச்சல், ஓரளவு வசுந்தரா எதிர்பார்த்தது தான். ஊர் வம்பில் நாட்டம் மிகுந்த தாயாருக்கு. அப்பா சித்தப்பாவின் பேச்சைக் கேளாமல், எழுந்து வர நேர்ந் தது பிடிக்காது. என்பது. அவள் அறிந்ததுதான்.
அத்தோடு , அப்பா இல்லாத இடத்தில் காரணம் இன்றியே , வசுவைத் திட்டிக் கொண்டு இருப்பது. அன் னையின் பழக்கமாகிக் கொண்டு இருந்தது. சும்மாவே. ஆடுகிறவள், கொட்டுக் கண்டால், விடுவாளா?

Kannethirey Thondrinaal PDF
kannethirey thondrinaal, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Kannethirey Thondrinaal Ramanichandran Novels PDF


இயன்ற மட்டும் அமைதியாக 'அப்பாதான். தேவைப்பட்டால் சொல்லுவதாகச் சொன்னாரே அம்மா?'' என்று தணிந்த குரலிலேயே கேட்டாள்.
''அதென்னடி, தேவைப்பட்டால்? புருஷன் பெண் டாட்டிக்கு இடையில் அதென்னடி ரகசியம்? கேட்க அசிங்கமாயில்லை? உன் அப்பாதான், ஒன்றும் 


kannin mani pondravale, ramanichandran novels, ramanichandran novels download
Kannin Mani Pondravale Ramanichandran Novels Free Download

தெரியா தவர். அந்த மனிதனுக்குத் தெரியாது? பெரிய டாக்ட ராம். மனிதர்களின் மனது பற்றித் தெரியாமல் இவன் என்ன மருந்து கொடுத்து. யாருக்குக் குணமாகும்? சும்மாவா , குக்கிராமத்தில் குப்பை கொட்டிக் கொண்டு கிடக்கிறான்? இங்கெல்லாம் வந்தால், சாயம் வெளுத்து விடுமே!'' என்று வாய்க்கு வந்தபடி, மைத்துனரை இளக்காரமாகப் பேசினாள் சரசா.

Kathirukkiren Rajakumara Free Download
kathirukiren rajakumara, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Kathirukkiren Rajakumara PDF


அற்புத உண்மையை அறிந்து கொண்டவள் போன்று, சோனா கண்களை அகல விரித்தாள். "ஓகோ இது தானாம்மா விஷயம்? ஆனாலும், உங்களுக்கு அறிவுக் கூர்மை அதிகம்மா! நான் கூட , உண்மையா கவே, சேவை மனப்பான்மை காரணமாகத்தான், சித் தப்பா , அங்கேயே விழுந்து கிடக்கிறாராக்கும் என்று எண்ணி விட்டேன்.

Lavanya Free Download
lavanya, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download
Lavanya Ramanichandran Novels Free Download PDF


இங்கே வந்தால், வயிற்றுப் பாட் டுக்கே ததிங்கிணத்தோம்' போடும்படியாகி விடுமோ, என்கிற பயம் அதுவே தானேம்மா? அய்ய்யோ ! எப்ப டிக் கண்டுபிடித்து விட்டீர்கள். அம்மா!'' என்று, குரலி லும், பாவனையிலும் ஏகப்பட்ட மாற்றங்களோடு சௌந் தர்யா சிலிர்த்து, சிலாகித்துப் பேச , சரசாவுக்கு, உச்சிக் குளிர்ந்து, மைத்துனனை, மேலும் மட்டம் தட்டிப் பேசலானாள்.

mai vizhi mayakkam, ramanichandran novels, ramanichandran novels download
Mai Vizhi Mayakkam Ramanichandran Novel PDF

சௌந்தர்யா கூடச் சேர்ந்து ஒத்து ஊதினாள். அம்மா இளைய மகள். இருவருக்கும் இது வழக் கம் தான். யாராவது ஒருவரைப் பிடித்துக் கொண்டு. அவரை வாய்க்கு வந்தபடி வக்கணை பேசுவதும், ஒருவருக்கொருவர் ஒத்து ஒதுவதும் அவ்வப்போது வீட்டில் நடப்பதுதான்.

பேச்சு ரொம்பவும் அதிகப்படியாகப் போகவும். அதுவும் சிக்கல் என்று வந்திருக்கும் சித்தப்பாவைப் பற்றியதாக இருக்கவும் பொறுக்க முடியாமல் வசுந்தரா அவர்கள் பேச்சில் குறுக்கிட்டாள்.

Mayangugiral Oru Madhu Ramanichandran Tamil Novels
mayangugiral oru maadhu, ramanichandran novels
Mayangugiral Oru Madhu

''நீங்கள் சொல்வது சரியில்லை அம்மா. சித்தப்பா வுக்கு. அங்கே மிக நல்ல பெயர். நாம் போயிருந்த போதுகூட, கைராசிக்காரர் என்று நம்மிடமே கூறினார் களே!'' என்று, அன்னைக்கு நினைவூட்டினாள்.

கோபமாக முறைத்துவிட்டு, ''அவ்வளவு பெரிய கைராசிக்காரர், கட்டின பெண்டாட்டியை ஏன் சாகக் கொடுத்தாராம்? அதிலேயே , மருத்துவத்தில், அவர் பெரிய கூமுட்டை என்று. உறுதியாகவில்லையா?" என்று அதட்டிப் பேசினாள், பெற்றவள்.

mella thiranthathu kathavu, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Mella Thiranthathu Kathavu Ramanichandran Novels


''அநியாயமாகப் பழிக்காதீர்கள் அம்மா. சித்திக்கு . உடம்பு முடியாதபோது. சித்தப்பா , அங்கே இல்லவே இல்லையே? அத்தோடு, சித்திக்குக் கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிப்பட்டல்லவா இறந்தார்கள்? அதைக் கூடச் சித்தப்பாவைச் சமயத்தில் கண்டுபிடிக்க முடிந்திருந்தால், அவர் காப்பாற்றியிருப்பார் என்று

muthal muthalaga partha pothu, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Muthal Muthalaga Partha Pothu PDF


இழப்புலயும் கேவலப் படுக்களை ஆத்திரப்தானே . எல்லோரும் பேசினார்கள்? பாவம் சும்மாவே சித்தப்பாவுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பு. இப்படித் தொழிலையும் கேவலப் படுத்தாதீர்கள்'' என்று ஆத்திரப் பட்டுப் பேசிவிட்டு உடனேயே வசுந்தரா நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

எவ்வளவு முயன்று. பயின்றாலும், அவ்வப்போது இந்த நாவடக்கம். இப்படிக் காலை வாரிவிட்டு விடுகி றதே. இனி, அம்மாவிடம் வாங்கிக் கட்டியாக வேண் டும், சோனாவும் கூடச் சேர்ந்து கொள்வாள். அவள்தான் எப்போதுமே, எங்கே. எங்கே என்று இருப்பவள் ஆயிற்றே.
வசுந்தரா அஞ்சியது போலத்தான் நடந்தது.

naal nalla naal, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Naal Nalla Naal Ramanichandran Novels Free Download PDF


வசுந்தரா . தாய் சொல் கேளாத தறுதலையாம். சொல் கேளாத தறுதலையாக மட்டுமாக இல்லாமல், இப்போது தாயைப் பழித்த பாவியும் ஆகிவிட்டாளாம். அதுவும் யாருக்காக? அவளைப் போலவே, பெற்றவர் பேச்சுக்குக் கீழ்படியாத. வாழ்க்கையில் உருப்படாத சித்தப்பனுக்காகச் சொந்த அம்மாவை, அவமதித்து விட் டாளாம். அந்த சித்தப்பனைப் போலவே, அவளும் உருப்படப் போவதில்லையாம்.

naan kandedutha ponmalare, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Naan Kandedutha Ponmalare Download


தாயும் தங்கையுமாகப் பாடி முடித்த போது எத்த னையோ தடவைகள் பட்டு விட்ட பிறகும், வசுவுக்கு மனதுக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.

எப்போதுமே. வசுவைக் குற்றம் சொல்ல. மற்ற இருவரும் சேர்ந்து கொள்வது வழக்கம், வழக்கம்தான் என்றாலும், அவ்வப்போது நல்லபடியாகவும், மூவரும் பேசிக் கொண்டிருப்பது உண்டுதான்.

nathaswara oosayile, ramanichandran novels, ramanichandran novels download
Nathasura oosayile Ramanichandran Tamil Novels


இப்போது. அந்த நல்லிணக்கம் அடியோடு மறைந்து. எந்நேரமும் வெறுப்பே தலை தூக்கி நிற்பதன் காரணம், வசுந்தரா அறிந்ததுதான்.

ஆனால், அதற்காக மீண்டும் பழைய மாதிரி, பெண் பார்க்கும் நாடகங்களுக்கு ஒப்புதல் அளித்துத் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ள, அவளுக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை. அதைவிட இன்றைய வெறுத்த சூழ்நிலையே மேல்.

Nandhini Ramanichandran Novels Free Download PDF


ஒருவேளை இங்கிருந்து கொஞ்சநாள், வேறு எங் காவது போய் வர முடிந்தால், தாய் தங்கையின் மனம் மாறக் கூடுமோ , என்றிருந்தது அவளுக்கு. ஆனால், அப்படி அவள் மட்டுமாக, எங்கே போக முடியும்? வெறும் கனவு, போகாத ஊருக்கு வழி?

தான் மட்டுமாக வெளியூர் செல்வதைப் போகாத ஊருக்கு வழி என்றுதான் வசுந்தரா . முதலில் எண்ணி யிருந்தாள். ஆனால், அது போகக் கூடிய ஊருக்கான வழியாக மாறிய போது அந்த வாய்ப்பை , அவள் விட்டு விடாமல் பற்றிக் கொண்டாள்.

nenjodu nenjam, ramanichandran novels, ramanichandran novels download
Nenjodu Nenjam Ramanichandran Tamil Novels PDF


வசுவுக்கு அந்த வாய்ப்பை அளித்தவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்கு வருகை தந்திருந்த சித்தப்பா கேசவன்தான்.

அன்று அண்ணனும் தம்பியுமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, சேர்ந்து வெளியே போய், ராகவன் மட்டும் திரும்பி வந்தார்.
மற்றவர் எங்கே என்ற கேள்விக்கு "ஏற்கனவே அவன் ஹோட்டலில் ரூம் போட்டிருக்கான். 

nesa mugam, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels
Nesa Mugam Marakkalamo Ramanichandran Novels


இப்போதும். அங்கேயே சாப்பிட்டு விடுவதாகச் சொல்லி இறங்கி விட்டான்' என்றவர் மனைவியை நோக்கி, "திடீர் என்று சாப்பாட்டுக்கு வந்து நின்றால் அண்ணிக்குக் கஷ்டம்" என்றான் நீ முக்கி, முனகிக் கொண்டே செய்வது வீட்டில் எங்களுக்குப் பழகி விட்டது. 

அவனுக்கு அப்படியா? சாப்பாட்டை முடித்துக் கொண்டு, சாயங்காலமாய் வருகி றேன் என்றான். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக் கிறான். கூடக் கொஞ்சம் பாசம் காட்டியிருக்கக் கூடாதா? அப்படி என்ன சாப்பிட்டுவிடப் போகிறான்?' என்று வருத்தத்துடன் இயம்பினார் அவர்.

nila kayum neram, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Nila Kayum Neram PDF


ஒருகணம், முகம் கறுத்த போதும், உடனேயே ஆங்காரத்துடன் நிமிர்ந்து. "ஏன், நான் அவரைச் சாப்பி டக் கூப்பிடவில்லையா? வந்ததும், ஜூஸ் கொடுத்தா யிற்று. அதற்கு மேல் "சாப்பிடுங்கள்'' என்றும் சொல்லி யாயிற்று. சாப்பிடுகிற நேரம் இல்லை' என்று தட்டிக் கழித்தது உங்கள் தம்பிதானே? இப்போது வெளியே தனியே கூட்டிப் போய் உபதேசம் நடந்ததாக்கும்? இவ்வளவு காலம் கழித்து மனிதர் வந்திருக்கிறாரே. என்று பார்த்தால், கோள் மூட்டிக் கலகம் செய்யத்தானா? சே. என்ன மனிதர்கள்? உங்கள் வீட்டாருக்கு என்னைக் கண்டாலே ஆகாது. நான் என்ன செய்தாலும் திருப்தியே

nilavodu vaanmugil, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Nilavode Vaanmugil Ramanichandran Novels Free Download PDF


கிடையாது என்பது. இன்று நேற்று நடக்கிற விஷயமா? என்றைக்குமே அப்படித்தானே?' என்று பொரிந்து கொட்டினாள்.
பழச்சாறு கொடுத்ததற்குத் திட்டியதை இலகுவாக மறந்து விட்டுத் தாயார், அது தன் உபசாரம் போலப் பேசுவதைப் பார்த்தபடி நின்ற வசுந்தரா . அசைவு உணர்ந்து, லேசாகத் திரும்பிப் பார்த்தாள். சௌந்தர்யாதான்.

ondrupatta ullangal, ramanichandran novels, ramanichandran novels download
Ondru Patta Ullangal PDF


அவளும், தமக்கையைப் போலவே எண்ணியவள் போன்று, தமக்கையைப் பார்த்துச் சன்னமாய்க் கண்ண டிக்கவும், பெரியவளுக்குச் சிரிப்பு வந்தது.
இது போன்ற சமயங்களில், சோனாவைப் பார்த் தால், எவ்வளவு நன்றாக இருக்கிறது?
ஆனால், இப்படி சகோதரி என்பதை. அவள் காட்டிக் கொள்வதே. வெகு அபூர்வமாக அல்லவா இருக்கிறது?

Ondru Serntha Anbu Maaruma Ramanichandran


ஒருவேளை, கொஞ்ச காலம் பிரிந்திருந்தால், பாச உணர்வு தலை தூக்கக் கூடுமோ? பிரிவு அன்பைப் பெருக்கும் என்பார்களே!
ஆனால், எங்கே எப்படிப் போவது?
வசுந்தரா யோசித்துக் கொண்டிருந்த போது. அப்ப டியொரு வாய்ப்பு. அவளுக்குத் தானாக வாய்த்தது.

oru kalyanathin kathai, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Oru Kalyanathin Kathai Ramanichandran Tamil Novels


மனைவியின் சொல் மழையில் ராகவன், வழக்கம் போலவே சற்றுத் திணறிப் போனார். அத்தோடு, கேசவ னுக்கு , ஜூஸ் கொடுத்ததும், சாப்பிட அழைத்ததும் உண்மைதானே? ஆனால்.....
கொஞ்சம் குழம்பிவிட்டு "இ.. இல்லை நீ நினைக் கிற மாதிரி ஒன்றும் இல்லை . ஆனால், சரி சரி விடு. இப்போது கேசவனுக்கும் தான் நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்? அத்தி பூத்தாற் போல வந்திருக்கிறானே என்று பார்த்தேன்...'' என்று இழுத்தார்.

oru malar, ramanichandran novels, ramanichandran novels download
Oru Malar Ramanichandran Novels PDF Download


"ஏன்? அருமை மைத்துனன் ஒருவன், பைத்திய மாய் அவருக்கு வால் பிடித்துக் கொண்டு அலைவானே, அவன் என்ன ஆனானாம்? அய்யோ அவனுக்கு என் னமோ என்று போன வருஷமே ஏதோ சொன்னீர் களே ....''
'பாம்பு கடித்துச் செத்துப் போனான். பாவம். அதற்குப் பிறகு இவன் ஒரேயடியாகத் தனித்துப் போனான். பாவம் என்றார் ராகவன் வறண்ட குரலில்.

paalai pasungiliye, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels
Paalai Pasungiliye Ramanichandran Tamil Novels


''அதற்கு நான் எப்படிப் பிணையாவேனாம்? நான் என்ன இவரை இங்கே வரவேண்டாம் என்றா சொன் னேன்? உங்கள் தம்பிக்குத்தான் அண்ணன் ஒருவர் இருப்பதே நினைவில்லாமல் போயிற்று. அவர் தப்புக்கு என்னை விரட்டுங்கள்" என்று மேலும் சற்று விறைத்து விட்டு மெல்ல இறங்கி ஆமாம், திடீரென்று வந்திருக்கி றாரே என்ன விஷயமாம்?' என்று உருக்கமாய் விவரம் கேட்டாள் மனைவி.

Paal nila, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download
Paal Nila Ramanichandran Novels Free Download PDF


அந்த விவரம் தெரியாது போனால், மண்டை வெடித்துவிடாதா?
அது புரியாமல், மனைவி அக்கறையோடுதான் கேட்கிறாள் என்று எண்ணி, ராகவன், அவருடைய தம்பியின் கவலையைப் பற்றிக் கூறினார்.

தம்பியுடைய மைத்துனன் இறந்ததிலிருந்துதான். பிரச்சனை தொடங்கியதாம். தம்பி மகன் எப்போதுமே தாத்தா வீட்டில் தான் வளர்ந்தான் என்றாலும், முன்னெல் லாம் மைத்துனன், தன்னோடு மருமகனை அழைத்து வந்து, டாக்டரோடு வெகு நேரம் உட்கார்ந்திருந்து விட்டுப் போவானாம். அவன் இறந்ததிலிருந்தே. தந்தை யிடம் மகன் வருவது மெல்லக் குறைந்து போய் இப் போது அடியோடு நின்று விட்டதாம். 

partha idathil ellam, ramanichandran novels, ramanichandran novels download
Paartha Idathil Ellam


கேசவனாக போய்ப் பார்த்தபோது அவருக்கு பிள்ளை, அங்கே இருப்பது பிடிக்கவில்லையாம். கூட்டி வந்து விடலாம் என்றால் அந்தப் பேச்சுக்கே இடம் கொடுப்பது இல்லை யாம். இப்போதெல்லாம் முடிந்த அளவு, மகன் கருணை அவர் கண்ணில் காட்டுவதே இல்லையாம். என்ன செய்வது என்று புரியாமல், திணறித் திண்டாடி விட்டு அங்கே வந்திருக்கிறார்.

pakkathil oru pathini pen, ramanichandran novels, ramanichandran novels download
Pakkathil Oru Pathini Pen


'புரிவதற்கு இதில் என்ன இருக்கிறது? சித்தப்பா தானே. கருணா. வருணா. அந்தப் பையனுடைய அப்பா? போலீஸ் உதவியோடு போய்ப் பிள்ளையைக் கூட்டிவர வேண்டியதுதானே? அதற்குத் தைரியம் இல் லாமல், சின்னப் பிள்ளை மாதிரி ஞைஞை' என்று உங்களிடம் வருவானேன்?' என்று அலட்சியமாகக் கேட்டாள் சௌந்தர்யா.

"சொத்துக்காக இருக்கும்'' என்றாள் சரசா. ''செல்வி வீடு அந்த ஊரில், பண்ணைக் குடும்பம் என்று
ஞாபகம். சண்டை போட்டால் பிள்ளைக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமா யிருக்கும்.''

pesum porchithirame, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download, ramanichandran novels 2019 free download pdf
Pesum Porchithirame Ramanichandran Novels


நம் சித்தப்பா இந்த மாதிரியெல்லாம் யோசித்தி ருக்க மாட்டார் என்று. எண்ணிய போதும், அதை வாய் விட்டுச் சொல்லாமல், உள்ளேயே அடக்கிக் கொண்டாள் வசுந்தரா. இப்போதுதானே பட்டிருக்கிறாள். இன்றைய கோட்டா'வுக்கு இது போதாதா?

'பணத்துக்காகப் பார்க்கிறவன், பட்டிக் காட்டில் டாக்டர் தொழிலை நடத்துவானா? யோசியாமல் எடுத் தெறிந்து பேசுகிறாயே? என்று மனைவியைக் கண்டித் தார் ராகவன். 'உன்னைப் போலவேதான் சோனாவும் அவசரப்பட்டு ஏதாவது சொல்லி விடுகிறாள். ஆனால், நீங்கள் இருவரும் சொன்ன மாதிரி இல்லை. விஷயம். அங்கேயுள்ளவர்களை, கேசவனால் அடியோடு விரோ தித்துக் கொள்ள முடியவில்லை. அப்படியும், பையனுக் காக வக்கீலைப் பார்த்துப் பேசினான். 

pongattum inba uravu, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Pongattum Inba Uravu


சின்னப் பிள்ளை பெண்கள் இல்லாத வீட்டில் அவனை எப்படி வளர்க்க முடியும்? என்று கேட்டால், என்ன செய்வது, என்று கேட்கிறார். சட்டப்படி இல்லையென்றாலும், மனிதாபி மான அடிப்படையில், இப்படி ஒரு கேள்வி எழக் கூடும் என்கிறார் அவர். நம் செந்தில் நாதன்தான். அவரிடம் தான், அழைத்துப் போனேன். அத்தோடு, சட்டம் நம் பக்கம் இருந்தாலும், கேசை இழுத்துக் கொண்டே போக முடியும். அப்படிப் போனால், அது பையனுக்கு நல்ல தில்லை என்கிறார். முடிந்த வரை, சமரசமாகப் போக,

poongatru, ramanichandran novels, ramanichandran novels download
Poongatru Ramanichandran Novels Free Download PDF


முயற்சிப்பது மேல் என்று சொல்லுகிறார். முதலில், பிள்ளையைத் தம்பி பக்கம் இழுக்க வேண்டுமாம். பிள்ளைக்கு. அப்பா ஆசை வந்து விட்டால், அவர்களி டம் அடித்துப் பேச முடியுமாம். இவன் பாவம், தலை சுற்றிப் போய் உட்கார்ந்திருக்கிறான்' என்று முடித்தார். அவர்.

"ஏனோ?'' என்று தோளைக் குலுக்கினாள், சௌந் தர்யா. "பிள்ளை என்றால், நம் அப்பா என்று இராதா? இதற்குக் கவலைப்படுவானேன்? மகன் கேட்டது எதை யுமே வாங்கிக் கொடாமல், சித்தப்பா, கஞ்சப் பிசுநாறி யாக இருந்திருப்பார். இப்போது. கவலைப்படுகிறார். பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்யாத அப்பாக்கள், கவலைப்பட வேண்டியவர்கள்தானே? நன்றாகப் படட் டும்" என்று முடித்தாள், அவள்.

poongatru thirumbuma, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Poongatru Thirumbuma Ramanichandran Tamil Novels


தந்தை முகம் சுளிக்கவும். 'அப்படியிராது சோனா. சித்தாப்பாவுக்குத்தான், கருண் பையனைப் பார்ப்பதே அரிதாக இருப்பதாக. அப்பா சொன்னார்களே, பார்க் கவே முடியாத போது. அவன் எதைக் கேட்டு, சித்தப்பா எதை, மறுக்கப் போகிறார். பாவம் என்றாள். வசுந்தரா

அப்படித்தானாம்'' என்றார் ராகவன். ''அவன் மனைவி இருந்திருந்தால், எப்படியோ, இப்போது சும்மா அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து, மகனைத் தேடிச் சென்று, அவனோடு பேசிக் கொண்டிருக்க. இவனால் முடியவில்லை . கேசவன் வீடு திரும்பும் நேரத்தில், அவன் வீட்டிற்குப் பிள்ளையை அனுப்பும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. அனுப்பி, தகப்பனோடு பேரன்

punnagayil putu ulagam, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels
Punnagayil Puthu Ulagam


பழகி விடக்கூடாது என்றே, அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்கிற சந்தேகம், கேசவனுக்கு ஆனால் வெறும் சந்தேகத்தை மட்டும் வைத்துக் கொண்டு குற்றம் சாட்ட முடியாதே"

"பின்னே. இதற்கு என்னதான் தீர்வு அப்பா?" என்று. சித்தப்பாவுக்காக மனம் உருகியவாறு, வசுந்தரா வினவினாள்.

puthu vairam naan unaku, ramanichandran novels, ramanichandran novels download
Puthu Vairam Naan Unaku Ramanichandran Tamil Novels


''அது தெரியாமல் தானே கேசவும் அலை பாய்கி றான். வீட்டில் யாராவது பெண்கள் இருந்தாலாவது. அந்த வீட்டினுள் சென்று. பையனின் பாட்டியோடு. சற்றுப் பேசி பார்க்கலாம். கருணோடும் பேசி விளை யாடி. அப்படியே , அவன் தகப்பனோடு அவனுக்கு. நல்ல பழக்கமும் செய்து வைக்கலாம். இப்போதானால், தம்பி வீட்டில் பெண் வாசனையே இல்லை என்பதால் இதுவும் முடியாது......

raman thediya seethai, ramanichandran novels, ramanichandran novels download
Raman Thediya Seethai Ramanichandran Novels Free Download 


அந்த வினாடியில் வசுந்தராவுக்கு அந்த எண்ணம் உதித்தது.
கண் மூடித் திறக்கும் நேரத்தில், காடு மலை, கடல் எல்லாம் தாண்டி. இந்த உலகத்தையே சுற்றி வரும் வல்லமையுடையது அல்லவா, இந்த மனம்!
எண்ணம் தோன்றிய வினாடியிலேயே , அப்படிச் செல்வதின் பலாபலன்களையும், வசுந்தராவின் உள்ளம் வேகமாக, அலசி ஆராய்ந்து முடித்தது.

சீர்தூக்கிப் பார்க்கும் போது. நன்மைகளின் தட்டு ஏகமாகத் தாழ்ந்து நின்று. அவளை விரைவாக முடிவெ டுக்கவும் வைத்தது.

solai malare kalai kathire, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Solai Malare Kaalai Kathire Ramanichandran Novels

முதல் நன்மை, இப்போது வீட்டில் நிலவும் வெறுப் பான சூழ்நிலையிலிருந்து தப்பலாம். அடுத்ததாக , பிரிவி னால், தாய் தங்கையின் அன்பு பெருகக்கூடும். அத் தோடு, மிக முக்கியமாக, செய்வதறியாது திகைத்து நிற்கும் அவளுடைய சிறிய தகப்பனாருக்கு . ஓர் அரு மையான உதவி புரியலாம். தாய் தங்கை விஷயத்தில், மாற்றங்கள் வருமோ , வந்தாலும் நிலைக்குமோ , என் னவோ, சித்தப்பாவுக்கு இது நிச்சயம் நல்லதாகவே முடியும்!

சட்டெனத் தந்தையின் பக்கம் திரும்பி, 'அப்பா நான் வேண்டுமானால், சித்தப்பாவோடு போய், அவர் வீட்டில் கொஞ்ச நாள் இருந்து விட்டு வருகிறேனே. அங்கே, வீட்டுப் பெண்ணாக இருந்து, கருணோடு பழகி, சித்தப்பாவோடு அவனை ஒட்ட வைக்க முயற்சிக்கிறே னே'' என்றாள்.

sonnal puriuma , ramanichandran novels, ramanichandran novels download
Sonnal Puriuma Ramanichandran Novels Free Download

"உக்கும்!'' என்று. முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள் சோனா . "இந்தம்மா பெரிய சூப்பர் ஃபிக்ஸ்! சித்தப்பாவையும் கருணையும். பிரியாமல் ஒட்ட வைத்துவிடப் போகிறார்கள். பார்த் தும்மா, அப்புறம், இருவரையும் கத்தியால் வெட்டிப் பிரிக்கும்படி ஆகிவிடப் போகிறது. என்றாள் ஏளனமாக.

sontham ennalum thodarkathaithan , ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Sontham Ennalum Thodarkathaithan Novels Free Download

எரிச்சலுற்று. ''நல்ல எண்ணத்தில் ஒருத்தி ஒன்று சொன்னால், இப்படியா , ஏளனம் செய்வது?'' என்று அவளைக் கண்டித்தார் ராகவன்.
செல்ல மகளைக் கண்டித்தது பொறுக்காமல், "படு முட்டாள் தனமாக அவள் உளறினால், வேறென்ன செய் வதாம்? நம் வீட்டுப் பெண், ஏதோ ஒரு குக்கிராமத்தில், கண்டவர் வீட்டில் வசிப்பதா? கேட்கச் சகிக்கவில்லை " என்றாள் சரசா ஆத்திரத்துடன்.

sugam tharum sonthangale, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Sugam Tharum Sonthangale Ramanichandran Novels PDF

கண்டவர்' என்று தன் தம்பியை, மனைவி குறிப் பிட்டது. மேலும் சீற்றமுட்ட, ராகவன் முடிவு செய்தார். 'வசு , நீ போய் உன் துணிமணிகளை எடுத்து வையம்மா. கொஞ்சம் நிறையவே, எடுத்து வை. இரண்டு, மூன்று மாதங்கள் ஆனாலும் பரவாயில்லை. அங்கேயே தங்கியி ருந்து, காரியத்தை வெற்றிகரமாக, முடித்துக் கொண்டே திரும்பி வா'' என்றார் மகளிடம்.

அந்தக் குரலில் அவர் ஒன்று சொல்வது. வெகு அபூர்வம். அப்படி, அவர் சொன்ன பிறகு. அதை எதிர்த்துப் பேசும் துணிச்சல், அந்த வீட்டில் யாருக்கும் இருந்ததுமில்லை. இருக்கவுமில்லை.
இப்படித்தான், வசுந்தரா சுனையூருக்குச் செல்வது என்பது தீர்மானமாயிற்று.
கேசவனுக்கு, மிகவும் சந்தோஷம்.

thannerile thamaraippoo , ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Thannerile Thamaraippoo

அவருக்காக, அண்ணன் மகள், நகர்ப்புற உல்லாசங் களையெல்லாம் தியாகம் செய்துவிட்டு, கிராமத்துக்கு வருகிறாளாம்.
அதுவும், அடிக்கடி பார்த்துக் கூட இராத சித்தப்பா வின் நிம்மதிக்காக

சித்தப்பா மகனான தம்பி, அவனைப் பிறந்த ஒரு வாரக் குழந்தையாகத்தான், அவள் கடைசியாகப் பார்த் தது. அவன் நல்லபடியாக வளர வேண்டும் என்பதற்காக இதை. அவர் திரும்பத் திரும்பச் சொல்லவும், தான் ஏதோ புரட்சி வேலை செய்வது போல, ஓர் உணர்ச்சி, வசுந்தராவுக்கு உண்டாயிற்று. ஏனெனில், அவள், அவ ருக்காக மட்டுமாக, அங்கே செல்லவில்லையே!

tharangini, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Tharangini Ramanichandran Novels PDF Free Download

அதையறியாமல் கேசவன் நன்றி சொல்லச் சொல்ல. எப்படியாவது, சித்தப்பா மகனை, அவருடன் சேர்த்து வைத்து. இந்த நன்றிக்கு . முழுத் தகுதியைப் பெற்று விட வேண்டும் என்ற உறுதி, அவளது உள்ளத்தில் உருவாகி நிலை பெற்றது.
பாடத்தை நன்றாகப் படித்தால்தானே, தேர்வில் வெற்றி பெற முடியும்? '

thavam pannidavillaiyadi, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf, tamil novels pdf free download
Thavam Pannidavillaiyadi Ramanichandran Novels

எனவே, சுனையூரின் சூழ்நிலை பற்றி, அவளு டைய சிறிய தகப்பனாரிடம் விசாரித்து அறிந்து கொண் டாள். அவராகவும் நிறையவே சொன்னார்.
பாவம் மனம் விட்டுப் பேச இதுவரை, அவருக்கு யாரும் ஆள் கிடைத்ததில்லை போலும் இப்போது. அக்கறையுடன் கேட்க ஆள் கிடைத்ததும், கொட்டித் தள்ளி விட்டார்.

அப்போதுதான் புயலின் மையம்' என்பார்களே, அதுபோல இந்தப் பிரச்சினையின் முக்கிய சூத்திரதாரி - அவளது முதல் எதிரி , தனஞ்சயன் என்பது. அவளுக் குத் தெரிய வந்தது.
தனஞ்செயனைப் பற்றி அறியுமுன். வசுந்தரா சுனையூரையும், அதன் சுற்று வட்டாரத்தையும் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

thendral veesi vara vendum, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free download pdf
Thendral Veesi Vara Vendum Ramanichandran Novels PDF

சுனையூரில், ஒரு போதும் வற்றாத ஊற்றுச் சுனை ஒன்று இருந்தது. தொடர்ந்து மானம் பொய்த்து, வறட்சி மிகுதியாக இருக்கும் காலங்களிலும், சுனை நீர், ஓரளவே னும் சுரந்து கொண்டே தான் இருக்கும். அந்தச் சுனை யால், ஊரின் இரு குளங்களிலும், தண்ணீர் எப்போதும் இருக்கும்.

அத்தோடு, அந்த ஊரைச் சேர்ந்த இரு குளங்களுக் கும், பாசனத்துக்காக அணைக்கட்டிலிருந்தும், நீர் திறந்து விடுவார்கள்.
பாசனத்துக்குத் தண்ணீர் தடையின்றிக் கிடைப்ப தால், எப்போதும், பயிர்கள் . பசேலென்று. செழித்து வளர்ந்திருக்கும். மண்ணும் சத்தானது. எனவே, விளைச் சலும் நன்றாகவே இருக்கும்.

thodu kodugal, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran tamil novels free
Thodukodugal Ramanichandran Tamil Novels PDF 

அப்பேர்பட்ட பூமியின் பெரும் பகுதி, அங்குள்ள இரு குடும்பங்களின் கையில் இருந்தது. அதுவும், அண் ணன் தம்பி இருவரிடம்தான்.
இரு குடும்பங்களிலும், வீட்டுக்கு ஒரு பையனும் இரண்டும். மூன்றுமாகப் பெண்களும்.

குழந்தை வீட்டுக்கு பிறகே பெண்கள் திருமணமாகிக் கணவன் வீடு போய் விட, சொத்து விள்ளாமல் விரியாமல், அடுத்த தலை முறைப் பையன்களுக்கு வந்து சேர்ந்தது.
ஒன்று விட்ட சகோதரர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் போன்றே பழகி வந்தனர்.

ullamathil unnai vaithen, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list
Ullamathil Unnai Vaithen Ramanichandran Novels PDF

அவர்களுள், தம்பியுடைய மகள்தான், செல்வி, கேசவனை விரும்பி மணந்து கொண்டவள். அண்ணன், தம்பி, இவருக்குமே, பல ஆண்டுகள் குழந்தையில்லாதி ருந்து, குடும்பத்தின் முதல் குழந்தையாகத் தம்பி தாமோ தரனின் வீட்டில் அவதரித்தவள். இரு வீட்டுக்கும் செல் லம். அவள் பிறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகே. மூத்தவளுக்கு ஒரு மகனும், அதன் பின் இளையவருக்கு ஒரு பிள்ளையும் பிறந்தனர்.

ullam marukkuthillai unnai, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf
Ullam Marukkuthillai Unnai Ramanichandran Novels Free Download

செல்வி திருமண வயதை எட்டும் வரை, எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.
திருமணத்துக்காக அவளது ஜாதகத்தைப் பார்த்த போதுதான், எல்லாருமே அதிர்ந்து போயினர்.
ஆளாளுக்கு. ஒவ்வொன்று சொல்லவும், அவளது திருமணம் பற்றி, மேலே எதைச் செய்யவும், எல்லாரும் பயந்து போயினர்.

பூ என்று. எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தி விட்டுத் தன் விருப்பம் போலச் சுற்றி கொண்டிருந்தவ ளுக்கு. எப்படியோ, கேசவனிடம் மனம் லயித்துப் போனது.
அவளுக்குத் திருமணம் செய்ய, பெற்றவர்களுக்கு மனமில்லைதான். ஆனால், செல்வியின் பிடிவாதம் உல கறிந்த ஒன்று.

unmai kadhal maaripoguma, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf
Unmai Kadhal Maari Pogumo Ramanichandran Novels PDF

கல்யாணம் என்ற எண்ணமே இல்லாதிருந்த கேசவ னையே. அவள் தன்புறம் திருப்பி விட்டாள்.
அவரிடமும், செல்வியுடைய பெற்றோர், அவளது ஜாதகம் பற்றி மறையாது கூறத்தான் செய்தார்கள்.

ஆனால், கேசவனுக்கு . எப்போதுமே, இந்த ஜாத கம், ஜோசியம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. சிலர் . மாரகம் வந்து விட்டதாம், மருந்து வேண்டாம்' என்கையில் கொதித்துப் போவார். தான் மறுத்தால், செல்விக்கு இந்தப் பிறவியில், இவர்கள் திருமணம் செய்து வைக்கப் போவதில்லை என்று. தோன்றவும் உறுதியாக நின்று, அவளைக் கைப்பிடித்தார்.

unmaiyai thavira verillai, ramanichandran novels, ramanichandran novels download
Unmaiyai Thavira Verillai Ramanichandran Novels PDF

பிறகு நடந்ததை . ஜாதகக் கோளாறு, திருமணம் செய்யாமல் இருந்திருந்தால், அவள் உயிரோடவாவது இருந்திருப்பாள் என்று அவர்கள் சொன்ன போது, அதை யும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. செல்வி, கொஞ்சம் கவனமாக நடந்திருந்தால், ஒன்றுமே நேர்ந்திராது. எதி லும், அவளுக்கிருந்த வழக்கமான அலட்சியமே, அவ ளது உயிரைக் குடித்தது என்பதே. கேசவனின் முடிவு.

unnai thazhividilo, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf
Unnai Thazhuvidilo Ramanichandran Novels PDF

இந்த விஷயத்தில், இரு குடும்பங்களின் வாரிசுக ளுமே, அவருடன் தான் ஒத்துப் போயினர்.
அண்ணன் தையல்பாகனுடைய மகன் தனஞ்சய னுக்கும், கேசவனைப் போலவே, ஜாதக சம்பிரதாயங்க ளில், அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. ஆனால், செல்வியின் குணம் அறிந்திருந்தும் குழந்தைப் பிறந்ததற் கான நாள், அவ்வளவு நெருக்கத்தில் இருந்த போது. கேசவன் அவளை விட்டு விட்டு, மற்ற நோயாளிகளைப் பார்க்கச் சென்றிருக்கக் கூடாது என்று. அவன் சொன்ன தாகக் கேள்வி.

urangatha kangal, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list
Urangatha Kangal Ramanichandran Novels PDF Download

மற்றவர்களிடம் அவன் சொன்னதாகக் கேட்டவர் கள், கேசவனிடம் வந்து சொன்னார்கள்.

"என்னிடம், நேரடியாக அவன் ஒன்றும் சொன்ன தில்லை. வசும்மா . ஆனால் முன்பு இருந்த அளவு. எங்கள் வீட்டுக்கு. அவன் வரவில்லை. அதைக் குறை கூறவும் முடியாது. அவன் அக்கா இருக்கும்போது. அவனோடு அரட்டை அடித்துக் கொண்டு கிடப்பார்கள். நான், இடையிடையே கலந்து கொள்வேன். பாதி நேரம், யாராவது நோய் என்று வருவார்கள். அல்லது. சிகிச்சைக் காக நான் வெளியே போக வேண்டியிருக்கும். அத னால், அவன் வராததைக் குறையாகக் கூற முடியாது ... ஆனால்...''

uyirai irukka varuvaya, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf
Uyirai Irukka Varuvaaya Ramanichandran Novels PDF

'ஆனால், என்ன சித்தப்பா? வாயால் சொல்லா மல், செய்கையால் குற்றம் சாட்டுவது போல நடந்து கொண்டாராக்கும்? ச்சு சித்தப்பா சித்தியுடைய சொந்தத் தம்பியும் ஒருவர் உண்டல்லவா. அ... அதாவது.... இருந்தார் அல்லவா? அவரும், இப்படித்தானா?'' என்று, வசுந்தரா விசாரிக்க, கேசவனின் முகத்தில் வருத் தம் பரவியது.

"இல்லையம்மா. முருகன் அப்படிப்பட்டவனே. அல்ல. எப்போதும், அவனுக்கு என்னிடம், ஒட்டுதல் அதிகம். இரவு நேரத்தில் தனியே போகாதீர்கள். அத் தான்'' என்று கூடவே வருவான். இரவு எந்நேரமானா லும், நான் திரும்பி வந்து, குளித்து முடிக்கும் போது. கருணோடு இங்கே இருப்பான். அவன் இருந்தபோது. தினமும் பிள்ளையைப் பார்க்க முடிந்தது. ஆனால், ஜாக்கிரதை. ஜாக்கிரதை' என்று எனக்கு எச்சரிக்கை செய்தவனே பாம்பு கடித்து மாள்வது என்றால், அவரவர் தலைவிதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது போலும்!'' என்று பெருமூச்செறிந்தார் டாக்டர்.

uyiril kalandha urave, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels
Uyiril Kalandha Urave Ramanichandran Novels PDF

யோசனையோடு நோக்கியவள், "சித்தி மறைவை விட, அவர்கள் தம்பியின் மரணத்துக்கு அதிகம் வருத்தப் படுகிறீர்கள் போலத் தெரிகிறதே. சித்தப்பா!'' என்று. மனதில் தோன்றியதைக் கேட்டுவிட்டு, நாக்கைக் கடித் துக் கொண்டாள். வசுந்தரா.

ஆறிவரும் ரணத்தைக் கீறிவிட்டு விட்டோமா. என்று அவள் மனம் உறுத்தியது.
பாவம், சித்தப்பா. இந்த நாலு ஆண்டுகளுக்குப் பின், ஒருவாறு. மனைவியின் பிரிவிலிருந்து. மீளத் தொடங்கியிருக்கலாம். அசட்டுத் தனமாகக் கேள்வி கேட்டு, அந்தத் துன்பத்தை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கக் கூடாதே . என்று அவள் மனம் துடித்தது.

vaigai perugi varumo, ramanichandran novels, ramanichandran novels download
Vaigai Perugi Varumo Ramanichandran Novels Download

ஆனால், கேசவன் சாதாரணமாகவே, பதில் சொன் னார். "நீ சொன்னது. நிஜம்தானம்மா" என்றுரைத்து. அவளை வியப்படைய வைத்துவிட்டு. விலகினார்.
''செல்வி இருந்திருந்தால், இந்தப் பிரச்னைகள் ஏதும் எழுந்திராது என்பது உண்மைதான் என்றாலும், அவளது மரணம், அத்தோடு முடிந்து போன விஷயம். அவ்வப்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கும் தான் என்றாலும் வேலையில் ஈடுபடும்போது, அந்த நினைவு ஒதுங்கிப் போய்விடும்''

vaira malar, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf
Vaira Malar Ramanichandran Novels PDF Download

"இந்த முருகன் விஷயமும் அப்படி முடிந்து போன துதானே, சித்தப்பா?"
"இல்லையம்மா. சித்தி இறந்த போது. அவள் இல்லை என்கிற வேதனை மட்டும்தான். முருகனின் மறைவு. ஒரு பிரியமான, நல்ல உறவினன் இறந்தான் என்பதோடு, பல்வேறு தொடர் பிரச்சினைகளுக்கும் அஸ்திவாரம் ஆகிவிட்டது. முக்கியமாக கருண் ! அவன். 

அந்தக் குடும்பத்துக்கு . மிகவும் இன்றியமையாதவன் ஆகி விட்டான் .... புரியவில்லையா? இதுவரை, முருகன். என் மாமனாருடைய வாரிசாக, அவரது சொத்துக்களுக்கு எதிர்காலச் சொந்தக்காரனாக, அந்தக் குடும்பத்தின் வருங்காலப் பாதுகாவலனாக இருந்தான். ஆனால் இப் போது. அவர்களுக்கு யார் வாரிசாக முடியும் சொல்லு'

valai oosai, ramanichandran novels, ramanichandran novels download
Valai Oosai Ramanichandran Novels Free Download PDF

"ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டால், வாரிசு . தானாக ஏற்பட்டு விடுகிறது" என்றாள் வசுந்தரா
"தத்து எடுப்பதெல்லாம், இங்கே, அவ்வளவு எளி தாக ஏற்கப்படுகிற விஷயமல்ல. வசுந்தரா. அவரவர் ரத்தம் என்று. ரொம்பப் பார்ப்பார்கள். அப்படி. ரத்த 

வாரிசாகக் கருணாகர் இருக்கும் போது. தத்து எடுப்ப தற்கு அவசியம் தான். எங்கே வந்தது?''
"ஓகோ!'' என்று கண்களை அகல விழித்தாள் வசுந்தரா .

vallamai thanthuvidu, ramanichandran novels, ramanichandran novels download
Vallamai Thanthuvidu Novel PDF

"இப்போ புரிகிறதில்லையா? கருணாகரை, அவர்க ளுடைய வாரிசாகத்தான், அவர்கள் வீட்டில் நினைக்கி றார்கள். அவர்களுடைய மகள் வழியே , அவர்களுடைய ரத்தம், அவன் சொத்துக்கும். அவர்களுக்கும் வாரிசு!'' என்று, கேசவன் விளக்கினார்.

"இருக்கட்டுமே, சித்தப்பா. அவர்கள் சொத்தை, அவர்கள் கருணுக்கே கொடுக்கட்டும் நல்லதுதான். கருண் இப்போதே, சொத்துக்காரனாக இருப்பான். அவர் களுக்கு வாரிசாகவும் ஏற்படுத்தி விடட்டும். கூடவே, அவன் உங்கள் மகனாகவும் இருப்பதில், அவர்களுக்கு என்ன ஆட்சேபம்? உங்களை ஏன், கருணைப் பார்க்க விட மாட்டேன் என்கிறார்கள்? அது எனக்குப் புரியவில் லையே!'' என்று. மேலும் விளக்கம் கேட்டாள் வசு.

vazhvenbathu unnoduthan, ramanichandran novels, ramanichandran novels download
Vazhvenbathu Unnoduthaan Ramanichandran Novels PDF


''அம்மா, நான் யார் ? ஒரு டாக்டர். என் பையனை. நான் என்ன படிப்பு படிக்க வைப்பேன்? மருத்துவம் தானே? ஸ்டெத்தைப் பிடித்த கை. ரத்தத்தையும் சீழை யும் தொட்டு வேலை செய்யக் கூடும். ஆனால், இவர்கள் தொழில் என்ன? பயிர்த் தொழில் சேற்றில் இறங்கி வேலை செய்ய வேண்டும். 

இவன் ஏன் செய்ய வேண் டும்? இவன் முதலாளிதானே என்று கேட்காதே. உடை யவன் பார்க்காவிட்டால், ஒரு முழம் கட்டை' என்று. பழமொழியே இருக்கிறது. முழம் என்றால், பழைய நீட்டலளவை. கட்டையாகி விடுவது. வயலைப் பாராத வனின் பயிர். விடுவார்களா? அத்தோடு, அப்பாவைப்

velai vantha pothu, ramanichandran novels, ramanichandran novels download
Velai Vantha Pothu Ramanichandran Tamil Novels PDF


போல டாக்டராகி விட வேண்டும் என்று. பிள்ளைக்கு ஆசை வந்து விட்டால்? இந்த நிலம் நீச்சையெல்லாம் என்ன செய்வது? அதை விடவும், கருணுக்கு. அப்பா பாசம்' வந்து, அவர்களை விட, என் மீது அதிகமாக அன்பு ஏற்பட்டுவிட்டால்? அப்பாவுடன் தான். இருப் பேன் என்று விட்டால்? அதற்கெல்லாம். இடம் கொடுக் கக் கூடாது என்றுதான், இந்த முன்னெச்சரிக்கை" என்று விவரம் கூறினார் கேசவன்.

"ஓகோ' என்று மீண்டும் சொல்லி, சிறிய தந்தை சொன்னதையெல்லாம் ஜீரணித்துக் கொண்டாள், வசுந் தரா.
சற்று யோசித்து விட்டு. " அந்த முருகன் இறந்து எவ்வளவு நாளாகிறது. சித்தப்பா?" என்று விசாரித்தாள்.
"சுமார் ஓர் ஆண்டு, மேலே ஓரிரண்டு மாதங்களும் ஆகியிருக்கும்'' என்றார் கேசவன்.
venmayil ethanai nirangal, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list
Venmayil Ethanai Nirangal Ramanichandran Novels Free Download


"இந்தப் பதிநாலு மாதங்களில், கருணை நீங்கள் சந்திக்கவே இல்லையா சித்தப்பா?''
ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது. வசும்மா. முருகன் செய்தது போலத் தினமும், கருண் இங்கே என் வீட்டுக்கு வரவில்லை. ஆனால் அவ்வப் போது யாராவது. அவனைத் தூக்கி வருவார்கள். பல சமயங்களில் அது அவன் தூங்குகிற நேரமாக இருக்கும். அப்புறம், கொஞ்ச காலம், டிஸ்பென்சரி' வைப்பதில், தீவிரமாய் ஈடுபட்டிருந்ததில் நானே. அவனைத் தேட வில்லை .

''நீங்கள், டிஸ்பென்சரி' கூட வைத்திருக்கிறீர்களா சித்தப்பா?" என்று. ஆர்வத்துடன் வினாவினாள், வசுந் தரா.
'ஆமாம்...' என்று. இழுத்தபோது. கேசவனின் குரலில், பெருமையும், சந்தேகமும் கலந்து ஒலித்தது. ''மருந்துக்காக, இந்த மக்களை அலைய விடுவதை விட, இது நல்லது என்று, தனா சொன்னான்' என்ற போதும். அவரது குரல் அப்படியேதான் இருந்தது.
vennilavu nee enaku, ramanichandran novels, ramanichandran novels download
Vennilavu Nee Enaku Ramanichandran Novels Free Download


"தனா' என்றால் ... அந்த ஒன்று விட்ட... இல்லை , இரண்டு விட்ட மைத்துனனா சித்தப்பா?'
'ஆமாம்மா... இப்போது, மருந்துகள் காலியாகக் காலியாக, அவைகளைப் பெரும்பாலும் வாங்கி வருவ தும் கூட அவன்தான்'' என்றார் சுரத்தின்றி.

கேள்வியாய் நோக்கி, ''நல்ல காரியம்தானே, சித் தப்பா? உங்களுக்கு. அலைச்சல் மிச்சமாகும்தானே?'' என்று கேட்டாள் வசுந்தரா
'செலவும் கூட. பல விலை உயர்ந்த மருந்துகள் இருக்கின்றன. பெரும்பான்மைக் குடியானவ மக்களால் பணம் கொடுத்து, வாங்க முடியாதவை. அவைகளைக் கொண்டு வந்து தந்துவிட்டுப் பணம் கூட வாங்கிக் கொள்ள மாட்டான். தேவைப் படுகிறவர்களுக்கு . இலவ சமாகக் கொடுக்கச் சொல்லி விடுவான்'' என்றார் அவர் உணர்ச்சியற்ற குரலில்.

''அதுவும் நல்லதுதானே? ஆனால், உங்களுக்கு இது பிடிக்காத மாதிரித் தோன்றுகிறதே?'' என்று கேட் டாள். வசுந்தரா.
'பிடிக்காமல் இல்லையம்மா. ஆனால், கொஞ்ச நாளாக எனக்கு ஒரு சந்தேகம். என்னை , நன்றிக் கடன் படவைப்பதற்காகத் தனஞ்சயன் இதையெல்லாம் செய்கி றானோ ... என்று .....

vennilavu suduvathenna, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free
Vennilavu Suduvathenna Ramanichandran Tamil Novels PDF


"நன்றிக் கடன்....? ஓ. மிஸ்டர் தனஞ்சயனும், உங்கள் மாமனார் பக்கம் அப்படித்தானே? திருக்குற ளில், அவர் நாண நன்னயம் செய்து விடல்' என்று வருமே, இதுபோல, கருண் பற்றிய பேச்சையே, நீங்கள் எடுக்கத் தயங்கும் அளவுக்கு. இப்படி நல்லது செய்து விடுகிறாராக்கும் பயங்கரமான ஆள் போலத் தெரிகி றாரே. 

சித்தப்பா? ஆனால், ஒன்று. அவரது அல்லது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வயல்களில் வேலை செய்யும் குடியானவர்களுக்குத் தானே, அவர் செய்வதெல்லாம்? உங்களுக்காக அல்லவே? அவர் ஆட்களுக்கு. அவர் செய்வது. உங்களை எப்படிக் கட்டுப்படுத்தும்? அவற்றிற்காக நீங்கள் எப்படி, நன்றிக் கடன் படுவீர்கள்? தேவையே இல்லை'' என்றாள் வசுந்தரா.

"ஒரேயடியாக, அப்படிச் சொல்ல முடியாதும்மா" என்றார். கேசவன். "என்னிடம் வைத்தியத்துக்கு வருகிற வர்கள், பண்ணைக் குடும்பத்தில் பணி புரிகிறவர்கள் மட்டும்தான் என்று. இல்லை. அக்கம் பக்கம், எல்லோ ருமே வருவார்கள். அத்தோடு . இப்படி ஓர் ஏற்பாடு செய்தால், பெரும்பாலும் அதிக வசதியற்ற இந்த மக்க ளுக்கு நன்றாயிருக்கும், என்று ஆசைப்பட்டவனும், அந்த ஆசையை, அவனிடம் சொன்னவனும் நானே

தானே? அப்படியிருக்க, இதற்காக நன்றிக் கடன் படத் தேவையில்லை என்று. எப்படிச் சொல்ல முடியும்?'' என்று கேட்டார். டாக்டர்.
''ஆக, ஒரு கல்லில், இரு மாங்காய் என்பதுபோல, அவரிடம் வேலை செய்கிறவர்களின், ஆரோக்கியத்துக் கும் வழி செய்து கொண்டார். அதே சமயத்தில் கருண் பற்றிப் பேசவே முடியாதபடி, உங்கள் வாயையும் அடைத்து விட்டாராக்கும். சரியான வில்லன் என்று. சொல்லுங்கள்!'' என்று உதட்டைப் பிதுக்கினாள், வசு.

vidiyalai thedum poobalam, ramanichandran novels, ramanichandran novels download, ramanichandran novels free download pdf, ramanichandran novels free download pdf list
Vidiyalai Thedum Poobalam Ramanichandran Tamil Novels PDF


"சிரித்துச் சிரித்து, அவன் பேசுவதைக் கேட்டால், இப்படிச் சொல்ல மாட்டாய்''
"ஹி கேன் ஸ்மைல் , அன்ட் ஸ்மைல் , யெட் பி எ வில்லன்'' என்று. ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். அது மாதிரி ஆள் போலிருக்கிறது.''

'ஆனால், தனா பேசும் போதும், நமக்காகவே, நம் நல்லதற்காகவே சொல்லுகிற மாதிரி இருக்கும். நமக்காக உருகுவது போலத்தான் தோன்றும்!''
"எல்லாம் நடிப்பு. சித்தப்பா . ஏன் இவ்வளவு நாளுமே. இந்த டிஸ்பென்சரியின் தேவை, உங்களுக்கு இருக்கத்தானே. செய்தது? நீங்களும், அது பற்றிப் பேசாமலே. இருந்திருக்க மாட்டீர்கள். இப்போது திடீ ரென்று இதைச் செய்து தருவானேன் ? இருக்கட்டும். இவர் இந்த வழியில் போனால், நாம் இன்னொரு வழியில், போவோம்.

Thanks For Downloading,,,

In this article Ramanichandran Novels Free Download PDF, all the books are already available in the internet. We collected it and make it single post. If you have any copyright issue just mail us. If there is any broken link inform us to rectify that. Thanks for visiting our website.